1761
வானங் கொடுப்பீர் திருவொற்றி 

வாழ்வீ ரன்று வந்தீரென் 
மானங் கெடுத்தீ ரென்றேன்முன் 

வனத்தார் விடுத்தா ரென்றார்நீர் 
ஊனந் தடுக்கு மிறையென்றே 

னுலவா தடுக்கு மென்றார்மால் 
ஏனம் புடைத்தீ ரணையென்பீ 

ரென்றே னகலா ரென்றாரே    
1762
இருமை யளவும் பொழிலொற்றி 

யிடத்தீர் முனிவ ரிடரறநீர் 
பெருமை நடத்தீ ரென்றேனென் 

பிள்ளை நடத்தி னானென்றார் 
தரும மலவிவ் விடையென்றேன் 

றரும விடையு முண்டென்றார் 
கரும மெவன்யான் செயவென்றேன் 

கருதாண் பாலன் றென்றாரே    
1763
ஒசிய விடுகு மிடையாரை 

யொற்றி யிருந்தே வுருக்குகின்ற 
வசியர் மிகநீ ரென்றேனென் 

மகனே யென்றார் வளர்காமப் 
பசிய துடையே னென்றேனுட் 

பணியல் குலுமப் படியென்றார் 
நிசிய மிடற்றீ ராமென்றேன் 

நீகண் டதுவே யென்றாரே    
1764
கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் 

காம மளித்தீர் களித்தணையீர் 
மலையா ளுமது மனைவியென்றேன் 

மலைவா ளுனைநான் மருவினென்றார் 
அலையாண் மற்றை யவளென்றே 

னலைவா ளவளு மறியென்றார் 
நிலையாண் மையினீ ராவென்றே 

னீயா வென்று நின்றாரே    
1765
சீலம் படைத்தீர் திருவொற்றித் 

தியாக ரேநீர் திண்மைமிகுஞ் 
சூலம் படைத்தீ ரென்னென்றேன் 

றொல்லை யுலக முணவென்றார் 
ஆலம் படுத்த களத்தீரென் 

றறைந்தே னவளிவ் வானென்றார் 
சாலம் பெடுத்தீ ருமையென்றேன்

றார மிரண்டா மென்றாரே