1876
உள்ளத் தனையே போலன்ப 

ருவக்குந் திருவா ழொற்றியுளீர் 
கள்ளத் தவர்போ லிவணிற்குங் 

கரும மென்னீ ரின்றென்றேன் 
மௌ;ளக் கரவு செயவோநாம் 

வேட மெடுத்தோ நின்சொனினை 
யௌ;ளப் புரிந்த தென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1877
அச்சை யடுக்குந் திருவொற்றி 

யவர்க்கோர் பிச்சை கொடுமென்றேன் 
விச்சை யடுக்கும் படிநம்பான் 

மேவினோர்க்கிவ் வகில நடைப் 
பிச்சை யெடுப்பே மலதுன்போற் 

பிச்சை கொடுப்பே மலவென்றே 
யிச்சை யெடுப்பா யுரைக்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1878
அள்ளற் பழனத் திருவொற்றி 

யழக ரிவர்தம் முகநோக்கி 
வெள்ளச் சடையீ ருள்ளத்தே 

விருப்பே துரைத்தாற் றருவலென்றேன் 
கொள்ளக் கிடையா வலர்குமுதங் 

கொண்ட வமுதங் கொணர்ந்தின்னு 
மௌ;ளத் தனைதா வென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1879
விஞ்சு நெறியீ ரொற்றியுளீர் 

வியந்தீர் வியப்பென் னிவணென்றேன் 
கஞ்ச மிரண்டு நமையங்கே 

கண்டு குவிந்த விரிந்திங்கே 
வஞ்ச விருதா மரைமுகையை 

மறைக்கின் றனநின் பால்வியந்தா 
மெஞ்ச லறநா மென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1880
அளியா ரொற்றி யுடையாருக் 

கன்ன நிரம்ப விடுமென்றே 
னளியார் குழலாய் பிடியன்ன 

மளித்தாற் போது மாங்கதுநின் 
னொளியார் சிலம்பு சூழ்கமலத் 

துளதாற் கடகஞ் சூழ்கமலத் 
தெளியார்க் கிடுநீ யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ