1931
கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் 

குறித்தீர் வருதற் கஞ்சுவல்யா 
னொன்றப் பெருங்கோ ளென்மீது 

முரைப்பா ருண்டென் றுணர்ந்தென்றேன் 
நன்றப் படியேற் கோளிலையா 

நகரு முடையே நங்காய்நீ 
யின்றச் சுறலென் னென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1932
புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர் 

புலியூ ரெனிலெம் போல்வார்க்கு 
முரியும் புலித்தோ லுடையீர்போ 

லுறுதற் கியலு மோவென்றேன் 
றிரியும் புலியூ ரன்றுநின் போற் 

றெரிவை யரைக்கண் டிடிற்பயந்தே 
யிரியும் புலியூ ரென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1933
தெவ்வூர் பொடிக்குஞ் சிறுநகையித் 

தேவர் தமைநா னீரிருத்த 
லெவ்வூ ரென்றே னகைத்தணங்கே 

யேமூர் நாலூ ரென்றார்பின் 
னவ்வூர்த் தொகையி னிருத்தலரி 

தாமென் றேன்மற் றதிலொவ்வூ 
ரிவ்வூ ரெடுத்தா யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1934
மணங்கொ ளிதழிச் சடையீர்நீர் 

வாழும் பதியா தென்றேனின் 
குணங்கொண் மொழிகேட் டோ ரளவு 

குறைந்த குயிலாம் பதியென்றா 
ரணங்கின் மறையூ ராமென்றே 

னஃதன் றருளோத் தூரிஃது 
மிணங்க வுடையே மென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1935
ஆற்றுச் சடையா ரிவர்பலியென் 

றடைந்தார் நுமதூ ரியாதென்றேன் 
சோற்றுத் துறையென் றார்நுமக்குச் 

சோற்றுக் கருப்பேன் சொலுமென்றேன் 
றோற்றுத் திரிவே மன்றுநின்போற் 

சொல்லுங் கருப்பென் றுலகியம்ப 
வேற்றுத் திரியே மென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ