1901
கற்றைச் சடையீர் திருவொற்றிக் 

காவ லுடையீ ரீங்கடைந்தீ 
ரிற்றைப் பகலே நன்றென்றே 

னிற்றை யிரவே நன்றெமக்குப் 
பொற்றைத் தனத்தாய் கையமுதம் 

பொழியா தலர்வாய்ப் புத்தமுத 
மிற்றைக் களித்தா யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1902
கற்றீ ரொற்றீர் முன்பொருவான் 

காட்டிற் கவர்ந்தோர் நாட்டில்வளை 
விற்றீ ரின்றென் வளைகொண்டீர் 

விற்கத் துணிந்தீ ரோவென்றேன் 
மற்றீர்ங் குழலாய் நீயெம்மோர் 

மனையின் வளையைக் கவர்ந்துகளத் 
திற்றீ தணிந்தா யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1903
உடுக்கும் புகழா ரொற்றியுளா 

ருடைதா வென்றார் திகையெட்டு 
முடுக்கும் பெரியீ ரெதுகண்டோ 

வுரைத்தீ ரென்றேன் றிகைமுழுது 
முடுக்கும் பெரிய வரைச்சிறிய 

வொருமுன் றானை யான்மூடி 
யெடுக்குந் திறங்கண் டென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1904
காவா யொற்றிப் பதியுடையீர் 

கல்லா னைக்குக் கரும்பன்று 
தேவாய் மதுரை யிடத்தளித்த 

சித்த ரலவோ நீரென்றேன் 
பாவா யிருகல் லானைக்குப் 

பரிவிற் கரும்பிங் கிரண்டொருநீ 
யீவா யிதுசித் தென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1905
ஊட்டுந் திருவா ழொற்றியுளீ 

ருயிரை யுடலாஞ் செப்பிடைவைத் 
தாட்டுந் திறத்தீர் நீரென்றே 

னணங்கே யிருசெப் பிடையாட்டுந் 
தீட்டும் புகழன் றியுமுலகைச் 

சிறிதோர் செப்பி லாட்டுகின்றா 
யீட்டுந் திறத்தா யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ