1951
மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி 
கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி 
ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி 
வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி    
1952
இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே 
களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி 
துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி 
விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி    
1953
அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி 
பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி 
வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி 
வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 இரேணுகை தோத்திரம் 
சென்னை ஏழுகிணறு() 
() அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக் கிணங்க அருளிச் செய்தது 

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1954
சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச் 

செல்வமும் கல்வியும் பொறையும் 
பார்வளர் திறனும் பயன்வளர் பரிசும் 

பத்தியும் எனக்கருள் பரிந்தே 
வார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய் 

மணிவளர் அணிமலர் முகத்தாய் 
ஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத் 

திரேணுகை எனும்ஒரு திருவே    
1955
உவந்தொரு காசும் உதவிடாக் கொடிய 

உலுத்தர்தம் கடைதொறும்ஓடி 
அவந்தனில் அலையா வகைஎனக் குன்தன் 

அகமலர்ந் தருளுதல் வேண்டும் 
நவந்தரு மதிய நிவந்தபூங் கொடியே 

நலந்தரு நசைமணிக் கோவை 
இவந்தொளிர் பசுந்தோள் இசைதுலுக் காணத் 

திரேணுகை எனும்ஒரு திருவே