1936
ஓங்குஞ் சடையீர் நெல்வாயி 

லுடையே மென்றீ ருடையீரேற் 
றாங்கும் புகழ்நும் மிடைச்சிறுமை 

சார்ந்த தெவனீர் சாற்றுமென்றே 
னேங்கும் படிநும் மிடைச்சிறுமை 

யெய்திற் றலதீண் டெமக்கின்றா 
லீங்குங் காண்டி ரென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
டீயஉம


--------------------------------------------------------------------------------


 கண் நிறைந்த கணவன்
திருவொற்றியூர் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1937
மைய லழகீ ரூரொற்றி 

வைத்தீ ருளவோ மனையென்றேன் 
கையி னிறைந்த தனத்தினுந்தங் 

கண்ணி னிறைந்த கணவனையே 
மெய்யின் விழைவா ரொருமனையோ 

விளம்பின் மனையும் மிகப்பலவாம் 
எய்யி லிடையா யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடி
1938
காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள் 
சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே 
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம் 
நாராய ணாய நமவாம னாய நமகேச வாய நமவே   
டீயஉம

--------------------------------------------------------------------------------


 இராமநாமப் பதிகம் () 
() கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1939
திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச் 

செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத் 
தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித் 

தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே 
இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத் 

தென்அரசே என்அமுதே என்தா யேநின் 
மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ 

மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே    
1940
கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங் 

கடத்ததடங் கடலேஎன் கருத்தே ஞான 
மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர் 

மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர் 
தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத் 

தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள 
நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன் 

நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே