1961
அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால்
எவ்வௌ; விடையூறும் எய்தலிலம் தெவ்வர்தமைக்
கன்றுமத மாமுகமுங் கண்மூன்றுங் கொண்டிருந்த
தொன்றதுநம் முள்ள முறைந்து 
1962
) 

 காப்பு 
 நேரிசை வெண்பா 
 அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால்
எவ்வௌ; விடையூறும் எய்தலிலம் தெவ்வர்தமைக்
கன்றுமத மாமுகமுங் கண்மூன்றுங் கொண்டிருந்த
தொன்றதுநம் முள்ள முறைந்து  
 கலிவெண்பா 
 சொற்பெறுமெய்ஞ் ஞானச் சுயஞ்சோதி யாந்தில்லைச் ()
சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே - நற்சிவையாந் 
தாயி னுலகனைத்துந் தாங்குந் திருப்புலியூர்க்
கோயி லமர்ந்தகுணக் குன்றமே - மாயமிகும் 
வாட்களமுற் றாங்குவிழி மாதர்மய லற்றவர்சூழ்
வேட்களமுற் றோங்கும் விழுப்பொருளே - வாழ்க்கைமனை 
நல்வாயி லெங்கு நவமணிக்குன் றோங்குதிரு
நெல்வாயி னின்றொளிரு நீளொளியே - செல்வாய்த் 
தெழிப்பாலை வேலைத் திரையொலிபோ லார்க்குங் 
கழிப்பாலை யின்பக் களிப்பே விழிப்பாலன் 

கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதிதரு
நல்லூர்ப் பெருமணம்வாழ் நன்னிலையே - சொல்லுந் 
தயேந்திர ருள்ளத் தடம்போ லிலங்கும்
மயேந்திரப் பள்ளியின்ப வாழ்வே - கயேந்திரனைக் 
காயலுறா தன்றுவந்து காத்தோன் புகழ்முல்லை
வாயிலி னோங்கு மணிவிளக்கே - மேய 
பலிக்காவூர் தோறும் பதஞ்சேப்பச் சென்று
கலிக்காமூர் மேவுங் கரும்பே - வலிக்காலில் 
பாய்()க்காடு கின்றவொரு பச்சை முகில்பரவுஞ் 
சாய்க்காடு மேவுந் தடங்கடலே - வாய்க்கமையச் 

சொல்லவ னீச்சரங்கு தோயவும்ப ராம்பெருமைப்
பல்லவ னீச்சரத்தெம் பாவனமே -நல்லவர்கள் 
கண்காட்டு நெற்றிக் கடவுளே யென்றுதொழ
வெண்காட்டின் மேவுகின்ற மெய்ப்பொருளே - தண்காட்டிக் 
கார்காட்டித் தையலர்தங் கண்காட்டிச் சோலைகள்சூழ்
சீர்காட்டுப் பள்ளிச் சிவக்கொழுந்தே - பார்காட் 
டுருகாவூ ரெல்லா மொளிநயக்க வோங்குங்
குருகாவூர் வெள்ளடையெங் கோவே - அருகாத 
கார்()காழி னெஞ்சக் கவுணியர்க்குப் போதமருள்
சீர்காழி ஞானத் திரவியமே - ஓர்காழிப் 

பாலற்கா வன்று பசும்பொற்றா ளங்கொடுத்த
கோலக்கா மேவுங் கொடையாளா - கோலக்கா 
உள்ளிருக்கும் புள்ளிருக்கு மோதும் புகழ்வாய்ந்த
புள்ளிருக்கும் வேளூர்ப் புரிசடையாய் - கள்ளிருக்கும் 
காவின் மருவுங் கனமுந் திசைமணக்கும்
கோவின் மருவுகண்ணார் கோயிலாய் - மாவின் 
இடைமுடியின் றீங்கனியென் றெல்லின் முசுத்தாவும்
கடைமுடியின் மேவுங் கருத்தா - கொடைமுடியா 
நன்றியூ ரென்றிந்த ஞாலமெலாம் வாழ்த்துகின்ற
நின்றியூர் மேவு நிலைமையனே - ஒன்றிக் 

கருப்புன்கூ ருள்ளக் கயவர் நயவாத்
திருப்புன்கூர் மேவுஞ் சிவனே - உருப்பொலிந்தே 
ஈடூரி லாதுயர்ந்த ஏதுவினா லோங்குதிரு
நீடூ ரிலங்கு நிழற்றருவே - பீடுகொண்டு 
மன்னியூ ரெல்லாம் வணங்க வளங்கொண்ட
அன்னியூர் மேவு மதிபதியே - மன்னர்சுக 
வாழ்விக் குடிகளடி மண்பூச லாலென்னும்
வேழ்விக் குடியமர்ந்த வித்தகனே - சூழ்வுற்றோர் 
விண்ணெதிர்கொண் டிந்திரன்போன் மேவிநெடு நாள்வாழப்
பண்ணெதிர்கொள் பாடிப் பரம்பொருளே - நண்ணும் 

வணஞ்சே ரிறைவன் மகிழ்ந்து வணங்கும்
மணஞ்சேரி நீங்கா மகிழ்வே - மணஞ்சேர்ந்துன் 
வாரட்ட கொங்கை மலையா ளொடுங்கொறுக்கை
வீரட்ட மேவும் வியனிறைவே - ஓரட்ட 
திக்குங் கதிநாட்டிச் சீர்கொள்திருத் தொண்டருளம்
ஒக்குங் கருப்பறிய லூரரசே - மிக்கதிரு 
மாவளருஞ் செந்தா மரைவளருஞ் செய்குரக்குக்
காவளரு மின்பக் கனசுகமே - தாவுமயல் 
காழ்கொ ளிருமனத்துக் காரிருணீத் தோர்மருவும்
வாழ்கொளி புத்தூர்() மணிச்சுடரே - தாழ்வகற்ற 

நண்ணிப் படிக்கரையர் நாடோ றும் வாழ்த்துகின்ற
மண்ணிப் படிக்கரைவாழ் மங்கலமே - விண்ணினிடை 
வாமாம் புலியூர் மலர்ச்சோலை சூழ்ந்திலங்கும்
ஓமாம் புலியூர்வாழ் உத்தமமே - நேமார்ந்த 
வானாட்டு முள்ளூர் மருவுகின்றோர் போற்றுதிருக்
கானாட்டு முள்ளூர்க் கலைக்கடலே - மேனாட்டும் 
தேரையூர்ச் செங்கதிர்போற் செம்மணிக ணின்றிலங்கும்
நாரையூர் மேவு நடுநிலையே - பாரில் 
உடம்பூர் பவத்தை யொழித்தருளும் மேன்மைக்
கடம்பூர்வாழ் என்னிரண்டு கண்ணே - தடம்பொழிலில் 

கொந்தணவுங் கார்க்குழலார் கோலமயிற் போலுலவும்
பந்தண நல்லூர்ப் பசுபதியே - கந்தமலர் 
அஞ்சனூர்() செய்ததவத் தாலப் பெயர்கொண்ட
கஞ்சனூர் வாழுமென்றன் கண்மணியே - அஞ்சுகங்கள் 
நாடிக்கா வுள்ளே நமச்சிவா யம்புகலும்
கோடிக்கா மேவுங் குளிர்மதியே - ஓடிக் 
கருமங்க லக்குடியிற் காண்டுமென வோதும்
திருமங்க லக்குடியில் தேனே - தரும 
மனந்தாள் மலரை மருவுவிப்போர் வாழும்
பனந்தாளிற் பாலுகந்த பாகே - தினந்தாளிற் 

சூழ்திருவாய்ப் பாடியங்கு சூழ்கினுமா மென்றுலகர்
வாழ்திருவாய்ப் பாடிஇன்ப வாரிதியே - ஏழ்புவிக்குள் 
வாய்ஞ்ஞலூ ரீதே மருவவென வானவர்சேர்
சேய்ஞ்ஞலூர் இன்பச் செழுங்கனியே - வாஞ்சையுறும் 
சீவன் குடியுறவிச் சீர்நகரொன் றேயெனுஞ்சீர்த்
தேவன் குடிமகிழ்ந்த தௌ;ளமுதே - ஓவில் 
மயலூர் மனம்போல் வயலிற் கயலூர்
வியலூர் சிவானந்த வெற்பே - அயலாம்பல் 
மட்டையூர் வண்டினங்கள் வாய்ந்து விருந்துகொளும்
கொட்டையூ ருட்கிளருங் கோமளமே - இட்டமுடன் 

என்னம்ப ரென்னம்ப ரென்றயன்மால் வாதுகொள
இன்னம்பர் மேவிநின்ற என்னுறவே - முன்னம்பு 
மாற்கும் புறம்பியலா வாய்மையருள் செய்யவுளம்
ஏற்கும் புறம்பியம்வாழ் என்னுயிரே -மாற்கருவின் 
கண்விசைய மங்கைக் கனிபோற் பெறத்தொண்டர்
எண்விசைய மங்கையில்வாழ் என்குருவே - மண்ணுலகில் 
வைகாவூர் நம்பொருட்டான் வைகியதென் றன்பர்தொழும்
வைகாவூர் மேவியவென் வாழ்முதலே - உய்யும்வகைக் 
காத்தும் படைத்துங் கலைத்துநிற்போர் நாடோ றும்
ஏத்துங் குரங்காட்டின்() என்னட்பே - மாத்தழைத்த 

வண்பழனத் தின்குவிவெண் வாயிற்றேன் வாக்கியிட
உண்பழனத் தென்றன் உயிர்க்குயிரே -பண்பகன்ற 
வெய்யாற்றி னின்றவரை மெய்யாற்றி னேற்றுதிரு
ஐயாற்றின் மேவியஎன் னாதரவே - பொய்யாற்றி 
மெய்த்தான நின்றோர் வெளித்தான மேவுதிரு
நெய்த்தானத் துள்ளமர்ந்த நித்தியமே - மைத்த 
கரும்புலியூர்க் காளையொடுங் கண்ணோட்டங் கொள்ளும்
பெரும்புலியூர் வாழ்கருணைப் பேறே - விரும்பிநிதம் 
பொன்னுங்() கௌத்துவமும் பூண்டோ ன் புகழ்ந்தருளை
மன்னு மழபாடி வச்சிரமே - துன்னுகின்ற 

நாய்க்குங் கடையேன் நவைதீர நற்கருணை
வாய்க்கும் பழுவூர் மரகதமே - தேய்க்களங்கில்() 
வானூர் மதிபோன் மணியாற் குமுதமலர்
கானூ ருயர்தங்கக் கட்டியே - நானூறு 
கோலந் துறை() கொண்ட கோவையருள் கோவைமகிழ் 
ஆலந் துறை()யின் அணிமுத்தே - நீலங்கொள் 
தேந்துறையி லன்னமகிழ் சேக்கை பலநிலவு
மாந்துறைவாழ் மாணிக்க மாமலையே - ஏந்தறிவாம் 
நூற்றுறையில் நின்றவர்கள் நோக்கிமகிழ் வெய்துதிருப்
பாற்றுறையில் நின்ற பரஞ்சுடரே - நாற்றிசையுந் 

தேனைக்கா வுள்மலர்கள் தேங்கடலென் றாக்குவிக்கும்
ஆனைக்கா மேவியமர் அற்புதமே - மானைப்போல் 
மைஞ்ஞீல வாட்கண் மலராள் மருவுதிருப்
பைஞ்ஞீலி மேவும் பரம்பரமே - எஞ்ஞான்றும் 
ஏச்சிரா மங்கலத்தோ டின்பந் தரும்பாச்சி
லாச்சிரா மஞ்சேர் அருள்நிலையே - நீச்சறியா 
தாங்கோய் மலைப்பிறவி யார்கலிக்கோர் வார்கலமாம்
ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே - ஓங்காது 
நாட்போக்கி நிற்கு நவையுடையார் நாடரிதாம்()
வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே - கோட்போக்கி 

நில்லுங் கடம்ப நெறிபோ லெனப்பூவை
சொல்லுங் கடம்பந் துறைநிறைவே - மல்லலொடு 
வாழும் பராய்த்துறைவான் மன்னவரு மன்னவருஞ்
சூழும் பராய்த்துறைவாழ் தோன்றலே - கூழும்பல் 
நற்குடியு மோங்கி நலம்பெருகு மேன்மைதிருக்
கற்குடியிற் சந்தான கற்பகமே - சிற்சுகத்தார் 
பிற்சநந மில்லாப் பெருமை தருமுறையூர்ச்
சற்சனர்சேர் மூக்கீச் சரத்தணியே - மற்செய் 
அராப்பள்ளி மேவு மவனின்று வாழ்த்தும்
சிராப்பள்ளி ஞானத் தெளிவே - இராப்பள்ளி 

நின்றெழன்மெய் யன்றெனவே நேர்ந்துலகு வாழ்த்துகின்ற
நன்றெறும்பி யூரிலங்கு நன்னெறியே - துன்றுகயற் 
கண்ணார் நெடுங்களத்தைக் கட்டழித்த மெய்த்தவர்சூழ்
தண்ணார் நெடுங்களமெய்த் தாரகமே - எண்ணார் 
தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டோ ர் சூழுந்
திருக்காட்டுப் பள்ளியில்வாழ் தேவே - மருக்காட்டு 
நீலம் பொழிற்குள் நிறைதடங்கட் கேர்காட்டும்
ஆலம் பொழிற்சிவயோ கப்பயனே - சீலநிறை 
வாந்துருத்தி கொண்டுள் ளனலெழுப்பு வோர்புகழும்
பூந்துருத்தி மேவுசிவ புண்ணியமே - காந்தருவத் 

தண்டியூர் போற்றுந் தகைகாசிக் கட்செய்து
கண்டியூர் வாழுங் களைகண்ணே - கொண்டியல்பின் 
வேற்றுத் துறையுள் விரவா தவர்புகழும்
சோற்றுத் துறையுட் சுகவளமே - ஆற்றலிலாத் 
தீதிக் குடியென்று செப்பப் படார்மருவும்
வேதிக் குடி() யின்ப வெள்ளமே - கோதியலும் 
வன்குடித் திட்டை மருவார் மருவுதிருத்
தென்குடித் திட்டைச் சிவபதமே - நன்குடைய 
உள்ளமங்கை மார்மே லுறுத்தா தவர்புகழும்
புள்ளமங்கை வாழ்பரம போகமே - கள்ளமிலஞ் 

சக்கரப் பள்ளிதனிற் றாம்பயின்ற மைந்தர்கள்சூழ்
சக்கரப் பள்ளிதனில் தண்ணளியே-மிக்க 
அருகாவூர் சூழ்ந்தே அழகுபெற வோங்கும்
கருகாவூர் இன்பக் கதியே-முருகார்ந்த 
சோலைத் துறையிற் சுகஞ்சிவநூல் வாசிக்கும்
பாலைத் துறையிற் பரிமளமே-சீலத்தர் 
சொல்நூ ரடியப்பர் தூயமுடி மேல்வைத்த
நல்லூ ரமர்ந்தநடு நாயகமே-மல்லார்ந்த 
மாவூ ரிரவியின்பொன் வையமள வுஞ்சிகரி
ஆவூரி லுற்றவெங்கள் ஆண்தகையே-ஓவாது 

சித்திமுற்ற யோகஞ் செழும்பொழிலிற் பூவைசெயும்
சத்திமுற்ற மேவுஞ் சதாசிவமே-பத்தியுற்றோர் 
முட்டீச் சுரத்தின் முயலா வகையருளும்
பட்டீச் சரத்தெம் பராபரமே-துட்டமயல் 
தீங்குவிழை யார்தமைவான் சென்றமரச் செய்விக்க
ஓங்குபழை யாறையிலென் னுள்ளுவப்பே-பாங்குபெற 
ஆர்ந்த வடவிலையான் அன்னத்தான் போற்றிநிதம்
சார்ந்த வடதளிவாழ் தற்பரமே-சேர்ந்த 
மலஞ்சுழி கின்ற மனத்தர்க் கரிதாம்
வலஞ்சுழி வாழ்பொன் மலையே-நிலஞ்சுழியா 

தோணத்தில் வந்தோ னுடன்றுதித்து வாழ்கும்ப
கோணத்தில் தெய்வக் குலக்கொழுந்தே-மாணுற்றோர் 
காழ்க்கோட்ட நீங்கக் கருதுங் குடமூக்கிற்
கீழ்க்கோட்ட மேவுமன்பர் கேண்மையே-வாழ்க்கோட்டத் 
தேரோண மட்டுந் திகழ்குடந்தை மட்டுமின்றிக்
காரோண மட்டுங் கமழ்மலரே-சீரோங்கும் 
யோகீச் சுரர்நின் றுவந்து வணங்குதிரு
நாகீச் சுரமோங்கு நங்கனிவே-ஓகையுளம் 
தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண் சூழ்பழியைப்
போக்கும் இடைமருதிற் பூரணமே-நீக்கமிலா 

நன்குரங் காணு நடையோ ரடைகின்ற
தென்குரங் காடுதுறைச் செம்மலே-புன்குரம்பை 
ஏலக் குடிபுகுந்த எம்மனோர்க் குண்மைதரு
நீலக் குடியிலங்கு நிட்களமே-ஞாலத்து 
நீடக்கோர் நாளும் நினைந்தேத் திடும்வைகல்
மாடக்கோ யிற்குண் மதுரமே-பாடச்சீர் 
வல்ல தமிழ்ப்புலவர் மன்னி வணங்குதிரு
நல்லமகிழ் இன்ப நவவடிவே-இல்லமயல் 
ஆழம்பங் கென்ன வறிந்தோர் செறிந்தேத்தும்
கோழம்பம் வாழ்கருணைக் கொண்டலே-வீழும்பொய் 

தீரா வடுவுடையார் சேர்தற் கருந்தெய்வச்
சீரா வடுதுறையெஞ் செல்வமே-பேராக் 
கருத்திருத்தி யேத்துங் கருத்தர்க் கருள்செய்
திருத்துருத்தி இன்பச் செழிப்பே-வருத்துமயல் 
நாளு மெழுந்தூர் நவையறுக்கு மன்பருள்ளம்
நீளும் அழுந்தூர் நிறைதடமே-வேளிமையோர் 
வாயூரத் தேமா மலர்() சொரிந்து வாழ்த்துகின்ற 
மாயூரத் தன்பர் மனோரதமே- தேயா 
வளநகரென் றெவ்வுலகும் வாழ்த்தப் படுஞ்சீர்
விளநகர்வா ழெங்கண் விருந்தே- இளமைச் 

செறியலூர் கூந்தல் திருவனையா ராடும்
பறியலூர் வாழ்மெய்ப் பரமே- நெறிகொண்டே 
அன்பள்ளி யோங்கு மறிவுடையோர் வாழ்த்துஞ்செம்
பொன்பள்ளி வாழ்ஞான போதமே- இன்புள்ளித் 
தௌ;ளியார் போற்றித் திகழுந் திருநன்னிப்
பள்ளியார்ந் தோங்கும் பரசிவமே - எள்ளுறுநோய் 
ஏய வலம்புரத்தை யெண்ணாம லெண்ணுகின்றோர்
மேய வலம்புரத்து மேதகவே - தூயகொடி 
அங்காடு கோபுரம்வா னாற்றாடு கின்றதலைச்
சங்காடு மேவுஞ் சயம்புவே - பொங்குமிருட் 

கூறுதிரு வாக்கூர் கொடுப்பனபோற் சூழ்ந்துமதில்
வீறுதிரு வாக்கூர் விளக்கமே - மாறகற்றி 
நன்கடையூர் பற்பலவு நன்றிமற வாதேத்தும்
தென்கடையூர்() ஆனந்தத் தேறலே - வன்மையிலாச் 
சொற்கடவி மேலோர் துதித்தலொழி யாதோங்கு
நற்கடவூர் வீரட்ட நாயகனே - வற்கடத்தும் 
வாட்டக் குடிசற்றும் வாய்ப்பதே யில்லையெனும்
வேட்டக் குடிமேவு மேலவனே - நாட்டமுற்ற 
வாக்குந் தெளிச்சேரி மாதவத்தர்க் கின்பநலம்
ஆக்குந் தெளிச்சேரி அங்கணனே - நீக்கும் 

கரும புரத்திற் கலவா தருள்செய்
தரும புரஞ்செய் தவமே - இருமையினும் 
எள்ளாற்றின் மேவாத ஏற்புடையோர் சூழ்ந்திறைஞ்சு
நள்ளாற்றின் மேவியஎன் நற்றுணையே - தௌ;ளாற்றின் 
நீட்டாறு கொண்டரம்பை நின்று கவின்காட்டும்
கோட்டாறு மேவுங் குளிர்துறையே - கூட்டாக் 
கருவம்பர் தம்மைக் கலவாத மேன்மைத்
திருவம்பர் ஞானத் திரட்டே - ஒருவந்தர் 
மாகாளங் கொள்ள மதனைத் துரத்துகின்ற
மாகாளாத் தன்பர் மனோலயமே - யோகாளக் 

காயச்சூர் விட்டுக் கதிசேர வேட்டவர்சூழ்
மீயச்சூர் தண்ணென்னும் வெண்ணெருப்பே - மாயக் 
களங்கோயில் நெஞ்சக் கயவர் மருவா
இளங்கோயின் ஞான இனிப்பே - வளங்கோள 
நாடுந் திலத நயப்புலவர் நாடோ றும்
பாடுந் திலதைப் பதிநிதியே - ஆடுமயில் 
காம்புரங்கொள் தோளியர்பொற் காவிற் பயில்கின்ற
பாம்புரங்கொள் உண்மைப் பரம்பொருளே - ஆம்புவனம் 
துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை
மன்னுஞ் சிறுகுடிஆன் மார்த்தமே - முன்னரசும் 

காழி மிழலையருங் கண்டுதொழக் காசளித்த
வீழி மிழலை விராட்டுருவே - ஊழிதொறும் 
மன்னியூர் மால்விடையாய் வானவா வென்றுதொழ
வன்னியூர் வாழு மணிகண்டா - இந்நிமிடம் 
சிந்துங் கருவலியின் திண்மையென்று தேர்ந்தவர்கள்
முந்துங் கருவிலிவாழ் முக்கண்ணா - மந்தணத்தைக் 
காணு மருந்துறையிக் காமர்தல மென்றெவரும்
பேணு பெருந்துறையிற் பெம்மானே - ஏணுடன்கா 
ஈட்டும் பெருநறையா றென்ன வயலோடி
நாட்டும் பெருநறையூர் நம்பனே - காட்டும் 

பரிசிற் கரைப்புற்றோர் பாங்குபெற வோங்கும்
அரிசிற் கரைப்புத்தூ() ரானே - தரிசனத்தெக் 
காலுஞ் சிவபுரத்தைக் காதலித்தோர் தங்கள்துதி
ஏலுஞ் சிவபுரத்தி லெம்மானே - மாலுங்கொள் 
வெப்புங் கலையநல்லோர் மென்மதுரச் சொன்மாலை
செப்புங் கலயநல்லூர்ச் சின்மயனே - செப்பமுடன் 
ஓங்குந் திருத்தொண்டர் உள்குளிர நல்லருளால்
தாங்குங் கருக்குடிவாழ் சங்கரனே - ஆங்ககனந் 
தாஞ்சியத்தை() வேங்கைத் தலையாற் றடுக்கின்ற
வாஞ்சியத்தின் மேவு மறையோனே - ஆஞ்சியிலா 

திந்நிலத்தும் வானாதி யெந்நிலத்து மோங்குபெரு
நன்னிலத்து வாழ்ஞான நாடகனே - மன்னுமலர் 
வண்டீச் சுரம்பாடி வார்மதுவுண் டுள்களிக்குங்
கொண்டீச் சுரத்தமர்ந்த கோமானே - கண்டீச 
நண்பனையூ ரன்புகழும் நம்பவென உம்பர்தொழத்
தண்பனையூர் மேவுஞ் சடாதரனே - பண்புடனே 
எற்குடியா னங்கொண் டிருக்க மகிழ்ந்தளித்த
விற்குடியின் வீரட்ட மேயவனே - சொற்கொடிய 
வன்புகலா நெஞ்சின் மருவும் ஒருதகைமைத்
தென்புகலூர் வாழ்மகா தேவனே - இன்பமறை 

அர்த்தமா நீக்கரிய வாதார மாகிநின்ற
வர்த்தமா நேச்சரத்து வாய்ந்தவனே - மித்தையுற்ற 
காமனதீ சங்கெடவே கண்பார்த் தருள்செய்த
ராமனதீ சம்பெறுநி ராமயனே - தோமுண் 
மயற்றூர் பறித்த மனத்தில் விளைந்த
பயற்றூர் திசையம் பரனே - இயற்றுஞ்சீர் 
ஆச்சிரமே வுஞ்செங்காட் டங்குடியி னங்கணப
தீச்சரம்வா ழுஞ்சந்த்ர சேகரனே - ஏச்சகல 
விண்மருவி னோனை விடநீக்க நல்லருள்செய்
வண்மருகல் மாணிக்க வண்ணனே - திண்மைகொண்ட 

மாத்தமங்கை யுள்ளம் மருவிப் பிரியாத
சாத்தமங்கைக் கங்கைச் சடாமுடியோய் - தூத்தகைய 
பாகைக்கா ரென்னும் பணிமொழியார் வாழ்த்தோவா
நாகைக்கா ரோணம் நயந்தோனே - ஓகையற 
விக்கல் வருங்கால் விடாய்தீர்த் துலகிடைநீ
சிக்கலெனுஞ் சிக்கல் திறலோனே - மிக்கமினார் 
வாளூர் தடங்கண் வயல்காட்டி யோங்குங்கீழ்
வேளூரிற் செங்கண் விடையோனே - நீளுவகைப் 
பாவூ ரிசையிற் பயன்சுவையிற் பாங்குடைய
தேவூர் வளர்தேவ தேவனே - பூவினிடை 

இக்கூடன் மைந்த வினிக்கூட லென்றுபள்ளி
முக்கூடன் மேவியமர் முன்னவனே - தக்கநெடுந் 
தேரூ ரணிவீதிச் சீரூர் மணிமாட
ஆரூரி லெங்கள் அருமருந்தே - நீரூர்ந்த 
காரூர் பொழிலுங் கனியீந் திளைப்பகற்றும்
ஆரூ ரரனெறிவே ளாண்மையே - ஏரார்ந்த 
மண்மண் டலிகர் மருவுமா ரூர்ப்பரவை
உண்மண் டலி() எம் உடைமையே - திண்மைக் 
களமர் மகிழக் கடைசியர் பாடும் 
விளமர் கொளுமெம் விருப்பே - வளமை 

எருக்கரவீ ரஞ்சே ரெழில்வேணி கொண்டு
திருக்கரவீ ரஞ்சேர் சிறப்பே - உருக்க 
வருவேளூர் மாவெல்லா மாவேறுஞ் சோலைப்
பெருவேளூர் இன்பப் பெருக்கே - கருமை 
மிலையாலங் காட்டு மிடற்றாயென் றேத்தும்
தலையாலங் காட்டுத் தகவே - நிலைகொள் 
தடவாயில் வெண்மணிகள் சங்கங்க ளீனும்
குடவாயில் அன்பர் குறிப்பே - மடவாட்கோர் 
கூறை() யுவந்தளித்த கோவேயென் றன்பர்தொழச்
சேறை யுவந்திருந்த சிற்பரமே - வேறுபடாப் 

பாலூர் நிலவிற் பணிலங்கள் தண்கதிர்செய்
நாலூரில் அன்பர்பெறு நன்னயமே - மேலூரும் 
நோய்க்கரையுட் செய்யாத நோன்மையோர் சூழ்ந்தகடு
வாய்க்கரையுண் மேவுகின்ற வண்மையே - வாய்த்த 
பெரும்பூகந் தெங்கிற் பிறங்க வளங்கொள்ளும்
இரும்பூளை மேவி யிருந்தோய் - விரும்பும் 
விரதப் பெரும்பாழி விண்ணவர்க ளேத்தும்
அரதைப் பெரும்பாழி ஆர்ந்தோய் - சரதத்தால் 
ஏதும் அவணிவணென் றெண்ணா தவரிறைஞ்சி
ஓதும் அவளிவணல் லூருடையோய் - கோதகன்ற 

நீட்டுஞ் சுருதி நியமத்தோர்க் கின்னருளை
நீட்டும் பரிதி நியமத்தோய் - காட்டியநந் 
தேவனூ ரென்று திசைமுகன்மால் வாழ்த்துகின்ற
பூவனூர் மேவும் புகழுடையோய் - பூவலகாம் 
ஈங்கும்பா தாளமுத லெவ்வுலகு மெஞ்ஞான்றுந்
தாங்கும்பா தாளேச் சரத்தமர்ந்தோய் - ஓங்குபுத்தி 
மான்களரி லோட்டி மகிழ்வோ டிருந்தேத்தும்
வான்களரில் வாழு மறைமுடிபே - மேன்மைதரும் 
முற்றேமம் வாய்ந்த முனிவர் தினம்பரவும்
சிற்றேமம் வாய்ந்த செழுங்கதிரே - கற்றவர்கள் 

எங்குமுசாத் தான மிருங்கழக மன்றமுதல்
தங்குமுசாத் தானத் தனிமுதலே - பொங்குபவ 
வல்லலிடும் பாவநத்த மட்டொளிசெய் கின்றதிரு
மல்லலிடும் பாவனத்து மாட்சிமையே - தொல்லைப் 
படிக்குள் நோவாத பண்புடையோர் வாழ்த்தும்
கடிக்குளத் தன்பர் களிப்பே - கடிக்குளத்தின் 
வண்டலைக்கத் தேனலரின் வார்ந்தோர் தடமாக்கும்
தண்டலைக்குள் நீணெறிச்சிந் தாமணியே - கொண்டலென 
மன்கோட்டூர் சோலை வளர்கோட்டூர் தண்பழனத்
தென்கோட்டூர் தேவ சிகாமணியே - தென்கூட்டிப் 

போய்வண் டுறைதடமும் பூம்பொழிலுஞ் சூழ்ந்தமரர்
ஆய்வெண் டுமறைமாசி லாமணியே - தோய்வுண்ட 
கள்ளம்பூ தாதிநிலை கண்டுணர்வு கொண்டவர்சூழ்
கொள்ளம்பூ தூர்வான் குலமணியே - வெள்ளிடைவான் 
வாம்பே ரெயிற்சூழ்ந்த மாண்பாற் றிருநாமம்
ஆம்பே ரெயிலொப்பி லாமணியே - தாம்பேரா 
வீட்டிலன்ப ரானந்தம் மேவச் செயுங்கொள்ளிக்
காட்டி லமர்ந்தஎன்கண் காட்சியே - நீட்டுமொளி 
ஆங்கூ ரிலைவே லவனா தியர்சூழத்
தேங்கூரில் வாழ்தேவ சிங்கமே - ஓங்குமலை 

வல்லிக்கா தார மணிப்புயவென் றன்பர்தொழ
நெல்லிக்கா வாழ்மெய்ந் நியமமே - எல்அல்கண் 
சேட்டியத் தானே தெரிந்துசுரர் வந்தேத்து
நாட்டியத் தான்குடிவாழ் நல்லினமே - நாட்டுமொரு 
நூறாயி லன்பர்தமை நோக்கி யருள்செய்திருக்
காறாயின் மேலோர் கடைப்பிடியே - வீறாகும் 
இன்றாப்பூர் வந்தொட் டிருந்ததிவ்வூ ரென்னவுயர்
கன்றாப்பூர் பஞ்சாக் கரப்பொருளே - துன்றாசை 
வெய்ய வலிவலத்தை வீட்டியன்பர்க் கின்னருள்செய்
துய்ய வலிவலத்துச் சொன்முடிபே - நையுமன 

மைச்சினத்தை விட்டோ ர் மனத்திற் சுவைகொடுத்துக்
கைச்சினத்தி னுட்கரையாக் கற்கண்டே - நெற்சுமக்க 
ஆளிலையென் றாரூர னார்துதிக்கத் தந்தருளும்
கோளிலியின் அன்பர்குலங் கொள்ளுவப்பே - நீளுலகம் 
காய்மூர்க்க ரேனுங் கருதிற் கதிகொடுக்கும்
வாய்மூர்க் கமைந்த மறைக்கொழுந்தே - நேயமுணத் 
தேடெலியை மூவுலகுந் தேர்ந்துதொழச் செய்தருளும்
ஈடின்மறைக் காட்டிலென்றன் எய்ப்பில்வைப்பே - நாடுமெனை 
நின்னகத்தி யான்பள்ளி நேர்ந்தேனென் றாட்கொண்ட
தென்னகத்தி யான்பள்ளிச் செம்பொன்னே - தொன்னெறியோர் 

நாடிக் குழக நலமருளென் றேத்துகின்ற
கோடிக் குழகரருட் கோலமே - நீடுலகில் 
நாட்டும் புகழீழ நாட்டிற் பவவிருளை()
வாட்டுந் திருக்கோண மாமலையாய் - வேட்டுலகின் 
மூதீச் சரமென்று முன்னோர் வணங்குதிருக்
கேதீச் சரத்திற் கிளர்கின்றோய் - ஓதுகின்றோர் 
பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை()
ஆலவாய்ச் சொக்கழகா னந்தமே - சீலர்தமைக் 
காப்பனூ ரில்லாக் கருணையா லென்றுபுகும்
ஆப்பநூர் மேவுசதா னந்தமே - மாப்புலவர் 

ஞானபரங் குன்றமென நண்ணிமகிழ் கூர்ந்தேத்த
வானபரங் குன்றலின்பா னந்தமே - வானவர்கோன் 
தேமே டகத்தனொடு சீதரனும் வாழ்த்துஞ்சீ
ராமே டகத்தறிவா னந்தமே - பூமீதில் 
நற்றவருங் கற்ற நவசித்த ரும்வாழ்த்தி
உற்றகொடுங் குன்றத்தெம் ஊதியமே - முற்றுகதிர் 
இத்தூர மன்றி யினித்தூர மில்லையெனப்
புத்தூர் வருமடியார் பூரிப்பே - சித்தாய்ந்து 
நாமீச ராகும் நலந்தருமென் றும்பர்தொழும்
ராமீசம்() வாழ்சீவ ரத்தினமே - பூமீது 

நீடானை சூழும் நிலமன்னர் வாழ்த்துதிரு 
வாடானை மேவுகரு ணாகரமே - சேடான 
வானப்பே ராற்றை மதியை முடிசூடுங்
கானப்பேர் ஆனந்தக் காளையே - மோனருளே 
பூவணமும் பூமணமும் போலவ மர்ந்ததிருப்
பூவணத்தில் ஆனந்தப் பொக்கிமே - தீவணத்தில் 
கண்சுழிய லென்று கருணையளித் தென்னுளஞ்சேர்
தண்சுழியல் வாழ்சீவ சாக்pயே - பண்செழிப்பக் 
கற்றாலங் குண்மைக் கதிதருமென் றற்றவர்சூழ்
குற்றாலத் தன்பர் குதுகலிப்பே - பொற்றாம 

நல்வேலி சூழ்ந்து நயன்பெறுமொண் செஞ்சாலி
நெல்வேலி உண்மை நிலயமே - வல்வேலை 
நஞ்சைக் களத்துவைத்த நாதவெனத் தொண்டர்தொழ()
அஞ்சைக் களஞ்சேர் அருவுருவே - நெஞ்சடக்கி 
ஆன்று நிறைந்தோர்க் கருளளிக்கும் புக்கொளியூர்த்()
தோன்றுமவி நாசிச் சுயம்புவே - சான்றவர்கள் 
தம்முருகன் பூணுட் டலம்போல வாழ்கின்ற
எம்முருகன் பூண்டி இருநிதியே - செம்மையுடன் 
அங்குன்றா தோங்கு மணிகொள் கொடிமாடச்
செங்குன்றூர் வாழுஞ்சஞ் சீவியே - தங்குமன 

வஞ்சமாக் கூடல் வரையா தவர்சூழும்
வெஞ்சமாக் கூடல் விரிசுடரே - துஞ்சலெனும் 
இன்ன லகற்ற இலங்குபவா னிக்கூடல்
என்னு நணாவினிடை இன்னிசையே - துன்னியருள் 
வேண்டிக் கொடுமுடியா மேன்மைபெறு மாதவர்சூழ்
பாண்டிக் கொடுமுடியிற் பண்மயமே - தீண்டரிய 
வெங்கருவூர் வஞ்ச வினைதீர்த் தவர்சூழ்ந்த
நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே - தங்களற்றின் 
தீங்கார் பிறதெய்வத் தீங்குழியில்() வீழ்ந்தவரைத்()
தாங்கா வரத்துறையில் தாணுவே - பூங்குழலார் 

வீங்கானை மாடஞ்சேர் விண்ணென் றகல்கடந்தைத்
தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே - நீங்காது 
நீடலை யாற்றூர் நிழன்மணிக்குன் றோங்குதிருக்
கூடலை யாற்றூர்க் குணநிதியே - நாடியவான் 
அம்புலியூர் சோலை யணிவயல்க ளோங்கெருக்கத்
தம்புலியூர் வேத சமரசமே - நம்புவிடை 
ஆங்குந் தினையூர்ந் தருளாயென் றன்பர்தொழு
தோங்குந் தினையூர் உமாபதியே - தீங்குறுமொன் 
()னார்புரத்தை வெண்ணகைத்தீ யாலழித்தா யென்றுதொழச்
()சோபுரத்தின் வாழ்ஞான தீவகமே - வார்கெடிலச் 

சென்னதிகை யோங்கித்() திலதவதி யார்பரவும்
மன்னதிகை வீரட்ட மாதவமே - பன்னரிதாம் 
ஆவலூ ரெங்களுடை ஆரூர னாரூரா
நாவலூர் ஞானியருண் ஞாபகமே - தேவகமாம் 
மன்ற மமர்ந்த வளம்போற் றிகழ்ந்தமுது
குன்ற மமர்ந்தஅருட் கொள்கையே - அன்றகத்தின் 
நல்வெண்ணெ யுண்டொளித்த நாரணன்வந் தேத்துகின்ற
நெல்வெண்ணெய் மேவுசிவ நிட்டையே - சொல்வண்ணம் 
நாவலர் போற்றி நலம்பெறவே யோங்குதிருக்
கோவலூர் வீரட்டங் கொள்பரிசே - ஆவலர்மா 

தேவா இறைவா சிவனே யெனுமுழக்கம்
ஓவா அறையணிநல் லூருயர்வே - தாவாக் 
கடையாற்றி னன்பர்தமைக் கல்லாற்றி னீக்கும்
இடையாற்றின் வாழ்நல் இயல்பே - இடையாது 
சொல்லூரன் றன்னைத் தொழும்புகொளுஞ் சீர்வெண்ணெய்
நல்லூ ரருட்டுறையின் நற்பயனே - மல்லார்ந்து 
மாசுந் துறையூர் மகிபன்முதல் மூவருஞ்சீர்
பேசுந் துறையூர்ப் பிறைசூடீ - நேசமுற 
வேற்றா வடுகூ ரிதயத்தி னார்க்கென்றுந்
தோற்றா வடுகூர்ச் சுயஞ்சுடரே - ஆற்றமயல் 

காணிக் குழிவீழ் கடையர்க்குக் காண்பரிய
மாணிக் குழிவாழ் மகத்துவமே - மாணுற்ற 
பூப்பா திரிகொன்றை புன்னைமுதற் சூழ்ந்திலங்கும்
()ஏர்ப்பா திரிப்புலியூர் ஏந்தலே - சீர்ப்பொலியப் 
பண்டீச் சுரனிப் பதியே விழைந்ததெனும்
முண்டீச் சுரத்தின் முழுமுதலே - பெண்தகையார் 
ஏர்ப்பனங்காட் டூரென் றிருநிலத்தோர் வாழ்த்துகின்ற
சீர்ப்பனங்காட் டூர்மகிழ்நி க்பேமே - சூர்ப்புடைத்த 
தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும்
ஆமாத்தூர் வாழ்மெய் அருட்பிழம்பே - யாமேத்தும் 

உண்ணா முலையாள் உமையோடு மேவுதிரு
அண்ணா மலைவாழ் அருட்சுடரே - கண்ணார்ந்த 
நாகம்ப ராந்தொண்ட நாட்டி லுயர்காஞ்சி()
ஏகம்ப மேவும்பே ரின்பமே - ஆகுந்தென் 
காற்றளிவண் பூமணத்தைக் காட்டும் பொழிற்கச்சி
மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே - நாற்றமலர்ப் 
பூந்தண் டளிவிரித்துப் புக்கிசைக்குஞ் சீரோண
காந்தன் றளிஅருட்ப்ர காசமே - சேர்ந்தவர்க்கே 
இங்கா பதஞ்சற்று மில்லா தவனேக
தங்கா பதஞ்சேர் தயாநிதியே - மங்காது 

மெச்சி நெறிக்கார்வ மேவிநின்றோர் சூழ்ந்ததிருக்
கச்சி நெறிக்காரைக் காட்டிறையே - முச்சகமும் 
ஆயுங் குரங்கணின்முட் டப்பெயர்கொண் டோ ங்குபுகழ்
ஏயுந் தலம்வா ழியன்மொழியே - தோயுமன 
()யோகறலி லாத்தவத்தோ ருன்ன விளங்குதிரு
மாகறலில் அன்பரபி மானமே - ஓகையிலா 
()வீத்தூர மாவோட மெய்த்தவர்கள் சூழ்ந்ததிரு
ஓத்தூரில் வேதாந்த உண்மையே - பூத்தவிசின் 
ஆர்த்தான் பனகத் தவனிந் திரன்புகழ்வன்
பார்த்தான் பனங்காட்டூர் பாக்கியமே - பார்த்துலகில் 

இல்ல மெனச்சென் றிரவா தவர்வாழும்
வல்லமகி ழன்பர் வசித்துவமே - சொல்லரிக்குக் 
காற்பேறு கச்சியின்முக் காற்பே றிவணென்னும்
மாற்பேற்றி னன்பர் மனோபலமே - ஏற்புடைவாய் 
ஊற லடியா ருறத்தொழுது மேவுதிரு
ஊற லழியா உவகையே - மாறுபடு 
தீது மிலம்பயங்கோட் டீரென் றடியர்புகழ்
ஓது மிலம்பயங்கோட் டூர்நலமே - தீதுடைய 
பொற்கோலம் ஆமெயிற்குப் போர்க்கோலம் கொண்டதிரு
விற்கோலம் மேவுபர மேட்டிமையே - சொற்போரில் 

ஓலங்காட் டும்பழைய னூர்நீலி வாதடக்கும்
ஆலங்காட் டிற்சூழ் அருள்மயமே - ஞாலம்சேர் 
மாசூர் அகற்றும் மதியுடையோர் சூழ்ந்ததிருப்
பாசூரில் உண்மைப் பரத்துவமே - தேசூரன் 
கண்பார்க்க வேண்டுமெனக் கண்டூன்று கோற்கொடுத்த
வெண்பாக்கத் தன்பர்பெறும் வீறாப்பே - பண்பார்க்கு 
நள்ளிப் பதியே நலந்தருமென் றன்பர்புகுங்
கள்ளிற் பதிநங் கடப்பாடே - எள்ளலுறுங் 
கோளத்தி நீக்குங் குணத்தோர்க் கருள்செய்திருக்
காளத்தி ஞானக் களஞ்சியமே - ஆள்அத்தா 

வெற்றியூ ரென்ன வினையேன் வினைதவிர்த்த
ஒற்றியூர் மேவியஎன் உள்ளன்பே - தெற்றிகளில் 
பொங்குமணிக் கால்கள் பொலஞ்செய்திரு வொற்றிநகர்
தங்குஞ் சிவபோக சாரமே - புங்கவர்கள் 
சேர்ந்துவலங் கொள்ளுந் திருவொற்றி யூர்க்கோயிற்
சார்ந்து மகிழ்அமுத சாரமே - தேர்ந்துலகர் 
போற்றுந் திருவொற்றிப் பூங்கோயிற் குட்பெரியோர்
சாற்றும் புகழ்வேத சாரமே - ஊற்றுறுமெய் 
அன்புமிகுந் தொண்டர்குழு ஆயும்வலி தாயத்தில்
இன்பமிகு ஞான இலக்கணமே - துன்பமற 

எல்லைவாயற் குள்மட்டும் ஏகில்வினை யேகுமெனும்
முல்லைவாயிற் குள்வைத்த முத்திவித்தே - மல்லல்பெறு 
வேற்காட்ட ரேத்துதிரு வேற்காட்டின் மேவியமுன்
நூற்காட் டுயர்வேத நுட்பமே - பாற்காட்டும் 
ஆர்த்திபெற்ற மாதுமயி லாய்ப்பூசித் தார்மயிலைக்
கீர்த்திபெற்ற நல்வேத கீதமே - கார்த்திரண்டு 
வாவுகின்ற சோலை வளர்வான்மி யூர்த்தலத்தில்
மேவுகின்ற ஞான விதரணமே - தூவிமயில் 
ஆடும் பொழிற்கச்சூ ராலக்கோ யிற்குளன்பர்
நீடுங் கனதூய நேயமே - ஈடில்லை 

என்னுந் திருத்தொண்ட ரேத்து மிடைச்சுரத்தின்
மன்னுஞ் சிவானந்த வண்ணமே - நன்னெறியோர் 
துன்னுநெறிக் கோர்துணையாந் தூயகழுக் குன்றினிடை
முன்னுமறி வானந்த மூர்த்தமே - துன்னுபொழில் 
அம்மதுரத் தேன்பொழியும் அச்சிறுபாக் கத்துலகர்
தம்மதநீக் குஞ்ஞான சம்மதமே - எம்மதமும் 
சார்ந்தால் வினைநீக்கித் தாங்குதிரு வக்கரையுள்
நேர்ந்தார் உபநிடத நிச்சயமே - தேர்ந்தவர்கள் 
தத்த மதுமதியாற் சாரும் அரசிலியூர்
உத்தமமெய்ஞ் ஞான ஒழுக்கமே - பத்தியுள்ளோர் 

எண்ணும் புகழ்கொள் இரும்பைமா காளத்து
நண்ணுஞ் சிவயோக நாட்டமே - மண்ணகத்துள் 
கோபலத்திற் காண்பரிய கோகரணங் கோயில்கொண்ட()
மாபலத்து மாபலமா மாபலமே - தாபமிலாப் 
பாகியற்சொல் மங்கையொடும் பாங்கார் பருப்பதத்தில்()
யோகியர்க ளேத்திடவாழ் ஒப்புரவே - போகிமுதல் 
பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள்
தேடிவைத்த தெய்வத் திலகமே - நீடுபவம் 
தங்கா தவனேக தங்கா பதஞ்சேர்ந்த
நங்கா தலான நயப்புணர்வே - சிங்காது() 

தண்ணிறைந்து நின்றவர்தாஞ் சார்திருக்கே தாரத்திற்
பண்ணிறைந்த கீதப் பனுவலே - எண்ணிறைந்த 
சான்றோர் வணங்குநொடித் தான்மலையில் வாழ்கின்ற
தேன்றோய் அமுதச் செழுஞ்சுவையே - வான்தோய்ந்த 
இந்திரரும் நாரணரும் எண்ணில் பிரமர்களும்
வந்திறைஞ்சும் வெள்ளி மலையானே - தந்திடுநல் 
தாய்க்குங் கிடையாத தண்ணருள்கொண் டன்பருளம்
வாய்க்குங் கயிலை மலையானே - தூய்க்குமரன் 
தந்தையே என்னருமைத் தந்தையே தாயேயென்
சிந்தையே கோயில்கொண்ட தீர்த்தனே - சந்தமிகும் 

எண்டோ ளுடையாய் எனையுடையாய் மார்பகத்தில்
வண்டோ லிடுங்கொன்றை மாலையாய் - தொண்டர்விழி 
உண்ணற் கெளியாய் உருத்திரன்மா லாதியர்தங்
கண்ணிற் கனவினிலுங் காண்பரியாய் - மண்ணுலகில் 
என்போன் றவர்க்கும் இருள்நீக்கி இன்புதவும்
பொன்போன்ற மேனிப் புராதனனே - மின்போன்ற 
செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கு மியாவருக்கும்
அஞ்சடையா வண்ணம் அளிப்போனே - விஞ்சுலகில் 
எல்லார்க்கு நல்லவனே எல்லாஞ்செய் வல்லவனே
எல்லார்க்கும் ஒன்றா யிருப்போனே - தொல்லூழி 

ஆர்ந்த சராசரங்க ளெல்லா மடிநிழலில்
சேர்ந்தொடுங்க மாநடனஞ் செய்வோனே - சார்ந்துலகில் 
எத்தேவர் மெய்த்தேவ ரென்றுரைக்கப் பட்டவர்கள்
அத்தேவர்க் கெல்லாமுன் னானோனே - சத்தான 
வெண்மைமுதல் ஐவணமு மேவிஐந்து தேவர்களாய்த்
திண்மைபெறும் ஐந்தொழிலுஞ் செய்வோனே - மண்முதலாம் 
ஐந்தா யிருசுடரா யான்மாவாய் நாதமுடன்
விந்தா கியெங்கும் விரிந்தோனே - அந்தணவெண் 
நீறுடையா யாறுடைய நீண்முடியாய் நேடரிய
வீறுடையாய் நின்றனக்கோர் விண்ணப்பம் - மாறுபட 

எள்ள லடியேன் எனக்குள் ஒளியாமல்
உள்ள படியே யுரைக்கின்றேன் - விள்ளுறுமியான் 
வன்சொ லுடன்அன்றி வள்ளலுன தன்பர்தமக்
கின்சொ லுடன்பணிந்தொன் றீந்ததிலை - புன்சொலெனும் 
பொய்யுரைக்க வென்றாற் புடையெழுவேன் அன்றியொரு
மெய்யுரைக்க வென்றும் விழைந்ததிலை - வையகத்தில் 
பொல்லா விரதத்தைப் போற்றியுவந் துண்பதல்லால்
கொல்லா விரதத்தைக் கொண்டதிலை - அல்லாதார் 
வன்புகழைக் கேட்க மனங்கொண்ட தல்லாமல்
நின்புகழைக் கேட்க நினைந்ததிலை - வன்புகொண்டே 

இன்னடிக்கு நுண்ணிடையார்க் கேவல்புரிந் தேனலதுன்
பொன்னடிக்குத் தொண்டு புரிந்ததிலை - பன்னுகின்ற 
செக்குற்ற எள்ளெனவே சிந்தைநசிந் தேனலது
முக்குற்றந் தன்னை முறித்ததிலை - துக்கமிகுந் 
தாவில் வலங்கொண்டு சஞ்சரித்தேன் அல்லதுநின்
கோவில்வலங் கொள்ளக் குறித்தநிலை - பூவுலகில் 
வன்னிதியோர் முன்கூப்பி வாழ்த்தினேன் அன்றியுன்றன்
சன்னிதியிற் கைகூப்பித் தாழ்ந்ததிலை - புன்னெறிசேர் 
மிண்டரொடு கூடி வியந்ததல்லா லையாநின்
தொண்ட ரொடுங்கூடிச் சூழ்ந்ததிலை - கண்டவரைக் 

கன்றுமுகங் கொண்டு கடுகடுத்துப் பார்ப்பதல்லால்
என்று முகமலர்ச்சி யேற்றதிலை - நன்றுபெறு 
நன்னெஞ்ச ருன்சீர் நவில வதுகேட்டுக்
கன்னெஞ்சைச் சற்றுங் கரைத்ததிலை - பின்னெஞ்சாப் 
பண்ணீர்மை கொண்டதமிழ்ப் பாமாலை யாற்றுதித்துக்
கண்ணீர்கொண் டுன்பாற் கனிந்ததிலை - தண்ணீர்போல் 
நெஞ்சம் உருகி நினைக்குமன்பர் போலெனைநீ
அஞ்சலென நின்றாள் அடுத்தநிலை - விஞ்சுலகர் 
மெய்யடிய னென்றுரைக்க வித்தகநின் பொன்னடிக்குப்
பொய்யடிமை வேடங்கள் பூண்டதுண்டு - நையமிகு 

மையல் வினைக்குவந்த மாதர் புணர்ச்சியெனும்
வெய்ய வினைக்குழியில் வீழ்ந்ததுண்டு - துய்யர்தமை 
என்னொன்று மில்லா தியல்பாகப் பின்னொன்று
முன்னொன்று மாக மொழிந்ததுண்டு - மன்னுகின்ற 
மானஞ் செயாது மனநொந் திரப்போர்க்குத்
தானஞ்செய் வாரைத் தடுத்ததுண்டு - ஈனமிலா 
வாரமுரை யாது வழக்கி னிடையோர
வார முரைத்தே மலைந்ததுண்டு - ஈரமிலா 
நெஞ்ச ருடன்கூடி நேசஞ்செய் தும்மடியே
தஞ்சமெனத் தாழாது தாழ்ந்ததுண்டு - எஞ்சலிலாத் 

தாயனையா யுன்றனது சந்நிதிநேர் வந்துமொரு
நேயமுமில் லாதொதி() போல் நின்றதுண்டு - தீயவினை 
மாளாக் கொடிய மனச்செல்வர் வாயிலிற்போய்க்
கேளாச் சிவநிந்தை கேட்டதுண்டு - மீளாத 
பொல்லாப் புலையரைப்போற் புண்ணியரை வன்மதத்தால்
சொல்லா வசையெல்லாஞ் சொன்னதுண்டு - நல்லோரைப் 
போற்றாது பொய்யுடம்பைப் போற்றிச் சிவபூசை
ஆற்றாது சோற்றுக் கலைந்ததுண்டு - தேற்றாமல் 
ஈபத்தா என்றிங் கிரப்போர் தமைக்கண்டு
கோபத்தால் நாய்போற் குரைத்ததுண்டு - பாபத்தால் 

சிந்தையொன்று வாக்கொன்று செய்கையொன்றாய்ப் போகவிட்டே
எந்தைநினை யேத்தா திருந்ததுண்டு - புந்தியிந்த 
சொல்லைக்கல் லென்றுநல்லோர் சொன்னபுத்தி கேளாமல்
எல்லைக்கல் லொத்தே யிருந்ததுண்டு - தொல்லைவினை 
ஆழ்த்தா மயவுலகி லற்ப மகிழ்ச்சியினால்
வாழ்த்தாம லுன்னை மறந்ததுண்டு - தாழ்த்தாமற் 
பூணா வெலும்பணியாய்ப் பூண்டோ ய்நின் பொன்வடிவங்
காணாது வீழ்நாள் கழித்ததுண்டு - மாணாத 
காடுபோன் ஞாலக் கடுநடையி லேயிருகான்
மாடுபோல் நின்றுழைத்து வாழ்ந்ததுண்டு - நாடகன்ற 

கள்ளிவா யோங்குபெருங் காமக் கடுங்காட்டிற்
கொள்ளிவாய்ப் பேய்போற் குதித்ததுண்டு - ஒள்ளியரால் 
எள்ளுண்ட மாயா இயல்புறுபுன் கல்வியெலாங்
கள்ளுண்ட பித்தனைப்போற் கற்றதுண்டு - நள்ளுலகில் 
சீராசை யெங்குஞ்சொற் சென்றிடவே வேண்டுமெனும்
பேராசைப் பேய்தான் பிடித்ததுண்டு - தீராவென் 
சாதகமோ தீவினையின் சாதனையோ நானறியேன்
பாதகமென் றாலெனக்குப் பாற்சோறு - தீதகன்ற 
தூய்மைநன்றா மென்கின்ற தொன்மையினார் வாய்க்கினிய
வாய்மையென்றால் என்னுடைய வாய்குமட்டுங் - காய்மைதரும் 

கற்கு நிகராங் கடுஞ்சொலன்றி நன்மதுரச்
சொற்கும் எனக்கும்வெகு தூரங்காண் - பொற்புமிக 
நண்ணியுனைப் போற்றுகின்ற நல்லோர்க் கினியசிவ
புண்ணியமென் றாலெனக்குப் போராட்டம் - அண்ணலுனை 
நாளுரையா தேத்துகின்ற நல்லோர்மேல் இல்லாத
கோளுரையென் றாலெனக்குக் கொண்டாட்டம் - நீளநினை 
நேசிக்கு நல்ல நெறியாஞ் சிவாகமநூல்
வாசிக்க வென்றாலென் வாய்நோகுங் - காசிக்கு 
நீடிக்கி லானாலு நேர்ந்தறிவ தல்லதுவீண்
வேடிக்கை யென்றால் விடுவதிலை - நாடயலில் 

வீறா முனது விழாச்செயினும் அவ்விடந்தான்
ஆறா யிரங்காத மாங்கண்டாய் - மாறான 
போகமென்றா லுள்ளமிகப் பூரிக்கும் அன்றிசிவ
யோகமென்றா லென்னுடைய உண்ணடுங்கும் - சோகமுடன் 
துள்ளலொழிந் தென்னெஞ்சஞ் சோர்ந்தழியுங் காலத்திற்
கள்ளமென்றா லுள்ளே களித்தெழும்பும் - அள்ளனெறி 
செல்லென்றால் அன்றிச் சிவசிவா வென்றொருகால்
சொல்லென்றால் என்றனக்குத் துக்கம்வரும் - நல்லநெறி 
வாம்பலன்கொண் டோ ர்கள் மறந்தும் பெறாக்கொடிய
சோம்பலென்ப தென்னுடைய சொந்தங்காண் - ஏம்பலுடன் 

எற்றோ இரக்கமென்ப தென்றனைக்கண் டஞ்சியெனை
உற்றோ ரையுமுடன்விட் டோ டுங்காண் - சற்றேனும் 
ஆக்கமே சேரா தறத்துரத்து கின்றவெறுந்
தூக்கமே யென்றனக்குச் சோபனங்காண் - ஊக்கமிகும் 
ஏறுடையாய் நீறணியா ஈனர்மனை யாயினும்வெண்
சோறுகிடைத் தாலதுவே சொர்க்கங்காண் - வீறுகின்ற 
வாழ்வுரைக்கு நல்ல மனத்தர்தமை யெஞ்ஞான்றுந்
தாழ்வுரைத்தல் என்னுடைய சாதகங்காண் - வேள்விசெயுந் 
தொண்டர் தமைத்துதியாத் துட்டரைப்போ லெப்பொழுதுஞ்
சண்டையென்ப தென்றனக்குத் தாய்தந்தை - கொண்டஎழு 

தாதாட ஓங்கித் தலையாட வஞ்சரொடு
வாதாட என்றாலென் வாய்துடிக்குங் - கோதாடச் 
சிந்தை திரிந்துழலுந் தீயரைப்போல் நற்றரும
நிந்தையென்ப தென்பழைய நேசங்காண் - முந்தநினை 
எண்ணென்றால் அன்றி யிடர்செய் திடுங்கொடிய
பெண்ணென்றால் தூக்கம் பிடியாது - பெண்களுடன் 
புல்லென்றால் தேகம் புளகிக்கும் அன்றிவிட்டு
நில்லென்றால் என்கண்ணி னீரரும்பும் - புல்லரென்ற 
பேர்க்கும்விருப் பெய்தாத பெண்பேய்கள் வெய்யசிறு
நீர்க்குழியே யான்குளிக்கு நீர்ப்பொய்கை - சீர்க்கரையின் 

ஏறாப்பெண் மாத ரிடைக்கு ளளிந்தென்றும்
ஆறாப்புண் ணுக்கே யடிமைநான் - தேறாத 
வெஞ்சலஞ்செய் மாயா விகாரத்தி னால்வரும்வீண்
சஞ்சலமெல்லா மெனது சம்பந்தம் - அஞ்செழுத்தை 
நேர்ந்தார்க் கருள்புரியு நின்னடியர் தாமேயுஞ்
சார்ந்தா லதுபெரிய சங்கட்டம் - ஆர்ந்திடுமான் 
காந்தும் விழிப்புலியைக் கண்டதுபோல் நல்லகுண
சாந்த மெனைக் கண்டால் தலைசாய்க்கும் - ஆந்தகையோர் 
சேர மனத்திற் செறிவித் திடும்புருட
தீரமெனைக் கண்டாற் சிரிக்குங்காண் - கோரமதைக் 

காணி லுலகிற் கருத்துடையோர் கொள்ளுகின்ற
நாண மெனைக்கண்டு நாணுங்காண் - ஏணுலகில் 
ஞானங் கொளாவெனது நாமமுரைத் தாலுமபி
மானம் பயங்கொண்டு மாய்ந்துவிடும் - ஆனவுன்றன் 
கேண்மைக் குலத்தொண்டர் கீர்த்தி பெறக்கொண்ட
ஆண்மைக்கு நானென்றா லாகாது - வாண்மைபெறும் 
ஐயநின்றாட் பூசிக்கு மன்பருள்ளத் தன்பிற்கும்
பொய்ய னெனக்கும் பொருத்தமிலை - வையகத்தோர் 
இல்லெனினுஞ் சும்மாநீ யீகின்றே னென்றொருசொல்
சொல்லெனினுஞ் சொல்லத் துணிவுகொளேன் - நல்லையெமக் 

கீயென்பா ரன்றியன்னை யென்பயத்தா னின்சோற்றில்
ஈயென்ப தற்கு மிசையாள்காண் - ஈயென்பார்க் 
கெண்ணுஞ் சிலர்மண் ணிடுவா ரெனக்கந்த
மண்ணுங் கொடுக்கமனம் வாராது - அண்ணுறுமென் 
இல்லை யடைந்தே யிரப்பவருக் கெப்போதும்
இல்லையென்ப தென்வாய்க் கியல்புகாண் - தொல்லுலகை 
ஆண்டாலு மன்றி அயலார்புன் கீரைமணிப்
பூண்டாலு மென்கண் பொறுக்காது - நீண்டஎழு 
தீப முறுவோர் திசையோர்மற் றியாவர்க்குங்
கோப மதுநான் கொடுக்கிலுண்டு - ஆபத்தில் 

வீசங் கொடுத்தெட்டு வீச மெனப்பிறரை
மோசஞ் செயநான் முதற்பாதம் - பாசமுளோர் 
கைக்குடைய வேயெழுதிக் கட்டிவைத்த இவ்வுலகப்
பொய்க்கதையே யான்படிக்கும் புத்தகங்கள் - மெய்ப்படுநின் 
மந்திரத்தை உச்சரியா வாயுடையேன் என்போலத்
தந்திரத்தில் கைதேர்ந் தவரில்லை - எந்தைஇனி 
ஏதென் றுரைப்பே னிருங்கடல்சூழ் வையகத்தில்
சூதென்ப தெல்லாமென் சுற்றங்காண் - ஓதுகின்ற 
நஞ்சமெலாங் கூட்டி நவின்றிடினும் ஒவ்வாத
வஞ்சமெலா மென்கை வசங்கண்டாய் - அஞ்சவரும் 

வீணவமாம் வஞ்ச வினைக்குமுத லாகிநின்ற
ஆணவமே என்காணி ஆட்சியதாம் - மாணிறைந்த 
நல்லறிவே என்னைநெடு நாட்பகைத்த தன்றிமற்றைப்
புல்லறிவே என்னுட் பொருள்கண்டாய் - சொல்லவொணா 
வேடருக்குங் கிட்டாத வெங்குணத்தா லிங்குழலும்
மூடருக்குள் யானே முதல்வன்காண் - வீடடுத்த 
மேதையர்கள் வேண்டா விலங்காய்த் திரிகின்ற
பேதையென்ப தென்னுரிமைப் பேர்கண்டாய் - பேதமுற 

ஓதுவதென் பற்பலவாய் உற்றதவத் தோர்நீத்த
தீதுகளெல் லாமெனது செல்வங்காண் - ஆதலினால் 
பேயினையொத் திவ்வுலகில் பித்தாகி நின்றவிந்த
நாயினைநீ ஆண்டிடுதல் நன்கன்றே - ஆயினுமுன் 
மண்ணா ருயிர்களுக்கும் வானவர்க்குந் தானிரங்கி
உண்ணாக் கொடுவிடமும் உண்டனையே - எண்ணாமல் 
வேய்த்தவள வெற்பெடுத்த வெய்யஅரக் கன்தனக்கும்
வாய்த்தவர மெல்லாம் வழங்கினையே - சாய்த்தமன 
வீம்புடைய வன்முனிவர் வேள்விசெய்து விட்டகொடும்
பாம்பையெல் லாந்தோளிற் பரித்தனையே - நாம்பெரியர் 
எஞ்சேமென் றாணவத்தா லேற்ற இருவரையும்
அஞ்சேலென் றாட்கொண் டருளினையே - துஞ்சுபன்றித் 

தோயாக் குருளைகளின் துன்பம் பொறாதன்று
தாயாய் முலைப்பாலுந் தந்தனையே - வாயிசைக்குப் 
பாண்டியன்முன் சொல்லிவந்த பாணன் பொருட்டடிமை
வேண்டி விறகெடுத்து விற்றனையே - ஆண்டொருநாள் 
வாய்முடியாத் துன்புகொண்ட வந்திக்கோ ராளாகித்
தூய்முடிமேல் மண்ணுஞ் சுமந்தனையே - ஆய்துயர 
மாவகஞ்சேர் மாணிக்க வாசகருக் காய்க்குதிரைச்
சேவகன்போல் வீதிதனில் சென்றனையே - மாவிசயன் 
வில்லடிக்கு நெஞ்சம் விரும்பியதல் லால்எறிந்த
கல்லடிக்கும் உள்ளங் களித்தனையே - மல்லலுறும் 

வில்வக் கிளையுதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே - சொல்லகலின் 
நீளுகின்ற நெய்யருந்த நேரெலியை மூவுலகும்
ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே - கோளகல 
வாய்ச்சங்கு நூலிழைத்த வாய்ச்சிலம்பி தன்னைஉயர்
கோச்செங்கட் சோழனெனக் கூட்டினையே - ஏச்சறுநல் 
ஆறடுத்த() வாகீசர்க் காம்பசியைக் கண்டுகட்டுச்
சோறெடுத்துப் பின்னே சுமந்தனையே - கூறுகின்ற 
தொன்மைபெருஞ் சுந்தரர்க்குத் தோழனென்று பெண்பரவை
நன்மனைக்குத் தூது நடந்தனையே - நன்மைபெற 

இற்றென்ற இற்றென்னா எத்தனையோ பேர்கள்செய்த
குற்றங் குணமாகக் கொண்டனையே - பற்றுலகில் 
அன்புடைய தாயர்களோ ராயிரம்பே ரானாலும்
அன்புடையாய் நின்னைப்போ லாவாரோ - இன்பமுடன் 
ஈண்டவரும் தந்தையர்கள் எண்ணிலரே ஆயினுமென்
ஆண்டவனே நின்னைப்போ லாவாரோ - பூண்டகைகொள் 
ஏணுடைய நின்னையன்றி எந்தை பிரானேஉன்
ஆணைஎனக் குற்றதுணை யாருமில்லை - நாணமுளன் 
ஆனேன் பிழைக ளனைத்தினையு மையாநீ
தானே பொறுக்கத் தகுங்கண்டாய் - மேல்நோற்ற 

மாற்றனுக்கு மெட்டா மலர்க்கழலோய் நீயென்னைக்
கூற்றனுக்குக் காட்டிக் கொடுக்கற்க - பாற்றவள 
நந்தக் கடற்புவியில் நானின்னும் வன்பிறவிப்
பந்தக் கடலழுந்தப் பண்ணற்க - முந்தைநெறி 
நின்றேயுன் பொற்றாள் நினையாதார் பாழ்மனையில்
சென்றே உடலோம்பச் செய்யற்க - நன்றேநின் 
றோங்கு நெறியோர் உளத்தமர்ந்தோய் என்றன்னைத்
தீங்கு நெறியில் செலுத்தற்க - வீங்கடங்கி 
வாழி யெனத்தான் வழுத்தினுமென் சொற்கடங்கா
ஏழை மனத்தா லிளைக்கின்றேன் - வாழுமரக் 

கோடேறும் பொல்லாக் குரங்கெனவே பொய்யுலகக்
காடேறு நெஞ்சாற் கலங்குகின்றேன் - பாடேறும் 
உள்ளறியா மாயையெனு முட்பகையார் காமமெனுங்
கள்ளறியா துண்டு கவல்கின்றேன் - தௌ;ளுறுமென் 
கண்ணனையாய் நின்தாள் கமலங் களைவழுத்தா
மண்ணனையார் பாற்போய் மயங்குகின்றேன் - திண்ணமிலாக் 
காதரவாந் துன்பக் கவலைக் கடல்வீழ்ந்தே
ஆதரவொன் றின்றி அலைகின்றேன் - ஓதுமறை 
ஆத்த ரெனுமுன் அடியார் தமைக்கண்டு
நாத்திகஞ்சொல் வார்க்கு நடுங்குகின்றேன் - பாத்துண்டே 

உய்வ தறியா உளத்தினே னுய்யும்வகை
செய்வ தறியேன் திகைக்கின்றேன் - சைவநெறி 
உண்ணிரம்பு நின்கருணை உண்டோ இலையோஎன்
றெண்ணியெண்ணி உள்ளம் இளைக்கின்றேன் - மண்ணினிடைக் 
கொன்செய்கை கொண்டகொடுங் கூற்றன் குறுகிலதற்
கென்செய்வோ மென்றெண்ணி எய்க்கின்றேன் - முன்செய்வினை 
ஆமறையா நோயா லகமெலிவுற் றையோநான்
தாமரையி னீர்போல் தயங்குகின்றேன் - தாமமுடி 
வள்ளல் அருள்கொடுக்க வந்திலனே இன்னுமென
உள்ளமது நீரா யுருகுகின்றேன் - எள்ளலுறு 

மாலைபாய்ந் தின்னுமென்ன வந்திடுமோ என்றுநெஞ்சம்
ஆலைபாய்ந் துள்ளம் அழிகின்றேன் - ஞாலமிசைக் 
கோட்பார வாழ்க்கைக் கொடுஞ்சிறையி னின்றென்னை
மீட்பா ரிலாது விழிக்கின்றேன் - மீட்பாகும் 
ஆற்றி லொருகாலும் அடங்காச் சமுசாரச்
சேற்றிலொரு காலும்வைத்துத் தேய்கின்றேன் - தோற்றுமயற் 
பாகமுறு வாழ்க்கையெனும் பாலைவனத் துன்னருள்நீர்த்
தாகமது கொண்டே தவிக்கின்றேன் - மோகமதில் 
போய்ப்படுமோர் பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின்
வாய்ப்படுமோர் தேரையைப்போல் வாடுகின்றேன் - மாய்ப்பவரு 

மீன்போலு மாதர் விழியால் வலைப்பட்ட
மான்போலுஞ் சோர்ந்து மடங்குகின்றேன் - கான்போல 
வீற்று முலக விகாரப் பிரளயத்தில்
தோற்றுஞ் சுழியுட் சுழல்கின்றேன் - ஆற்றவுநான் 
இப்பாரில் உன்மேலன் பில்லெனினும் அன்பனென
ஒப்பாரி யேனும் உடையேன்காண் - தப்பாய்ந்த 
மட்டுவிடேன் உன்தாள் மறக்கினும்வெண் ணீற்றுநெறி
விட்டுவிடேன் என்றனைக்கை விட்டுவிடேல் - துட்டனென 
மாலுந் திசைமுகனும் வானவரும் வந்துதடுத்
தாலுஞ் சிறியேனைத் தள்ளிவிடேல் - சாலுலக 

வாதனைகொண் டோ னென்று மற்றெவரா னாலும்வந்து
போதனைசெய் தாலுமெனைப் போக்கிவிடேல் - நீதயவு 
சூழ்ந்திடுக என்னையுநின் தொண்டருடன் சேர்த்தருள்க
வாழ்ந்திடுக நின்தாள் மலர் 

 
திருச்சிற்றம்பலம்
-----
 இது முதல் கண்ணிகள் சோழ நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள்
 காலில்பாய் - சே
யநம் தொ வே
 காழ் - இல் - நெஞ்சம் என்று பிரித்துப் பொருள்கொள்க தொவே
 வானொளிப் புற்றூர், வாழ்கொளி புத்தூரென மருவியது தொவே
 ஹம்சன், அஞ்சன் எனத் திரிந்தது அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் எனப் பொருள்
தொவே
 குரங்காடு - வடகுரங்காடுதுறை குரங்காட்டின் என நின்றது வேற்றுமைச் சந்தியாகலான்
தொவே
 பொன் - இலக்குமி தொவே
 தே என்பது ஈண்டு விகுதி குன்றிய முதனிலைத் தொழிற்பெயர் தொவே
 கோலத்துறை என்பது கோலந்துறை என விகாரமாயிற்று தொவே
 அன்பிலாந்துறை யென்னுமோர் திருப்பதி தொவே
 முதல் வரை கண்ணிகள் சோழநாட்டில் காவிரி தென்கரைத் தலங்கள்
 வேதிகுடி என்பது வேதிக்குடியென விரித்தல் விகாரமாயிற்று தொவே
 தேமாமலர் - சிறந்த கற்பகமலர் தொவே
 கடவூர் - கடையூரென மரீஇயது தொவே
 அரிசொன்னதிக்கரை, அரிசிற்கரை யென மரீஇயது தொவே
 சீயத்தை என்பது செய்யுள் விகாரத்தாற் குறுக்கும் வழி குறுக்கப்பட்டு சியத்தையென நின்றது தொவே
 மண்டளி என்பது மண்டலி என ளகர லகர ஒற்றுமைத் திரிபு தொவே
 மடவாட் கோர் கூற்றை யெனற்பாலது கூறையென இரண்டாவதன் முடிபேற்று நின்றது
தொவே
 , -ஆம் கண்ணிகள் ஈழநாட்டுத் தலங்கள்இ
 முதல் வரை கண்ணிகள் பாண்டி நாட்டுத் தலங்கள்
 தொழும் ராமீசம் என்பது வடநூன் முடிபு தொவே வடசொன் முடிபில் வந்தது க் 
 இஃது மலைநாட்டுத் தலம்
 முதல் வரை கண்ணிகள் கொங்கு நாட்டுத் தலங்கள்
 தீக்குழி என்பது தீங்குழி யென்றாயது தொவே
 முதல் வரை கண்ணிகள் நடு நாட்டுத்தலங்கள்
 ஆசிடை யெதுகை தொவே
 செந்தொடை தொவே
 ஓங்கி - பரவெனும் வேறு சினை வினைக் குறைகள் மன்னென்னு முதல் வினையோடு முடிந்தன தொவே
 ஆசிடை யெதுகை தொவே
 முதல் வரை கண்ணிகள் தொண்டநாட்டுத்தலங்கள்
 யோகம் என்பது யோகென விகாரமாயிற்று தொவே
 வீ - மரணம் தொவே
 இது துளுநாட்டுத்தலம்
 முதல் வரை கண்ணிகள் வடநாட்டுத்தலங்கள்
 சிங்குதல் - குறைதல் தொவே
 உதி - ஒதியென மரீஇயது தொவே
 ஆறு - வழி தொவே
-----------------------

--------------------------------------------------------------------------------

 நெஞ்சறிவுறுத்தல் ( - ) 
 காப்பு 
 குறள்வெண்பா 
1963
சீர்சான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடிலாம்
பேர்சான்ற இன்பம் பெரிது 

1964
ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப்
பேறு மிகத்தான் பெரிது 

கலிவெண்பா 
1965
பொன்னார் மலைபோல் பொலிவுற் றசையாமல்
எந்நாளும் வாழியநீ என்னெஞ்சே - பின்னான 
இப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை
எப்பிறப்பும் விட்டகலா என்னெஞ்சே - செப்பமுடன் 
செவ்வொருசார் நின்று சிறியேன் கிளக்கின்ற
இவ்வொருசொல் கேட்டிடுக என்னெஞ்சே - எவ்வௌ; 
உலகும் பரவும் ஒருமுதலாய் எங்கும்
இலகும் சிவமாய் இறையாய் - விலகும் 
உருவாய் உருவில் உருவாய் உருவுள்
அருவாய் அருவில் அருவாய் - உருஅருவாய் 

நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்
சத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் - முத்தியருள் 
ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்
நன்றாய் நவமாய் நடுநிலையாய் - நின்றோங்கும் 
வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்குபர
நாதமாய் நாதாந்த நாயகமாய் - ஓதும் 
செறிவாய்த் திரமாய்ச் சிதாகாச மாய்ச்சொல்
அறிவாய் அறிவுள் அறிவாய் - நெறிமேவு 
காலமாய்க் காலம் கடந்த கருத்தாய்நற்
சீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் - ஞாலம் 

பொருந்தாப் பொருளாய்ப் பொருந்தும் பொருளாய்ப்
பெருந்தா ரகம்சூழ்ந்த பேறாய்த் - திருந்தாத 
போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்
நோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் - நீக்கமிலா 
ஆதியாய் ஆதிநடு அந்தமாய் ஆங்ககன்ற
சோதியாய்ச் சோதியாச் சொற்பயனாய் - நீதியாய் 
ஆங்கார நீக்கும் அகார உகாரமதாய்
ஓங்கார மாய்அவற்றின் உட்பொருளாய்ப் - பாங்கான 
சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்
சத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் - வித்தமாய் 

அண்டமாய் அண்டத் தணுவாய் அருளகண்டா
கண்டமாய் ஆனந்தா காரமதாய் - அண்டத்தின் 
அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய்ச் சேய்மையதாய்
எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய்ச் - செப்பாலும் 
நெஞ்சாலும் காய நிலையாலும் அந்நிலைக்குள்
அஞ்சாலுங் காண்டற் கரும்பதமாய் - எஞ்சாப் 
பரமாய்ப் பகாப்பொருளாய்ப் பாலாய்ச் சுவையின்
தரமாய்ப் பரப்பிரமம் தானாய்வெரமாய 
ஒன்பான் வடிவாய் ஒளியெண் குணக்கடலாய்
அன்பாய் அகநிலையாய் அற்புதமாய் - இன்பாய் 

அகமாய்ப் புறமாய் அகம்புறமாய் நீங்கும்
சகமாய்ச் சகமாயை தானாய் - சகமாயை 
இல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும்
கொல்லாதார்க் கின்பம் கொடுப்பதாய் - எல்லார்க்கும் 
நண்ணுவதாய் நண்ணாதாய் நல்வினையாய் அல்வினையாய்
எண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் - எண்ணுகின்ற 
வானாய் நிலனாய் வளியாய் அனலாய்நீர்
தானாய் வழிபடுநான் தான்தானாய் - வானாதி 
ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்
மன்றிடத்தில் என்றும் வதிவதாய் - ஒன்றியதோர் 

ஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள்
எந்நிறமும் வேண்டா இயனிறமாய் - முந்நிறத்தில் 
பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்
நீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் - பூப்பதின்றி 
வாளா திருப்பதுவாய் வாதனா தீதமாய்
நீளாது நீண்ட நிலையினதாய் - மீளாப் 
பெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும்
அரிதாய் அரிதில் அரிதாய்த் - துரிய 
வெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின்
ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் - தெளியாதி 

கற்பகமாய்க் காணுஞ்சங் கற்ப விகற்பமாய்
நிற்பதா கார நிருவிகற்பாய்ப் - பொற்புடைய 
முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய்
எச்சுடரும் போதா இயற்சுடராய் - அச்சில் 
நிறைவாய்க் குறைவாய் நிறைகுறை வில்லாதாய்
மறைவாய் வெளியாய் மனுவாய் - மறையாத 
சச்சிதா னந்தமதாய்த் தன்னிகரொன் றில்லாதாய்
விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் - மெச்சுகின்ற 
யோகமாய் யோகியர் யோகத் தெழுந்தசிவ
போகமாய்ப் போகியாய்ப் போகமருள் - ஏகமாய்க் 

கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச்சகல
கேவலங்கள் சற்றும் கிடையாதாய் - மாவலத்தில் 
காட்சியாய்க் காண்பானாய்க் காணப் படுபொருளாய்ச்
சூட்சியாய்ச் சூட்சியால் தோய்வரிதாய் - மாட்சிபெறச் 
செய்பவனாய்ச் செய்தொழிலாய்ச் செய்பொருளாய்ச் செய்தொழிலால்
உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் - மொய்கொள் 
அதுவாய் அவளாய் அவனாய் அவையும்
கதுவாது நின்ற கணிப்பாய்க் - கதுவாமல் 
ஐயம் திரிபோ டறியாமை விட்டகற்றிப்
பொய்யென்ப தொன்றும் பொருந்தாராய்ச் - செய்யென்ற 

ஓர்வினையில் இன்பமுமற் றோர்வினையில் துன்பமுமாம்
சார்வினைவிட் டோ ங்கும் தகையினராய்ப் - பார்வினையில் 
ஓர்பால் வெறுப்புமற்றை ஓர்பால் விருப்புமுறும்
சார்பால் மயங்காத் தகையினராய்ச் - சார்பாய 
ஓரிடத்தில் தண்மையுமற் றோரிடத்தில் வெஞ்சினமும்
பாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் - நீரிடத்தில் 
தண்மைநிக ராதென்றும் சாந்தம் பழுத்துயர்ந்த
ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் - வெண்மையிலா 
ஒன்றும் அறிவின் உதயாதி ஈறளவும்
என்றும் இரண்டென்ப தில்லவராய் - மன்றவொளிர் 

அம்மூன்றி னுள்ளே அடுக்கிவரும் ஒன்றகன்ற
மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் - தம்மூன்றி 
வீடாது நின்றும் விரிந்தும் விகற்பநடை
நாடாது நான்கும் நசித்தவராய் - ஊடாக 
எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும்
அஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் - எஞ்சாமல் 
ஈண்டாண் டருளும் இறையோர் தமையாறில்
ஆண்டாண்டு கண்டா றகன்றவராய் - ஈண்டாது 
வாழியுற்ற வானோரும் வந்து தமக்கிரண்டோ 
டேழியற்ற ஏழும் இகந்தவராய் - ஊழியற்றக் 

கட்டிநின்றுட் சோதியொன்று காணத் தொடங்குகின்றோர்
எட்டுகின்ற எட்டின்மேல் எய்தினராய்க் கட்டுகின்ற 
தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற
சான்றோர்தம் உள்ளம் தணவாதாய் - மான்றமலத்() 
தாக்கொழிந்து தத்துவத்தின் சார்பாம் - தனுவொழிந்து
வாக்கொழிந்து மாணா மனமொழிந்து - ஏக்கமுற 
வாய்க்கும் சுகமொழிந்து மண்ணொழிந்து விண்ணொழிந்து
சாய்க்கும் இராப்பகலும் தானொழிந்து - நீக்கொழிந்து 
நானுமொழி யாதொழிந்து ஞானமொழி யாதொழிந்து
தானும் ஒழியாமற் றானொழிந்து - மோனநிலை 

நிற்கும் பிரம நிரதிசயா னந்தமதாய்
நிற்கும் பரம நிருத்தனெவன் - தற்பரமாய் 
நின்றான் எவனன்பர் நேயமனத் தேவிரைந்து
சென்றான் எவன்சர்வ தீர்த்தனெவன் - வன்தீமை 
இல்லான் எவன்யார்க்கும் ஈசன் எவன்யாவும்
வல்லான் எவனந்தி வண்ணனெவன் - கல்லாலில் 
சுட்டகன்ற ஞான சுகாதீதம் காட்டிமுற்றும்
விட்டகன்ற யோக வினோதனெவன் - மட்டகன்ற 
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்தருளித்
திண்டங்கு மாறிருத்தும் சித்தனெவன் - பண்டங்கு 

வீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டமெலாம்
தேயாது கூட்டுவிக்கும் சித்தனெவன் - யாயாதும் 
வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்தமைத்
தீண்டாது தீண்டுகின்ற சித்தனெவன் - ஈண்டோ து 
பற்றுருவாய்ப் பற்றாப் பரவணுவின் உள்விளங்கும்
சிற்றுருவாய் உள்ளொளிக்கும் சித்தனெவன் - மற்றுருவின் 
வையாது வைத்துலகை மாவிந் திரசாலம்
செய்யாது செய்விக்கும் சித்தனெவன் - நையாமல் 
அப்பிடைவைப் பாமுலகில் ஆருயிரை மாயையெனும்
செப்பிடைவைத் தாட்டுகின்ற சித்தனெவன் - ஒப்புறவே 

நில்லாத காற்றை நிலையாக் கடத்தடைத்துச்
செல்லாது வைக்கின்ற சித்தனெவன் - பொல்லாத 
வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே
செம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர் 
ஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த்
திண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் - வண்கையுடைத் 
தானசைந்தால் மற்றைச் சகமசையும் என்றுமறை
தேனசையச் சொல்லுகின்ற சித்தனெவன் - ஊனமின்றிப் 
பேர்த்துயிர்க ளெல்லாம்ஓர் பெண்பிள்ளை யின்வசமாய்ச்
சேர்த்து வருவிக்கும் சித்தனெவன் - போர்த்துமிக 

அல்விரவுங் காலை அகிலமெலாம் தன்பதத்தோர்
சில்விரலில் சேர்க்கின்ற சித்தனெவன் - பல்வகையாய்க் 
கைகலந்த வண்மைக் கருப்பா சயப்பையுள்
செய்கருவுக் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்கருவை 
மெய்வைத்த வேர்வையினும் வீழ்நிலத்தும் அண்டத்தும்
செய்வித்தங் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்விக்கும் 
வித்தொன்றும் இன்றி விளைவித் தருளளிக்கும்
சித்தென்றும் வல்லவொரு சித்தனெவன் - சத்துடனே 
உற்பத்தி யாயுலகில் ஒன்பதுவாய்ப் பாவைகள்செய்
சிற்பத் தொழில்வல்ல சித்தனெவன் - பற்பலவாம் 

காரா ழிகளைக் கரையின்றி எல்லையிலாச்
சேரூழி நிற்கவைத்த சித்தனெவன் - பேராத 
நீர்மேல் நெருப்பை நிலையுறவைத் தெவ்வுலகும்
சீர்மே வுறச்செய்யும் சித்தனெவன் - பாராதி 
ஐந்திலைந்து நான்கொருமூன் றாமிரண்டொன் றாய்முறையே
சிந்தையுற நின்றருளும் சித்தனெவன் - பந்தமுற 
ஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தனைவானின்
சேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் - மாண்பண்ணாப் 
பேடாணாய்ப் பெண்ணாயப் பெண்ணாண் பெரும்பேடாய்ச்
சேடாகச் செய்யவல்ல சித்தனெவன் - சேடாய 

வெண்மை கிழமாய் விருத்தமந்த வெண்மையதாய்த்
திண்மை பெறச்செய்யும் சித்தனெவன் - ஒண்மையிலா 
ஓட்டினைச்செம் பொன்னா யுயர்செம்பொன் ஓடாகச்
சேட்டையறச் செய்கின்ற சித்தனெவன் - காட்டிலுறு 
காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்
தேஞ்சிவணச் செய்கின்ற சித்தனெவன் - வாஞ்சையுற 
நாரணன்சேய் நான்முகனாய் நான்முகன்சேய் நாரணனாய்ச்
சீரணவச் செய்யவல்ல சித்தனெவன் - பேரணவக் 
கொம்மை பெறுங்கோடா கோடியண்டம் எல்லாமோர்
செம்மயிர்க்கால் உட்புகுத்தும் சித்தனெவன் - செம்மையிலா 

வெம்புலியை வெண்பால் விளைபசுவாய் அப்பசுவைச்
செம்புலியாச் செய்யவல்ல சித்தனெவன் - அம்புலியை 
அங்கதிரொண் செங்கதிராய் அம்புலியாய்ப் பம்புகின்ற
செங்கதிரைச் செய்யவல்ல சித்தனெவன் - துங்கமுறா 
ஓரணுவோர் மாமலையாய் ஓர்மா மலையதுவோர்
சீரணுவாய்ச் செய்யவல்ல சித்தனெவன் - வீரமுடன் 
முன்னகையா நின்றதொரு முப்புரத்தை அன்றொருகால்
சின்னகையால் தீமடுத்த சித்தனெவன் - முன்னயன்மால் 
மற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு
சிற்றுரும்பை() நாட்டிநின்ற சித்தனெவன் - மற்றவர்போல் 

அல்லா அயனும் அரியும் உருத்திரனும்
செல்லா நெறிநின்ற சித்தனெவன் - ஒல்லாத 
கல்லிற் சுவையாய்க் கனியிற் சுவையிலதாய்ச்
செல்லப் பணிக்கவல்ல சித்தனெவன் - அல்லலறப் 
பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனா தீதனெனச்
சீர்க்கின்ற மெய்ஞ்ஞானச் சித்தனெவன் - மார்க்கங்கள் 
ஒன்றென்ற மேலவரை ஒன்றென் றுரைத்தவர்பால்
சென்றொன்றி நிற்கின்ற சித்தனெவன் - அன்றொருநாள் 
கல்லானை தின்னக் கரும்பளித்துப் பாண்டியன்வீண்
செல்லா தளித்தமகா சித்தனெவன் - சொல்லாத 

ஒன்றே இரண்டேமேல் ஒன்றிரண்டே என்பவற்றுள்
சென்றே நடுநின்ற சித்தனெவன் - சென்றேறும் 
அத்திரத்தை மென்மலராய் அம்மலரை அத்திரமாய்ச்
சித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தனெவன் - எத்தலத்தும் 
சங்கமதே() தாபரமாய்த் தாபரமே சங்கமதாய்ச்
செங்கையிடா தாற்றவல்ல சித்தனெவன் - தங்குகின்ற 
சத்தெல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்
சித்தெல்லாம் வல்லசிவ சித்தனெவன் - தத்தெல்லாம் 
நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன்னுண்மை
காட்டாது காட்டிநிற்கும் கள்வனெவன் - பாட்டோ டு 

வண்டாலுங் கொன்றை மலரோய் எனமறைகள்
கண்டாலும் காணாத கள்வனெவன் - தொண்டாக 
அள்ளம் செறியார்க்கே அன்றி அறிவார்க்குக்
கள்ளம் செறியாத கள்வனெவன் - எள்ளலறக் 
கொண்டவெலாந் தன்பால் கொடுக்குமவர் தம்மிடத்தில்
கண்டவெலாம் கொள்ளைகொளுங் கள்வனெவன் - கொண்டுளத்தில் 
தன்னையொளிக் கின்றோர்கள் தம்முளொளித் துள்ளவெலாம்
கன்னமிடக் கைவந்த கள்வனெவன் - மண்ணுலகைச் 
சற்பனைசெய் கின்றதிரோ தானமெனும் சத்தியினால்
கற்பனைசெய் தேமயக்கும் கள்வனெவன் - முற்படுமித் 

தொண்டுலகில் உள்ளஉயிர் தோறுமொளித் தாற்றலெலாம்
கண்டுலவு கின்றதொரு கள்வனெவன் - விண்டகலா 
மண்மயக்கும் பொன்மயக்கும் மாதர் மயக்குமெனும்
கண்மயக்கம் காட்டிநிற்கும் கள்வனெவன் - உண்மயக்கு 
மாசு பறிக்கும் மதியுடையோர் தம்முடைய
காசு பறிக்கின்ற கள்வனெவன் - ஆசகன்ற 
பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றைநுதற்
கண்ணால் அழிக்கின்ற கள்வனெவன் - எண்ணாது 
நானென்று நிற்கின் நடுவேயந் நானாணத்
தானென்று நிற்கும் சதுரனெவன் - மானென்ற 

மாயைதனைக் காட்டி மறைப்பித்தம் மாயையிற்றன்
சாயைதனைக் காட்டும் சதுரனெவன் - நேயமுடன் 
நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடுதொறும்
தான்மறையும் மேன்மைச் சதுரனெவன் - வான்மறையாம் 
முன்னை மறைக்கும் முடிப்பொருளென் றாய்பவர்க்கும்
தன்னை மறைக்கும் சதுரனெவன் - உன்னுகின்றோர் 
சித்தத்திற் சுத்த சிதாகாசம் என்றொருசிற்
சத்தத்திற் காட்டும் சதுரனெவன் - முத்தரென 
யாவர் இருந்தார் அவர்காண வீற்றிருக்கும்
தேவர் புகழ்தலைமைத் தேவனெவன் - யாவர்களும் 

இவ்வணத்தன் இவ்விடத்தன் இவ்வியலன் என்றறியாச்
செவ்வணத்தன் ஆம்தலைமைத் தேவனெவன் - மெய்வணத்தோர் 
தாம்வாழ அண்ட சராசரங்கள் தாம்வாழ
நாம்வாழத் தன்னுரையாம் நான்மறைகள் - தாம்வாழச் 
சாருருவின் நல்லருளே சத்தியாய் மெய்யறிவின்
சீருருவே ஓருருவாம் தேவனெவன் - ஈருருவும் 
ஒன்றென் றுணர உணர்த்தி அடியருளம்
சென்றங் கமர்ந்தருளும் தேவனெவன் - என்றென்றும் 
தற்சகசம் என்றே சமயம் சமரசமாம்
சிற்சபையில் வாழ்கின்ற தேவனெவன் - பிற்படுமோர் 

பொய்விட்டு மெய்ந்நெறியைப் போற்றித்தற் போதத்தைக்
கைவிட் டுணர்வே கடைப்பிடித்து - நெய்விட்ட 
தீப்போற் கனலும் செருக்கறவே செங்கமலப்
பூப்போலும் தன்தாள் புணைபற்றிக் - காப்பாய 
வெண்ணீ றணிந்து விதிர்விதிர்த்து மெய்பொடிப்பக்
கண்ணீர் அருவி கலந்தாடி - உண்ணீர்மை 
என்புருகி உள்ளுருகி இன்பார் உயிருருகி
அன்புருகி அன்புருவம் ஆகிப்பின் - வன்பகன்று 
புண்ணியா திங்கட் புரிசடையாய் பொன்னிதழிக்
கண்ணியா எங்கள் களைகண்ணே - எண்ணியாங் 

கன்பர்க் கருளும் அரசே அமுதேபே
ரின்பக் கடலே எமதுறவே - மன்பெற்று 
மாற்றுரையாப் பொன்னே மணியேஎம் கண்மணியே
ஏற்றுவந்த மெய்ப்பொருளே என்றுநிதம் - போற்றிநின்றால் 
உள்ளூறி உள்ளத் துணர்வூறி அவ்வுணர்வின்
அள்ளூறி அண்ணித் தமுதூறித் - தௌ;ளூறும் 
வான்போல் பரவி மதிபோல் குளிர்ந்துயர்கோல்
தேன்போல் மதுரிக்கும் தேவனெவன் - வான்போனார் 
மாண்கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப்பொன்
நாண்கொடுக்க நஞ்சுவந்த நாதனெவன் - நாண்மலர்பெய் 

தார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட
மூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் - சீர்த்திபெற 
ஈண்டற் புதவடிவாய் எத்தேவ ரேனுநின்று
காண்டற் கரிதாம் கணேசனெவன் - வேண்டுற்றுப் 
பூமியெங்கும் வாழ்த்திப் புகழ்வார் விரும்புமிட்ட
காமியங்கள் ஈயும் கணேசனெவன் - நாமியங்க 
ஏண வருமிடையூ றெல்லாம் அகற்றியருள்
காண எமக்கீயும் கணேசனெவன் - மாணவரு 
முந்த மறையின் முழுப்பொருளை நான்முகற்குத்
தந்த அருட்கடலாம் சாமியெவன் - தந்தமக்காம் 

வாதகற்றி உண்மை மரபளித்து வஞ்சமலக்
கோதகற்றும் நெஞ்சக் குகேசனெவன் - தீதகற்றித் 
தங்கும் உலகங்கள் சாயாமற் செஞ்சடைமேல்
கங்கைதனைச் சேர்த்த கடவுளெவன் - எங்குறினும் 
கூம்பா நிலைமைக் குணத்தோர் தொழுகின்ற
பாம்பா பரணப் பரமனெவன் - கூம்பாது 
போற்றுரைத்து நிற்கும் புனிதன்மேல் வந்தகொடுங்
கூற்றுதைத்த செந்தாள் குழகனெவன் - ஆற்றலுறு 
வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்திமுதல்
ஐயைந்து மூர்த்தியெனும் ஐயனெவன் - ஐயந்தீர் 

வல்லார்சொல் வண்ணமெந்த வண்ணமந்த வண்ணங்கள்
எல்லாம் உடைய விதத்தனெவன் - எல்லார்க்கும் 
தாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும்
ஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் - போந்துயிர்கள் 
எங்கெங் கிருந்துமனத் தியாது விழைந்தாலும்
அங்கங் கிருந்தளிக்கும் அண்ணலெவன் - புங்கமிகும் 
அண்ணல் திருமலர்க்கை ஆழிபெறக் கண்ணிடந்த
கண்ணற் கருளியமுக் கண்ணனெவன் - மண்ணிடத்தில் 
ஓயாது சூல்முதிர்ந்த ஓர்பெண் தனக்காகத்
தாயாகி வந்த தயாளனெவன் - சேயாக 

வேல்பிடித்த கண்ணப்பன் மேவுமெச்சில் வேண்டுமிதத்
தாற்பொசித்து நேர்ந்த தயாளனெவன் - பாற்குடத்தைத் 
தான்தந்தை என்றெறிந்தோன் தாளெறிந்த தண்டிக்குத்
தான்தந்தை ஆன தயாளனெவன் - தான்கொண்டு 
சம்பு நறுங்கனியின் தன்விதையைத் தாள்பணிந்த
சம்பு முனிக்கீயும் தயாளனெவன் - அம்புவியில் 
ஆண்டவனென் றேத்தப்பொன் னம்பலத்தில் ஆனந்தத்
தாண்டவம்செய் கின்ற தயாளனெவன் - காண்தகைய 
முத்துச் சிவிகையின்மேல் முன்காழி ஓங்குமுழு
முத்தைத் தனிவைத்த முத்தனெவன் - பத்திபெறு 

நாவொன் றரசர்க்கு நாம்தருவேம் நல்லூரில்
வாஎன்று வாய்மலர்ந்த வள்ளலெவன் - பூவொன்று 
நன்றொண்டர் சுந்தரரை நாம்தடுக்க வந்தமையால்
வன்றொண்டன் நீஎன்ற வள்ளலெவன் - நன்றொண்டின் 
காணிக்கை யாகக் கருத்தளித்தார் தம்மொழியை
மாணிக்கம் என்றுரைத்த வள்ளலெவன் - தாணிற்கும் 
தன்னன்பர் தாம்வருந்தில் சற்றுந் தரியாது
மன்னன் பருளளிக்கும் வள்ளலெவன் - முன்னன்பில் 
சால்புடைய நல்லோர்க்குத் தண்ணருள்தந் தாட்கொளவோர்
மால்விடைமேல் வந்தருளும் வள்ளலெவன் - மான்முதலோர் 

தாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவெள்ளி
மாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் - ஆமவனே 
நம்மைப் பணிகொண்டு நாரணனும் நாடரிதாம்
செம்மைக் கதியருள்நம் தெய்வங்காண் - எம்மையினும் 
நாடக் கிடைத்தல் நமக்கன்றி நான்முகற்கும்
தேடக் கிடையாநம் தெய்வங்காண் - நீடச்சீர் 
நல்வந் தனைசெய்யும் நம்போல்வார்க் கோர்ஞானச்
செல்வந் தருநமது தெய்வம்காண் - சொல்வந்த 
எண்மைபெறும் நாமுலகில் என்றும் பிறந்திறவாத்
திண்மை அளித்தருள்நம் தெய்வம்காண் - வண்மையுற 

முப்பாழ் கடந்த முழுப்பாழுக் கப்பாலைச்
செப்பாது செப்புறுநம் தேசிகன்காண் - தப்பாது 
தீரா இடும்பைத் திரிபென்பதி யாதொன்றும்
சேரா நெறியருள்நம் தேசிகன்காண் - ஆராது 
நித்தம் தெரியா நிலைமே வியநமது
சித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண் - வித்தரென 
யாதொன்றும் தேரா திருந்தநமக் கிவ்வுலகம்
தீதென் றறிவித்த தேசிகன்காண் - கோதின்றி 
ஓசை பெறுகடல்சூ ழுற்ற வுலகினம்மை
ஆசை யுடனீன்ற அப்பன்காண் - மாசுறவே 

வன்பாய் வளர்க்கின்ற மற்றையர்போ லல்லாமல்
அன்பாய் நமைவளர்க்கும் அப்பன்காண் - இன்பாக 
இப்பாரில் சேயார் இதயம் மலர்ந்தம்மை
அப்பா எனும்நங்கள் அப்பன்காண் - செப்பாமல் 
எள்ளித் திரிந்தாலும் இந்தா()என் றின்னமுதம்
அள்ளிக் கொடுக்குநம தப்பன்காண் - உள்ளிக்கொண் 
டின்றே அருள்வாய் எனத்துதிக்கில் ஆங்குநமக்
கன்றே அருளுநம தப்பன்காண் - நன்றேமுன் 
காதரவு செய்து() நலம் கற்பித்துப் பின்பெரிய
ஆதரவு செய்யுநங்கள் அப்பன்காண் - கோதுறுமா 

வஞ்சமலத் தால்வருந்தி வாடுகின்ற நந்தமையே
அஞ்சலஞ்ச லென்றருளும் அப்பன்காண் - துஞ்சலெனும் 
நச்சென்ற வாதனையை நாளுமெண்ணி நாமஞ்சும்
அச்சம் கெடுத்தாண்ட அப்பன்காண் - நிச்சலுமிங்() 
கேயிரவும் எல்லும் எளியேம் பிழைத்தபிழை
ஆயிரமும் தான்பொறுக்கும் அப்பன்காண் - சேயிரங்கா 
முன்னம் எடுத்தணைத்து முத்தமிட்டுப் பாலருத்தும்
அன்னையினும் அன்புடைய அப்பன்காண் - மன்னுலகில் 
வன்மை யறப்பத்து மாதம் சுமந்துநமை
நன்மை தரப்பெற்ற நற்றாய்காண் - இம்மைதனில் 

அன்றொருநாள் நம்பசிகண் டந்தோ தரியாது
நன்றிரவில் சோறளித்த நற்றாய்காண் - என்றுமருட் 
செம்மை இலாச்சிறிய தேவர்கள்பால் சேர்க்காது
நம்மை வளர்க்கின்ற நற்றாய்காண் - சும்மையென 
மூளும் பெருங்குற்றம் முன்னிமேல் மேற்செயினும்
நாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற 
வன்னெறியிற் சென்றாலும் வாவென் றழைத்துநமை
நன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் - செந்நெறியின் 
நாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை
நாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண் - ஆம்தோறும் 

காலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால்
ஞாலம் மிசையளிக்கும் நற்றாய்காண் - சாலவுறு 
வெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யும்துயரும்
நம்பசியும் தீர்த்தருளும் நற்றாய்காண் - அம்புவியில் 
வெந்நீரில் ஆட்டிடிலெம் மெய்நோகும் என்றருளாம்
நன்னீரில் ஆட்டுகின்ற நற்றாய்காண் - எந்நீரின் 
மேலாய் நமக்கு வியனுலகில் அன்புடைய
நாலா யிரம்தாயில் நற்றாய்காண் - ஏலாது 
வாடியழு தாலெம் வருத்தம் தரியாது
நாடிஎடுத் தணைக்கும் நற்றாய்காண் - நீடுலகில் 

தான்பாடக்கேட்டுத் தமியேன் களிக்குமுன்னம்
நான்பாடக் கேட்டுவக்கும் நற்றாய்காண் - வான்பாடும் 
ஞானமணம் செய்யருளாம் நங்கைதனைத் தந்துநமக்
கானமணம் செய்விக்கும் அம்மான்காண் - தேனினொடும் 
இன்பால் அமுதாதி ஏக்கமுற இன்னருள்கொண்
டன்பால் விருந்தளிக்கும் அம்மான்காண் - வன்பாவ 
ஆழ்கடல்வீழ்ந் துள்ளம் அழுந்தும் நமையெடுத்துச்
சூழ்கரையில் ஏற்றும் துணைவன்காண் - வீழ்குணத்தால் 
இன்பம் எனைத்தும் இதுவென் றறியாநம்
துன்பம் துடைக்கும் துணைவன்காண் - வன்பவமாம் 

தீநெறியிற் சென்று தியங்குகின்ற நந்தமக்குத்
தூநெறியைக் காட்டும் துணைவன்காண் - மாநிலத்தில் 
இன்றுதொட்ட தன்றி யியற்கையாய் நந்தமக்குத்
தொன்றுதொட்டு வந்தவருட் சுற்றங்காண் - தொன்றுதொட்டே 
ஆயுமுடற் கன்புடைத்தாம் ஆருயிரிற் றான்சிறந்த
நேயம்வைத்த நம்முடைய நேசன்காண் - பேயரென 
வாங்காது நாமே மறந்தாலும் நம்மைவிட்டு
நீங்காத நம்முடைய நேசன்காண் - தீங்காக 
ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா எனஅருளை
நீட்டுகின்ற நம்முடைய நேசன்காண் - கூட்டுலகில் 

புல்லென்ற மாயையிடைப் போந்தோறும் நம்மையிங்கு
நில்லென் றிருத்துகின்ற நேசன்காண் - சில்லென்றென் 
உட்டூவும் தன்னைமறந் துண்டாலும் மற்றதற்கு
நிட்டூரம் செய்யாத நேசன்காண் - நட்டூர்ந்து() 
வஞ்சமது நாமெண்ணி வாழ்ந்தாலும் தான்சிறிதும்
நெஞ்சிலது வையாத நேசன்காண் - எஞ்சலிலாப் 
பார்நின்ற நாம்கிடையாப் பண்டமெது வேண்டிடினும்
நேர்நின் றளித்துவரு நேசன்காண் - ஆர்வமுடன் 
ஆர்ந்தநமக் கிவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்
நேர்ந்தஉயிர் போற்கிடைத்த நேசன்காண் - சேர்ந்துமிகத் 

தாபஞ்செய் குற்றம் தரினும் பொறுப்பதன்றிக்
கோபஞ் செயாநமது கோமான்காண் - பாபமற 
விள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர்
கொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் - உள்ளமுற 
உண்டளிக்கும் ஊணுடைபூண் ஊரா திகள்தானே
கொண்டுநமக் கிங்களிக்கும் கோமான்காண் - மண்டலத்தில் 
ஒன்றாலும் நீங்கா துகங்கள் பலபலவாய்ச்
சென்றாலும் செல்லாநம் செல்வம்காண் - முன்தாவி 
நாடிவைக்கும் நல்லறிவோர் நாளும் தவம்புரிந்து
தேடிவைத்த நம்முடைய செல்வம்காண் - மாடிருந்து 

நாமெத் தனைநாளும் நல்கிடினும் தானுலவாச்
சேமித்த வைப்பின் திரவியம்காண் - பூமிக்கண் 
ஈங்குறினும் வானாதி யாங்குறினும் விட்டகலா
தோங்கருளால் நம்மை உடையவன்காண் - ஆங்கவன்தன் 
கங்கைச் சடையழகும் காதன்மிகும் அச்சடைமேல்
திங்கட் கொழுந்தின் திருவழகும் - திங்கள்தன்மேல் 
சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்
ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும் 
நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்
போக்கரிய நன்னுதலில் பொட்டழகும் - தேக்குதிரி 

புண்டரத்தின் நல்லழகும் பொன்னருள்தான் தன்னெழிலைக்
கண்டவர்பால் ஊற்றுகின்ற கண்ணழகும் - தொண்டர்கள்தம் 
நேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த
நாசித் திருக்குமிழின் நல்லழகும் - தேசுற்ற 
முல்லை முகையாம் முறுவலழ கும்பவள
எல்லை வளர்செவ் விதழழகும் - நல்லவரைத் 
தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க
வாவென் றருளுமலர் வாயழகும் - பூவொன்றும் 
கோன்பரவும் சங்கக் குழையழகும் அன்பர்மொழித்
தேன்பரவும் வள்ளைச் செவியழகும் - நான்பரவி 

வேட்டவையை நின்றாங்கு விண்ணப்பம் செய்யவது
கேட்டருளும் வார்செவியின் கேழழகும் - நாட்டிலுயர் 
சைவம் முதலாய்த் தழைக்க அருள்சுரக்கும்
தெய்வ முகத்தின் திருவழகும் - தெய்வமுகத் 
துள்ளம் குளிர உயிர்குளிர மெய்குளிரக்
கொள்ளும் கருணைக் குறிப்பழகும் - உள்ளறிவின் 
எள்ளாத மேன்மையுல கெல்லாம் தழைப்பவொளிர்
தௌ;ளார் அமுதச் சிரிப்பழகும் - உள்ளோங்கும் 
சீல அருளின் திறத்துக் கிலச்சினையாம்
நீல மணிமிடற்றின் நீடழகும் - மாலகற்றி 

வாழ்ந்தொளிரும் அன்பர் மனம்போலும் வெண்ணீறு
சூழ்ந்தொளிகொண் டோ ங்குதிருத் தோளழகும் - தாழ்ந்திலவாய்த் 
தானோங்கும் அண்டமெலாம் சத்தமுறக் கூவுமொரு
மானோங்கும் செங்கை மலரழகும் - ஊனோங்கும் 
ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர்மழுவைக்
காணவைத்த செங்கமலக் கையழகும் - நாணமுற்றே 
ஏங்கும் பரிசுடைய எம்போல்வார் அச்சமெலாம்
வாங்கும் அபய மலரழகும் - தீங்கடையாச் 
சீர்வரவும் எல்லாச் சிறப்பும் பெறவுமருள்
சார்வரத வொண்கைத் தலத்தழகும் - பேரரவப் 

பூணிலங்க வெண்பொற் பொடியிலங்க என்பணித்தார்
மாணிலங்க மேவுதிரு மார்பழகும் - சேணிலத்தர் 
மேலுடுத்த ஆடையெலாம் வெஃக வியாக்கிரமத்
தோலுடுத்த ஒண்மருங்கில் துன்னழகும் - பாலடுத்த 
கேழ்க்கோல மேவுதிருக் கீளழகும் அக்கீளின்
கீழ்க்கோ வணத்தின் கிளரழகும் - கீட்கோலம் 
ஒட்டிநின்ற மெய்யன்பர் உள்ள மெலாஞ்சேர்த்துக்
கட்டிநின்ற வீரக் கழலழகும் - எட்டிரண்டும் 
சித்திக்கும் யோகியர்தம் சிந்தைதனில் தேன்போன்று
தித்திக்கும் சேவடியின் சீரழகும் - சத்தித்து 

மல்வைத்த மாமறையும் மாலயனும் காண்பரிய
செல்வத் திருவடியின் சீரழகும் - சொல்வைத்த 
செம்மை மணிமலையைச் சேர்ந்த - மரகதம்போல்
அம்மையொரு பால்வாழ்ந் தருளழகும் - அம்மமிகச் 
சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மே னியினழகும்
பார்த்திருந்தால் நம்முட் பசிபோங்காண் - தீர்த்தருளம் 
கொண்டிருந்தான் பொன்மேனிக் கோலமதை நாம்தினமுங்
கண்டிருந்தால் அல்லலெலாம் கட்டறுங்காண் - தொண்டடைந்து 
பாட்டால் அவன்புகழைப் பாடுகின்றோர் பக்கநின்று
கேட்டால் வினைகள்விடை கேட்கும்காண் - நீட்டாமல் 

ஒன்னார் புரம்பொடித்த உத்தமனே என்றொருகால்
சொன்னா லுலகத் துயரறுங்காண் - எந்நாளும் 
பன்னுமுள்ளத் துள்ளாம் பரசிவமே என்றொருகால்
உன்னுமுன்னம் தீமையெலாம் ஓடிடுங்காண் - அன்னவன்றன் 
ஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன்
நீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் - ஊட்டுமவன் 
மாற்கடவு ளாமோர் மகவலறக் கண்டுதிருப்
பாற்கடலை யீந்தவருட் பான்மைதனை - நூற்கடலின் 
மத்தியில்நீ கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
புத்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முத்திநெறி 

மாணா அரக்கன் மலைக்கீழ் இருந்தேத்த
வாணாள்() வழங்கியதோர் வண்மைதனை - நாணாளும் 
நண்ணி உரைத்தும் நயந்திலைநீ அன்புகொளப்
புண்ணியருக் கீதொன்றும் போதாதோ - புண்ணியராம் 
சுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான்தெரிக்க
வந்திரப்புச் சோறளித்த வண்மைதனை - முந்தகத்தில் 
பேதமறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்படையப்
போதமுளோர்க் கீதொன்றும் போதாதோ - போதவும்நெய் 
அங்கோர் எலிதான் அருந்தவகல் தூண்டவதைச்
செங்கோலன் ஆக்கியவச் சீர்த்திதனை - இங்கோதச் 

சந்ததம்நீ கேட்டுமவன் தாள்நினையாய் அன்படையப்
புந்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முந்தவரும் 
நற்றுணையென் றேத்துமந்த நாவரசர்க் கன்றுகடற்
கற்றுணை()யோர் தெப்பமெனக் காட்டியதை - இற்றெனநீ 
மாவுலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
பூவுலகர்க் கீதொன்றும் போதாதோ - தாவுநுதல் 
கண்சுமந்தான் அன்பன் கலங்கா வகைவைகை
மண்சுமந்தான் என்றுரைக்கும் வாய்மைதனைப் - பண்புடையோர் 
மாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு
பூணவென்றால் ஈதொன்றும் போதாதோ - நீணரகத் 

தீங்குறுமா பாதகத்தைத் தீர்த்தோர் மறையவனைப்
பாங்கடையச் செய்தஅருட் பண்பதனை - ஈங்குலகர் 
துங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு
பொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ - தங்கியஇப் 
பாரறியாத் தாயாகிப் பன்றிக் குருளைகட்கு
ஊரறிய நன்முலைப்பால் ஊட்டியதைச் - சீரறிவோர் 
சொல்லிநின்றார் கேட்டும் துதிக்கின் றிலையன்பு
புல்லஎன்றால் ஈதொன்றும் போதாதோ - நல்லதிருப் 
பாத மலர்வருந்தப் பாணன் தனக்காளாய்க்
கோதில்விற கேற்றுவிலை கூறியதை - நீதியுளோர் 

சாற்றிநின்றார் கேட்டுமவன் தாள்நினையாய் மெய்யன்பில்
போற்றவென்றால் ஈதொன்றும் போதாதோ - போற்றுகின்ற 
ஆடும் கரியும் அணிலும் குரங்குமன்பு
தேடுஞ் சிலம்பியொடு சிற்றெறும்பும் - நீடுகின்ற 
பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை
ஓம்புவதற் கியார்தா முவவாதார் - சோம்புறுநீ 
வன்பென்ப தெல்லாம் மறுத்தவன்தாள் பூசிக்கும்
அன்பென்பதி யாதோ அறியாயே - அன்புடனே 
செஞ்சடைகொள் நம்பெருமான் சீர்கேட் டிரையருந்தா
தஞ்சடக்கி யோகம் அமர்ந்துலகின் - வஞ்சமற 

நாரையே முத்தியின்பம் நாடியதென் றால்மற்றை
யாரையே நாடாதார் என்றுரைப்பேன் - ஈரமிலாய் 
நீயோ சிறிதும் நினைந்திலைஅவ் வின்பமென்னை
யேயோநின் தன்மை இருந்தவிதம் - ஓயாத 
அன்புடையார் யாரினும்பேர் அன்புடையான் நம்பெருமான்
நின்புடையான் நித்தம் நிகழ்த்துகின்றேன் - உன்புடையோர் 
அன்பவன்மேல் கொண்ட தறியேன் புறச்சமயத்
தின்புடையா ரேனும் இணங்குவரே - அன்புடனே 
தாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான்
ஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் - நீவன்பால் 

நின்றாய் அலதவனை நேர்ந்துநினை யாய்பித்தர்
என்றாலும் என்சொற் கிணங்குவரே - குன்றாது 
பித்தா எனினும் பிறப்பறுப்பான் நம்முடையான்
அத்தோ()உனக்கீ தறைகின்றேன் - சற்றேனும் 
கேள்வியிலார் போலதனைக் கேளாய் கெடுகின்றாய்
வேள்வியிலார் கூட்டம் விழைகின்றாய் - வேள்வியென்ற 
வேலைவருங் காலொளித்து மேவுகின்றாய் நின்தலைக்கங்
கோலைவருங் காலிங் கொளிப்பாயே - மாலையுறும் 
இப்பார் வெறும்பூ இதுநயவேல் என்றுனக்குச்
செப்பா முனம்விரைந்து செல்கின்றாய் - அப்பாழில் 

செல்லாதே சைவநெறி செல்லென்றால் என்னுடனும்
சொல்லாது போய்மயக்கம் தோய்கின்றாய் - பொல்லாத 
அஞ்ச()ருந்தென் றாலமுதி னார்கின்றாய் விட்டிடென்றால்
நஞ்சருந்தென் றாற்போல் நலிகின்றாய் - வஞ்சகத்தில் 
ஓடுகின்றாய் மீளாமல் உன்னிச்சை யின்வழியே
ஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் - நீடுலகைச் 
சூழ்கின்றாய் வேறொன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில்
வீழ்கின்றாய் மேலொன்றில் மீள்கின்றாய் - தாழ்வொன்றே 
ஈகின்றாய் வன்னெறியில் என்னை வலதழிக்கப்
போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் - யோகின்றி 

ஒன்றைமறைக் கின்றாய்மற் றொன்றைநினைக் கின்றாயென்
நன்றைமறைக் கின்றாய் நலிகின்றாய் - வென்றிபெறும் 
சேவிற் பரமன்தாள் சேரென்றால் மற்றொருசார்
மேவிப் பலவாய் விரிகின்றாய் - பாவித்துக் 
குன்றும் உனக்கனந்தம் கோடிதெண்ட னிட்டாலும்
ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் - நன்றுருகாக் 
கல்லென்பேன் உன்னைக் கரணம் கலந்தறியாக்
கல்லென்றால் என்சொல் கடவாதே - புல்லநினை 
வல்லிரும்பென் பேன்அந்த வல்லிரும்பேல் கூடத்தில்
கொல்லன்குறிப் பைவிட்டுக் கோணாதே - அல்லலெலாம் 

கூட்டுகின்ற வன்மைக் குரங்கென்பேன் அக்குரங்கேல்
ஆட்டுகின்றோன் சொல்வழிவிட் டாடாதே - நீட்டுலகர் 
ஏசுகின்ற பேயென்பேன் எப்பேயும் அஞ்செழுத்தைப்
பேசுகின்றோர் தம்மைப் பிடியாதே - கூசுகிற்பக் 
கண்டோ ரைக் கவ்வுங் கடுஞ்சுணங்கன் என்பனது
கொண்டோ ரைக் கண்டால் குலையாதே - அண்டார்க்கும் 
பூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும்
மேவில் வயப்பட்டால் எதிராதே - நோவியற்றி 
வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்
ஏறுகின்றோன்() சொல்வழிவிட் டேறாதே - சீறுகின்ற 

வென்னடைசேர்() மற்றை விலங்கென்பேன் எவ்விலங்கும்
மன்னவன்சேர் நாட்டில் வழங்காதே - நின்னையினி 
என்னென்பேன் என்மொழியை ஏற்றனையேல் மாற்றுயர்ந்த
பொன்னென்பேன் என்வழியில் போந்திலையே - கொன்னுறநீ 
போம்வழியும் பொய்நீ புரிவதுவும் பொய்அதனால்
ஆம்விளைவும் பொய்நின் னறிவும்பொய் - தோம்விளைக்கும் 
நின்னுடலும் பொய்யிங்கு நின்தவமும் பொய்நிலையா
நின்னிலையும் பொய்யன்றி நீயும்பொய் - என்னிலிவண் 
ஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும்
வாதிலிழுத் தென்னை மயக்கினையே - தீதுறுநீ 

வன்னேர் விடங்காணின் வன்பெயரின் முன்பொருகீற்()
றென்னே அறியாமல் இட்டழைத்தேன் - கொன்னேநீ 
நோவ தொழியா நொறிற்() காம வெப்பினிடை
ஆவ தறியா தழுந்தினையே - மேவுமதில் 
உள்ளெரிய மேலாம் உணர்வும் கருகவுடல்
நள்ளெரிய நட்பின் நலம்வெதும்ப - விள்வதின்றி 
வாடிப் பிலஞ்சென்று வான்சென் றொளித்தாலும்
தேடிச் சுடுங்கொடிய தீக்கண்டாய் - ஓடிஅங்கு 
பேர்ந்தால் அலது பெருங்காமத் தீநின்னைச்
சேர்ந்தா ரையுஞ்சுடும்செந் தீக்கண்டாய் - சார்ந்தாங்கு 

சந்தீ யெனவருவார் தம்மைச் சுடுங்காமஞ்
செந்தீ யையுஞ் சுடுமோர் தீக்கண்டாய் - வந்தீங்கு 
மண்ணில் தனைக்காணா வண்ணம் நினைத்தாலும்
நண்ணித் தலைக்கேறு நஞ்சங்காண் - எண்ணற்ற 
போருறுமுட் காமப் புதுமயக்கம் நின்னுடைய
பேரறிவைக் கொள்ளைகொளும் பித்தங்காண் - சோரறிவில் 
கள்ளடைக்கும் காமக் கடுமயக்கம் மெய்ந்நெறிக்கோர்
முள்ளடைக்கும் பொல்லா முரண்கண்டாய் - அள்ளலுற 
ஏதமெலாம் தன்னுள் இடுங்காமம் பாதகத்தின்
பேதமெலாம் ஒன்றிப் பிறப்பிடங்காண் - ஆதலினால் 

வெம்மால் மடந்தையரை மேவவொணா தாங்கவர்கள்
தம்மாசை இன்னும் தவிர்ந்திலையே - இம்மாய 
மன்ற வணங்கினர்செவ் வாய்மடவார் பேதையர்கள்
என்றகொடுஞ் சொற்பொருளை எண்ணிலையே - தொன்றுலகில் 
பெண்ணென் றுரைப்பிற் பிறப்பேழும் ஆந்துயரம்
எண்ணென்ற நல்லோர்சொல் எண்ணிலையே - பெண்ணிங்கு 
மாமாத் திரையின் வருத்தனமென் றெண்ணினைஅந்()
நாமார்த்தம் ஆசையென நாடிலையே - யாமார்த்தம் 
மந்திரத்தும் பூசை மரபினுமற் றெவ்விதமாம்
தந்திரத்தும் சாயாச் சழக்கன்றோ - மந்திரத்தில் 

பேய்பிடித்தால் தீர்ந்திடுமிப் பெண்பேய் விடாதேசெந்
நாய்பிடித்தால் போலுமென்று நாடிலையே - ஆய்விலுன்றன் 
ஏழைமைஎன் னென்பேன் இவர்மயக்கம் வல்நரகின்
தோழைமையென் றந்தோ துணிந்திலையே - ஊழமைந்த 
காரிருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர்சூழல்
பேரிருளில் செல்வதனைப் பேர்த்திலையே - பாரிடையோர் 
எண்வாள் எனிலஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார்
கண்வாள் அறுப்பக் கனிந்தனையே - மண்வாழும் 
ஓரானை யைக்கண்டால் ஓடுகின்றாய் மாதர்முலை
ஈரானை யைக்கண் டிசைந்தனையே - சீரான 

வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை
வெற்பென்றால் ஏற விரைந்தனையே - பொற்பொன்றும் 
சிங்கமென்றால் வாடித் தியங்குகின்றாய் மாதரிடைச்
சிங்கமெனில் காணத் திரும்பினையே - இங்குசிறு 
பாம்பென்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதரல்குல்
பாம்பென்றால் சற்றும் பயந்திலையே - ஆம்பண்டைக் 
கீழ்க்கடலில் ஆடென்றால் கேட்கிலைநீ மாதரல்குல்
பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே - கீழ்க்கதுவும் 
கல்லென்றால் பின்னிடுவாய் காரிகையார் காற்சிலம்பு
கல்லென்றால் மேலெழும்பக் கற்றனையே - அல்அளகம் 

மையோ கருமென் மணலோஎன் பாய்மாறி
ஐயோ நரைப்ப தறிந்திலையோ - பொய்யோதி 
ஒண்பிறையே ஒண்ணுதலென் றுன்னுகின்றாய் உள்ளெலும்பாம்
வெண்பிறையன் றேயதனை விண்டிலையே - கண்புருவம் 
வில்லென்றாய் வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்
சொல்லென்றால் சொல்லத் துணியாயே - வல்லம்பில் 
கட்கு வளைஎன்றாய்க் கண்ணீர் உலர்ந்துமிக
உட்குழியும் போதில் உரைப்பாயே - கட்குலவு 
மெய்க்குமிழே நாசியென வெஃகினையால் வெண்மலத்தால்
உய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ - எய்த்தலிலா 

வள்ளையென்றாய் வார்காது வள்ளைதனக் குட்புழையோ
டுள்ளுநரம் பின்புனைவும் உண்டேயோ - வெள்ளைநகை 
முல்லையென்றாய் முல்லை முறித்தொருகோல் கொண்டுநிதம்
ஒல்லை அழுக்கெடுப்ப துண்டேயோ - நல்லதொரு 
கொவ்வை யெனஇதழைக் கொள்கின்றாய் மேல்குழம்பும்
செவ்வை இரத்தமெனத் தேர்ந்திலையே - செவ்வியகண் 
ணாடி யெனக்கவுட்கே ஆசைவைத்தாய் மேல்செழுந்தோல்
வாடியக்கால் என்னுரைக்க மாட்டுவையே - கூடியதோர் 
அந்த மதிமுகமென் றாடுகின்றாய் ஏழ்துளைகள்
எந்தமதிக் குண்டதனை எண்ணிலையே - நந்தெனவே 

கண்டமட்டும் கூறினைஅக் கண்டமட்டும் அன்றியுடல்
கொண்டமட்டும் மற்றதன்மெய்க் கூறன்றோ - விண்டவற்றைத் 
தோளென் றுரைத்துத் துடிக்கின்றாய் அவ்வேய்க்கு
மூளொன்று வெள்ளெலும்பின் மூட்டுண்டே - நாளொன்றும் 
செங்காந்தள் அங்கையெனச் செப்புகின்றாய் அம்மலர்க்குப்
பொங்காப் பலவிரலின் பூட்டுண்டே - மங்காத 
செவ்விளநீர் கொங்கையெனச் செப்பினைவல் ஊன்றடிப்பிங்
கெவ்விளநீர்க் குண்டதனை எண்ணிலையே - செவ்வைபெறும் 
செப்பென் றனைமுலையைச் சீசீ சிலந்தி()யது
துப்பென் றவர்க்கியாது சொல்லுதியே - வப்பிறுகச்() 

சூழ்ந்தமுலை மொட்டென்றே துள்ளுகின்றாய் கீழ்த்துவண்டு
வீழ்ந்தமுலைக் கென்ன விளம்புதியே - தாழ்ந்தஅவை 
மண்கட்டும் பந்தெனவே வாழ்ந்தாய் முதிர்ந்துடையாப்
புண்கட்டி என்பவர்வாய்ப் பொத்துவையே() - திண்கட்டும் 
அந்நீர்க் குரும்பை அவையென்றாய் மேலெழும்பும்
செந்நீர்ப் புடைப்பென்பார் தேர்ந்திலையே - அந்நீரார் 
கண்ணீர் தரும்பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக
வெண்ணீர் வரல்கண்டும் வெட்கிலையே - தண்ணீர்மைச் 
சாடியென்பாய் நீஅயலோர் தாதுக் கடத்திடுமேன்
மூடியென்பார் மற்றவர்வாய் மூடுதியோ - மேடதனை() 

ஆலிலையே என்பாய் அடர்குடரோ டீருளொடும்()
தோலிலையே ஆலிலைக்கென் சொல்லுதியே - நூலிடைதான் 
உண்டோ இலையோஎன் றுட்புகழ்வாய் கைதொட்டுக்
கண்டோ ர்பூட்() டுண்டென்பார் கண்டிலையே - விண்டோ ங்கும் 
ஆழ்ங்கடலென் பாய்மடவார் அல்குலினைச் சிற்சிலர்கள்
பாழ்ங்கிணறென் பாரதனைப் பார்த்திலையே - தாழ்ங்கொடிஞ்சித் 
தேராழி என்பாயச் சீக்குழியை அன்றுசிறு
நீராழி யென்பவர்க்கென் நேருதியே() - ஆராப்புன் 
நீர்வீழியை ஆசை நிலையென்றாய் வன்மலம்தான்
சோர்வழியை என்னென்று சொல்லுதியே - சார்முடைதான் 

ஆறாச் சிலைநீர்கான் ஆறாய் ஒழுக்கிடவும்
வீறாப்புண் என்று விடுத்திலையே - ஊறாக்கி 
மூலை எறும்புடன்ஈ மொய்ப்பதஞ்சி மற்றதன்மேல்
சீலையிடக் கண்டும் தெரிந்திலையே - மேலையுறு 
மேநரகம் என்றால் விதிர்ப்புறுநீ மாதரல்குல்
கோநரகம் என்றால் குலைந்திலையே - ஊனமிதைக் 
கண்டால் நமதாசை கைவிடுவார் என்றதனைத்
தண்டா தொளித்திடவும் சார்ந்தனையே - அண்டாது 
போதவிடா யாகிப் புலம்புகின்றாய் மற்றதன்பால்
மாதவிடாய் உண்டால் மதித்திலையே - மாதரவர் 

தங்குறங்கை மெல்லரம்பைத் தண்டென்றாய் தண்டூன்றி
வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே - நன்கிலவாய் 
ஏய்ந்த முழந்தாளைவரால் என்றாய் புலாற்சிறிதே
வாய்ந்து வராற்றோற்கு மதித்திலையே - சேந்தவடி 
தண்டா மரையென்றாய் தன்மை விளர்ப்படைந்தால்
வெண்டா மரையென்று மேவுதியோ - வண்டாரா 
மேனாட்டுஞ் சண்பகமே மேனியென்றாய் தீயிடுங்கால்
தீநாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ - வானாட்டும் 
மின்றேர் வடிவென்றாய் மேல்நீ உரைத்தவுளீ
தொன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண்() - ஒன்றாச்சொல் 

வேள்வா கனமென்றாய் வெய்யநமன் விட்டிடுந்தூ
தாள்வா கனமென்றால் ஆகாதோ - வேளானோன் 
காகளமாய்() இன்குரலைக் கட்டுரைத்தாய் காலனென்போன்
காகளமென் பார்க்கென் கழறுதியே - நாகளவும் 
சாயைமயில் என்றே தருக்குகின்றாய் சார்பிரம
சாயை()யஃ தென்பார்க்கென் சாற்றுதியே - சேயமலர் 
அன்ன நடைஎன்பாய் அஃதன் றருந்துகின்ற
அன்னநடை என்பார்க்கென் ஆற்றுதியே - அன்னவரை 
ஓரோ வியமென்பாய் ஓவியமேல் ஆங்கெழுபத்
தீரா யிரநாடி யாண்டுடைத்தே - பாரார்ந்த 

முன்னுமலர்க் கொம்பென்பாய் மூன்றொடரைக் கோடியெனத்
துன்னு முரோமத் துவாரமுண்டே - இன்னமுதால் 
செய்தவடி வென்பாயச் செய்கைமெய்யேல் நீயவர்கள்
வைதிடினும் மற்றதனை வையாயே - பொய்தவிராய் 
ஒள்ளிழையார் தம்முருவோர் உண்கரும்பென் றாய்சிறிது
கிள்ளியெடுத் தால்இரத்தங் கீழ்வருமே - கொள்ளுமவர் 
ஈடில்பெயர் நல்லார் எனநயந்தாய் நாய்ப்பெயர்தான்
கேடில்பெருஞ் சூரனென்பர் கேட்டிலையோ - நாடிலவர் 
மெல்லியலார் என்பாய் மிகுகருப்ப வேதனையை
வல்லியலார் யார்பொறுக்க வல்லார்காண் - வில்லியல்பூண் 

வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய் வெந்தீயில்
பாய்ந்தாலும் அங்கோர் பலனுண்டே - வேய்ந்தாங்கு 
சென்றால் அவர்பின்னர்ச் செல்கின்றாய் வெம்புலிப்பின்
சென்றாலும் அங்கோர் திறனுண்டே - சென்றாங்கு 
நின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய் கண்மூடி
நின்றாலும் அங்கோர் நிலையுண்டே - ஒன்றாது 
கண்டால் அவருடம்பைக் கட்டுகின்றாய்()கல்லணைத்துக்
கொண்டாலும் அங்கோர் குணமுண்டே - பெண்டானார் 
வைதாலும் தொண்டு வலித்தாய் பிணத்தொண்டு
செய்தாலும் அங்கோர் சிறப்புளதே - கைதாவி 

மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினைநீ
செத்தாலும் அங்கோர் சிறப்புளதே - வைத்தாடும் 
மஞ்சள் மினுக்கால் மயங்கினைநீ மற்றொழிந்து
துஞ்சுகினும் அங்கோர் சுகமுளதே - வஞ்சியரைப் 
பார்த்தாடி ஓடிப் படர்கின்றாய் வெந்நரகைப்
பார்த்தாலும் அங்கோர் பலனுண்டே - சேர்த்தார்கைத் 
தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய் வன்பூதம்
தொட்டாலும் அங்கோர் துணையுண்டே - நட்டாலும் 
தெவ்வின்மட வாரைத் திளைக்கின்றாய் தீவிடத்தை
வவ்வுகினும் அங்கோர் மதியுண்டே - செவ்விதழ்நீர் 

உண்டால் மகிழ்வாய்நீ ஒண்சிறுவர் தம்சிறுநீர்
உண்டாலும் அங்கோ ருரனுண்டே - கண்டாகக் 
கவ்வுகின்றாய் அவ்விதழைக் கார்மதுகம் வேம்பிவற்றைக்
கவ்வுகினும் அங்கோர் கதியுண்டே - அவ்விளையர் 
மென்றீயும் மிச்சில் விழைகின்றாய் நீவெறும்வாய்
மென்றாலும் அங்கோர் விளைவுண்டே - முன்றானை 
பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்கவம்பு
பட்டாலும் அங்கோர் பலனுண்டே - கிட்டாமெய்த் 
தீண்டிடிலுள் ளோங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள்முன்
தீண்டிடினும் அங்கோர் திறனுண்டே - வேண்டியவர் 

வாய்க்கிடயா தானுமொன்று வாங்குகின்றாய் மற்றதையோர்
நாய்க்கிடினும் அங்கோர் நலனுண்டே - தாக்கவர்க்காய்த் 
தேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில்
போட்டாலும் அங்கோர் புகழுண்டே - வாட்டாரைக் 
கொண்டா ருடனுணவு கொள்கின்றாய் குக்கலுடன்
உண்டாலும் அங்கோர் உறவுண்டே - மிண்டாகும் 
இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய் புன்மலத்தை
நுங்கினுமங் கோர்நல் நொறிலுண்டே() - மங்கையர்தம் 
ஏத்தா மனைகாத் திருக்கின்றாய் ஈமமது
காத்தாலும் அங்கோர் கனமுண்டே - பூத்தாழ்வோர் 

காட்டாக் குரல்கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்
கேட்டாலும் அங்கோர் கிளருண்டே - கோட்டாவி 
ஆழ்ந்தா ருடன்வாழ ஆதரித்தாய் ஆழ்ங்கடலில்
வீழ்ந்தாலும் அங்கோர் விரகுண்டே - வீழ்ந்தாருள் 
வீட்டால் முலையுமெதிர் வீட்டால் முகமுமுறக்
காட்டாநின் றார்கண்டும் காய்ந்திலையே - கூட்டாட்குச் 
செய்கை யிடும்படிதன் சீமான் தனதுபணப்
பைகையிடல் கண்டும் பயந்திலையே - சைகையது 
கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும்
செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே - எய்யாமல் 

ஈறிகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கையெலாம்
கூறுவனேல் அம்ம குடர்குழம்பும் - கூறுமிவர் 
வாயொருபால் பேச மனமொருபால் செல்லவுடல்
ஆயொருபால் செய்ய அழிவார்காண் - ஆயஇவர் 
நன்றறியார் தீதே நயப்பார் சிவதலத்தில்
சென்றறியார் பேய்க்கே சிறப்பெடுப்பார் - இன்றிவரை 
வஞ்சமென்கோ வௌ;வினையாம் வல்லியமென் கோபவத்தின்
புஞ்சமென்கோ மாநரக பூமியென்கோ - அஞ்சுறுமீர் 
வாளென்கோ வாய்க்கடங்கா மாயமென்கோ மண்முடிவு
நாளென்கோ வெய்ய நமனென்கோ - கோளென்கோ 

சாலமென்கோ வானிந்த்ர சாலமென்கோ வீறால
காலமென்கோ நின்பொல்லாக் காலமென்கோ - ஞாலமதில் 
பெண்என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்
மண்நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் - பெண்என்றால் 
பேயும் இரங்குமென்பார் பேய்ஒன்றோ தாம்பயந்த
சேயும் இரங்குமவர் தீமைக்கே - ஆயுஞ்செம் 
பொன்னால் துகிலால் புனையா விடிலவர்மெய்
என்னாகும் மற்றிதைநீ எண்ணிலையே - இன்னாமைக் 
கொத்தென்ற அம்மடவார் கூட்டம் எழுமைக்கும்
வித்தென் றறிந்துமதை விட்டிலையே - தொத்தென்று 

பாச வினைக்குட் படுத்துறும்அப் பாவையர்மேல்
ஆசையுனக் கெவ்வா றடைந்ததுவே - நேசமிலாய் 
நின்னாசை என்னென்பேன் நெய்வீழ் நெருப்பெனவே
பொன்னாசை மேன்மேலும் பொங்கினையே - பொன்னாசை 
வைத்திழந்து வீணே வயிறெரிந்து மண்ணுலகில்
எத்தனைபேர் நின்கண் எதிர்நின்றார் - தத்துகின்ற 
பொன்னுடையார் துன்பப் புணரியொன்றே அல்லதுமற்
றென்னுடையார் கண்டிங் கிருந்தனையே - பொன்னிருந்தால் 
ஆற்றன்மிகு தாயுமறி யாவகையால் வைத்திடவோர்
ஏற்றவிடம் வேண்டுமதற் கென்செய்வாய் - ஏற்றவிடம் 

வாய்த்தாலும் அங்கதனை வைத்தவிடம் காட்டாமல்
ஏய்த்தால் சிவசிவமற் றென்செய்வாய் - ஏய்க்காது 
நின்றாலும் பின்னதுதான் நீடும் கரியான
தென்றால் அரகரமற் றென்செய்வாய் - நன்றாக 
ஒன்றொருசார் நில்லென்றால் ஓடுகின்ற நீஅதனை
என்றும் புரப்பதனுக் கென்செய்வாய் - வென்றியொடு 
பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்
ஈர்த்துப் பறிக்கிலதற் கென்செய்வாய் - பேர்த்தெடுக்கக் 
கைபுகுத்தும் காலுட் கருங்குளவி செங்குளவி
எய்புகுத்தக் கொட்டிடின்மற் றென்செய்வாய் - பொய்புகுத்தும் 

பொன்காவல் பூதமது போயெடுக்கும் போதுமறித்
தென்காவல் என்றால்மற் றென்செய்வாய் - பொன்காவல் 
வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்
ஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் - மாறும்சீர் 
உன்நேயம் வேண்டி உலோபம் எனும்குறும்பன்
இன்னே வருவனதற் கென்செய்வாய் - முன்னேதும் 
இல்லா நமக்குண்டோ இல்லையோ என்னுநலம்
எல்லாம் அழியுமதற் கென்செய்வாய் - நில்லாமல் 
ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கலது
பாய்ந்தோடிப் போவதுநீ பார்த்திலையே - ஆய்ந்தோர்சொல் 

கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற
சீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே஦ பேர்த்தோடும் 
நாட்கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாளறியா
ஆட்கொல்லி என்பரிதை ஆய்ந்திலையே - கீழ்க்கொல்லைப் 
பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்றதன்மேல்
இச்சையுனக் கெவ்வா றிருந்ததுவே - இச்சையிலார் 
இட்டமலம் பட்டவிடம் எல்லாம்பொன் னாம்என்றால்
இட்டமதை விட்டற்() கிசைந்திலையே - முட்டகற்றப் 
பொன்னடப்ப தன்றியது போனகமே யாதியவாய்
என்னடுத்த தொன்றுமிஃ தெண்ணிலையே - இந்நிலத்தில் 

நீண்மயக்கம் பொன்முன் நிலையாய் உலகியலாம்
வீண்மயக்கம் என்றதனை விட்டிலையே -நீண்வலயத் 
திச்செல்வ மின்றி இயலாதேல் சிற்றுயிர்கள்
எச்செல்வம் கொண்டிங் கிருந்தனவே - வெச்சென்ற 
மண்ணாசை கொண்டனைநீ மண்ணாளும் மன்னரெலாம்
மண்ணால் அழிதல் மதித்திலையே - எண்ணாது 
மண்கொண்டார் மாண்டார்தம் மாய்ந்தவுடல் வைக்கவயல்
மண்கொண்டார் தம்மிருப்பில் வைத்திலரே - திண்கொண்ட 
விண்ணேகுங் காலங்கு வேண்டுமென ஈண்டுபிடி
மண்ணேனுங் கொண்டேக வல்லாரோ - மண்நேயம் 

என்னதென்றான் முன்னொருவன் என்னதென்றான் பின்னொருவன்
இன்னதுநீ கேட்டிங் கிருந்திலையோ - மன்னுலகில் 
கண்காணி யாய்நீயே காணியல்லாய் நீயிருந்த
மண்காணி என்று மதித்தனையே - கண்காண 
மண்காணி வேண்டி வருந்துகின்றாய் நீமேலை
விண்காணி வேண்டல் வியப்பன்றே - எண்காண 
அந்தரத்தில் நின்றாய்நீ அந்தோ நினைவிடமண்
அந்தரத்தில் நின்ற தறிந்திலையே - தந்திரத்தில் 
மண்கொடுப்பேன் என்றுரைக்கில் வைவார் சிறுவர்களும்
மண்கொடுக்கில் நீதான் மகிழ்ந்தனையே - வண்கொடுக்கும் 

வீடென்றேன் மற்றதைமண் வீடென்றே நீநினைந்தாய்
வீடென்ற சொற்பொருளை விண்டிலையே - நாடொன்றும் 
மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடனைத்தும்
கண்ணாரக் கட்டழிதல் கண்டிலையோ - மண்ணான 
மேல்வீடும் அங்குடைய வேந்தர்களும் மேல்வீட்டப்
பால்வீடும் பாழாதல் பார்த்திலையோ - மேல்வீட்டில் 
ஏறுவனே என்பாய் இயமன் கடாமிசைவந்
தேறுவனேல் உன்னாசை என்னாமோ - கூறிடும்இம் 
மண்ணளித்த வேதியனும் மண்விருப்பம் கொள்ளானேல்
எண்ணமுனக் கெவ்வா றிருந்ததுவே - மண்ணிடத்தில் 

ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் என்னிலுன்றன்
ஏகாப் பெருங்காமம் என்சொல்கேன் - போகாத 
பாபக் கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக்
கோபக் கடலில் குளித்தனையே - தாபமுறச் 
செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே() - மல்லல்பெறத் 
தன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப்
பொன்னைப்போல்போற்றிப் புகழ்ந்திலையே() - துன்னி 
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னுந்
திகழ்வாய் மையும்நீ தெளியாய்() - இகழ்வாரை 

எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோமென்
றிவ்வண்ணம் என்னைவெளி யிட்டனையே - தெவ்வென்ன 
ஓரா வெகுளி யுடையான் தவமடையான்
தீராயென் பாரதுவும் தேர்ந்திலையே - பேராநின் 
வௌ;வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால்
இவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே - செவ்வையிலாய் 
ஏய்ந்தனையன் போரிடத்தில் இன்னாமை செய்தவரைக்
காய்ந்தனைமற் றென்னபலன் கண்டனையே - வாய்ந்தறிவோர் 
எல்லா நலமும் இஃதேயென் றேத்துகின்ற
கொல்லா நலம்சிறிதுங் கொண்டிலையே - பொல்லாத 

வன்போ டிருக்கு மதியிலிநீ மன்னுயிர்க்கண்
அன்போ டிரக்கம் அடைந்திலையே - இன்போங்கு 
தூய்மையென்ப தெல்லாம் துணையாய் அணைவதுதான்
வாய்மையென்ப தொன்றே மதித்திலையே - தூய்மையிலாய் 
மானொருகை ஏந்திநின்ற வள்ளலன்பர் தங்களுளே
நானொருவன் என்று நடித்தனையே - ஆனமற்றைப் 
பாதகங்க ளெல்லாம் பழகிப் பழகியதில்
சாதகஞ்செய் வோரில் தலைநின்றாய் - பாதகத்தில் 
ஓயா விகார உணர்ச்சியினால் இவ்வுலக
மாயா விகாரம் மகிழ்ந்தனையே - சாயாது 

நீஇளமை மெய்யாய் நினைந்தாய் நினைப்பெற்ற
தாயிளமை எத்தனைநாள் தங்கியதே - ஆயிளமை 
மெய்கொடுத்த தென்பாய் விருத்தர்கட்கு நின்போல்வார்
கைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ - மெய்கொடுத்த 
கூனொடும்கைக் கோலூன்றிக் குந்தி நடைதளர்ந்து
கானடுங்க நிற்பவரைக் கண்டிலையோ - ஊனொடுங்க 
ஐயநட வென்றே அரும்புதல்வர் முன்செலப்பின்
பைய நடப்பவரைப் பார்த்திலையோ - வெய்யநமன் 
நாடழைக்கச் சேனநரி நாயழைக்க நாறுசுடு
காடழைக்க மூத்துநின்றார் கண்டிலையோ - பீடடைந்த 

மெய்யுலர்ந்து நீரின் விழியுலர்ந்து வாயுலர்ந்து
கையுலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ - மெய்யுலர்ந்தும் 
சாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ
ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ - ஆகாத 
கண்டமிது பொல்லாக் கடுநோய் எனுங்குமர
கண்டமிஃ தென்பவரைக் கண்டிலையோ - கொண்டவுடல் 
குட்டமுறக் கைகால் குறுக்குமிது பொல்லாத
குட்டமென நோவார் குறித்திலையோ - துட்டவினை 
மாலையினும் காலையினும் மத்தியினும் குத்துமிது
சூலையென நோவாரைச் சூழ்ந்திலையோ - சாலவுமித் 

தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்
மேகமிஃ தென்பாரை மேவிலையோ - தாகமுறச் 
சித்தநோய் செய்கின்ற சீதநோய் வாதமொடு
பித்தநோய் கொண்டவர்பால் பேர்ந்திலையோ - மெத்தரிய 
கைப்பிணியும் காற்பிணியும் கட்பிணியோ டெண்ணரிய
மெய்ப்பிணியும் கொண்டவரை விண்டிலையோ - எய்ப்புடைய 
முட்டூறும் கைகால் முடங்கூன் முதலாய
எட்டூறுங் கொண்டவரை எண்ணிலையோ - தட்டூறிங் 
கெண்ணற்ற துண்டேல் இளமை ஒருபொருளாய்
எண்ணப் படுமோவென் றெண்ணிலையோ - எண்ணத்தில் 

பொய்யென் றறவோர் புலம்புறவும் இவ்வுடம்பை
மெய்யென்று பொய்ம்மயக்கம் மேவினையே - கைநின்று 
கூகா எனமடவார் கூடி அழல்கண்டும்
நீகாதல் வைத்து நிகழ்ந்தனையே - மாகாதல் 
பெண்டிருந்து மாழ்கப் பிணங்கொண்டு செல்வாரைக்
கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே - பண்டிருந்த 
ஊரார் பிணத்தின் உடன்சென்று நாம்மீண்டு
நீராடல் சற்றும் நினைந்திலையே - சீராக 
இன்றிருந்தார் நாளைக் கிருப்பதுபொய் என்றறவோர்
நன்றிருந்த வார்த்தையும்நீ நாடிலையே - ஒன்றி 

உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை
மறங்கருதி அந்தோ மறந்தாய்() - கறங்கின் 
நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்
மருவும் குறட்பா மறந்தாய்() - தெருவில் 
இறந்தார் பிறந்தா ரிறந்தா ரெனுஞ்சொல்
மறந்தாய் மறந்தாய் மறந்தாய் - இறந்தார் 
பறையோசை அண்டம் படீரென் றொலிக்க
மறையோசை யன்றே மறந்தாய் - இறையோன் 
புலனைந்தும் என்றருளும் பொன்மொழியை மாயா
மலமொன்றி அந்தோ மறந்தாய்() - நிலனொன்றி 

விக்குள் எழநீர் விடுமி னெனஅயலோர்
நெக்குருகல் அந்தோ நினைந்திலையே - மிக்கனலில் 
நெய்விடல்போல் உற்றவர்கண் ணீர்விட் டழவுயிர்பல்
மெய்விடலும் கண்டனைநீ விண்டிலையே - செய்வினையின் 
வாள்கழியச் செங்கதிரோன் வான்கழிய நம்முடைய
நாள்கழிதற் கந்தோ நடுங்கிலையே - கோள்கழியும் 
நாழிகையோர் நாளாக நாடினையே நாளைஒரு
நாழிகையாய் எண்ணி நலிந்திலையே - நாழிகைமுன் 
நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான்
சென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - பின்றாது 

தொட்டார் உணவுடனே தும்மினார் அம்மஉயிர்
விட்டார் எனக்கேட்டும் வெட்கிலையே - தட்டாமல் 
உண்டார் படுத்தார் உறங்கினார் பேருறக்கம்
கொண்டார் எனக்கேட்டும் கூசிலையே - வண்தாரார் 
நேற்று மணம்புரிந்தார் நீறானார் இன்றென்று
சாற்றுவது கேட்டும் தணந்திலையே - வீற்றுறுதேர் 
ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்
சேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - சேர்ந்தாங்கு 
என்னே இருந்தார் இருமினார் ஈண்டிறந்தார்
அன்னே எனக்கேட்டும் ஆய்ந்திலையே - கொன்னே 

மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்
கருவும் பிதிர்ந்துதிரக் கண்டாய் - கருவொன் 
றொடுதிங்கள் ஐயைந்தில்() ஒவ்வொன்றில் அந்தோ
கெடுகின்ற தென்றதுவும் கேட்டாய் - படுமிந் 
நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்
பலனற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் - பலனுற்றே 
காவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக்
கோவென் றழுவார் குறித்திலையோ - நோவின்றிப் 
பாலனென்றே அன்னைமுலைப் பாலருந்தும் காலையிலே
காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ - மேலுவந்து 

பெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால்
அற்றாவி போவ தறிந்திலையோ - கற்றாயப் 
பள்ளியிடுங் காலவனைப் பார நமன்வாயில்
அள்ளியிடுந் தீமை அறிந்திலையோ - பள்ளிவிடும் 
காளைப் பருவமதில் கண்டார் இரங்கிடஅவ்
ஆளைச் சமன்கொள்வ தாய்ந்திலையோ - வேளைமண 
மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவனே
சாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையே - மேற்பிள்ளை 
மாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம்
பாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ - வீடலிஃ 

திக்கணமோ மேல்வந் திடுங்கணமோ அன்றிமற்றை
எக்கணமோ என்றார்நீ எண்ணிலையே - தொக்குறுதோல் 
கூடென்கோ இவ்வுடம்பைக் கோள்வினைநீர் ஓட்டில்விட்ட
ஏடென்கோ நீர்மேல் எழுத்தென்கோ - காடென்கோ 
பாழென்கோ ஒன்பதுவாய்ப் பாவையென்கோ வன்பிறவி
ஏழென்கோ கன்மமதற் கீடென்கோ - தாழ்மண்ணின் 
பாண்டமென்கோ வெஞ்சரக்குப் பையென்கோ பாழ்ங்கரும
காண்டமென்கோ ஆணவத்தின் கட்டென்கோ - கோண்தகையார் 
மெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ
பொய்யென்கோ மாயப் பொடியென்கோ - மெய்யென்ற 

மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித் தனருலகர்
அங்கவற்றை எண்ணா தலைந்தனையே - தங்குலகில் 
மற்றிதனை ஓம்பி வளர்க்க உழன்றனைநீ
கற்றதனை எங்கே கவிழ்த்தனையே - அற்றவரை 
இக்கட் டவிழ்த்திங் கெரிமூட் டெனக்கேட்டும்
முக்கட்டும் தேட முயன்றனையே - இக்கட்டு 
மண்பட்டு வெந்தீ மரம்பட் டிடக்கண்டும்
வெண்பட் டுடுக்க விரைந்தனையே - பண்ப ட்ட 
ஐயா அரைநாண் அவிழுமெனக் கேட்டுநின்றும்
மெய்யா பரணத்தின் மேவினையே - எய்யாமல் 

காதிற் கடுக்கன் கழற்றுமெனக் கேட்டுநின்றும்
ஏதிற் பணியினிடத் தெய்தினையே - தாதிற்குத் 
துற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும்
நற்கந்தத் தின்பால் நடந்தனையே - புற்கென்ற 
வன்சுவைத்தீ நாற்ற மலமாய் வரல்கண்டும்
இன்சுவைப்பால் எய்தி யிருந்தனையே - முன்சுவைத்துப் 
பாறுண்ட காட்டில் பலர்வெந் திடக்கண்டும்
சோறுண் டிருக்கத் துணிந்தனையே - மாறுண்டு 
கூம்புலகம் பொய்யெனநான் கூவுகின்றேன் கேட்டுமிகு
சோம்பலுடன் தூக்கந் தொடர்ந்தனையே - ஆம்பலனோர் 

நல்வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத
இல்வாழ்வை மெய்யென் றிருந்தனையே - சொல்லாவி 
ஈன்றோன் தனைநாளும் எண்ணாமல் இவ்வுடம்பை
ஈன்றோரை ஈன்றோரென் றெண்ணினையே - ஈன்றோர்கள் 
நொந்தால் உடனின்று நோவார் வினைப்பகைதான்
வந்தால் அதுநீக்க வல்லாரோ - வந்தாடல் 
உற்றசிறார் நம்மடையா தோட்டுகிற்பார் தென்றிசைவாழ்
மற்றவன்வந் தால்தடுக்க வல்லாரோ - சிற்றுணவை 
ஈங்கென்றால் வாங்கி யிடுவார் அருளமுதம்
வாங்கென்றால் வாங்கியிட வல்லாரோ - தீங்ககற்றத் 

தூண்டா மனையாதிச் சுற்றமெலாம் சுற்றியிட
நீண்டாய் அவர்நன் னெறித்துணையோ - மாண்டார்பின் 
கூடி அழத்துணையாய்க் கூடுவார் வன்னரகில்
வாடியழும் போது வருவாரோ - நீடியநீ 
இச்சீவர் தன்துணையோ ஈங்கிவர்கள் நின்துணையோ
சீச்சீ இதென்ன திறங்கண்டாய் - இச்சீவர் 
நின்னைவைத்து முன்சென்றால் நீசெய்வ தென்னவர்முன்
இந்நிலத்தில் நீசென்றால் என்செய்வர் - நின்னியல்பின் 
எத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ்
வெத்தனையோ தேகம் எடுத்தனையே - அத்தனைக்கும் 

அவ்வவ் விடங்கடொறும் அவ்வவரை ஆண்டாண்டிங்
கெவ்வௌ; விதத்தால் இழந்தனையோ - அவ்விதத்தில் 
ஒன்றேனும் நன்றாய் உணர்ந்திருத்தி யேலிவரை
இன்றே துறத்தற் கிசையாயோ - நின்றோரில் 
தாயார் மனையார் தனயரார் தம்மவரார்
நீயார் இதனை நினைந்திலையே - சேயேகில் 
ஏங்குவரே என்றாய் இயமன்வரின் நின்னுயிரை
வாங்கிமுடி யிட்டகத்தில் வைப்பாரோ - நீங்கியிவண் 
உன்தந்தை தன்றனக்கிங் கோர்தந்தை நாடுவனீ
என்தந்தை என்றுரைப்ப தெவ்வாறே - சென்றுபின்னின் 

தன்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவளெனில்
என்மனையாள் என்பதுநீ எவ்வணமே - நன்மைபெறும் 
நட்பமைந்த நன்னெறிநீ நாடா வகைதடுக்கும்
உட்பகைவர் என்றிவரை ஓர்ந்திலையே - நட்புடையாய் 
எம்மான் படைத்தஉயிர் இத்தனைக்குட் சில்லுயிர்பால்
இம்மால் அடைந்ததுநீ என்னினைந்தோ - வம்மாறில் 
எம்பந்த மேநினக்கிங் கில்லையென்றால் மற்றையவர்
தம்பந்தம் எவ்வாறு தங்கியதே - சம்பந்தர் 
அற்றவருக் கற்றசிவனாமெனுமப் பொன்மொழியை()
மற்றைமொழி போன்று மறந்தனையே - சிற்றுயிர்க்குக் 

கற்பனையில் காய்ப்புளதாய்க் காட்டும் பிரபஞ்சக்
கற்பனையை மெய்யென்று கண்டனையே - பற்பலவாம் 
தூரியத்தில்() தோன்றொலிபோல் தோன்றிக் கெடுமாயா
காரியத்தை மெய்யெனநீ கண்டனையே - சீரியற்றும் 
ஆடகத்தில் பித்தளையை ஆலித் திடுங்கபட
நாடகத்தை மெய்யென்று நம்பினையே - நீடகத்தில் 
காயவித்தை யாலக் கடவுள் இயற்றுமிந்த
மாயவித்தை மெய்யெனநீ வாழ்ந்தனையே - வாயவித்தை 
இப்படக மாயை யிருள்தமமே என்னுமொரு
முப்படகத் துள்ளே முயங்கினையே - ஒப்பிறைவன் 

ஆனவொளி யிற்பரையாம் ஆதபத்தி னால்தோன்றும்
கானலினை நீராய்க் களித்தனையே - ஆனகிரி 
யாசத்தி யென்றிடுமோர் அம்மைவிளை யாட்டெனுமிப்
பாசத்தி னுள்ளே படர்ந்தனையே - நேசத்தின் 
பொய்யொன்றுண் மெய்யிற் புகும்பால லீலைதனை
மெய்யென்று வீணில் விரிந்தனையே - பொய்யென்று 
மீட்டுநின்ற லீலா வினோத மெனுங்கதையைக்
கேட்டுநின்றும் அந்தோ கிளர்ந்தனையே - ஈட்டிநின்ற 
காலத்தை வீணில் கழிக்கும் படிமேக
சாலத்தை மெய்யாய்த் தருக்கினையே - சாலத்தில் 

கண்மையகன் றோங்குமந்த காரத்தில் செம்மாப்புற்
றுண்மையொன்றுங் காணா துழன்றனையே - வண்மையிலாய் 
இங்கு நினைப்பெரியோர் என்னினைப்பார் ஏமாப்பில்
கங்கு லினைப்பகலாய்க் கண்டனையே - தங்குறுமித் 
தேகாதி பொய்யெனவே தேர்ந்தார் உரைக்கவும்நீ
மோகாதிக் குள்ளே முயல்கின்றாய் - ஓகோநும் 
கோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்
பூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே - மாமுடிக்கும் 
வாழ்வுநிலை யன்றிமைப்பில் மாறுகின்ற தென்றுரைத்தும்
வீழ்வுகொடு()வாளா விழுகின்றாய் - தாழ்வுறநும் 

விண்டுறுங்கை வீடனலால் வேகின்ற தென்னவுட்போய்
உண்டுறங்கு கின்றோரை ஒத்தனையே - தொண்டுலகங் 
கானமுயற் கொம்பாய்க் கழிகின்ற தென்கின்றேன்
நீநயமுற் றந்தோ நிகழ்கின்றாய் - ஆனநும்மூர் 
வெள்ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை
கொள்ளத் திரிபவர்போல் கூடினையே - கொள்ளவிங்கு 
கண்டனவெல் லாம்நிலையாக் கைதவமென் கின்றேன்நீ
கொண்டவைமுற் சேரக் குறிக்கின்றாய் - உண்டழிக்க 
ஊழிவெள்ளம் வந்ததென்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்
ஊழிநன்னீ()ரோவென்பார் ஒத்தனையே - ஏழியற்றும் 

தற்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற
சொற்பனத்தில் அந்தோ துவன்றினையே - பற்பகலும் 
உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய்
கண்டனவே கண்டு களிக்கின்றாய் - கொண்டனவே 
கொண்டியங்கு கின்றாய் குறித்தனவே பிற்குறித்துப்
பண்டறியார் போலப் படர்கின்றாய் - பண்டறிந்து 
சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்றிதனை
நல்லோர்கள் கண்டால் நகையாரோ - செல்லான 
காலம்போல் இங்குநிகழ் காலமும்காண் கின்றியெதிர்
காலமற்றும் அத்திறம்மேற் காண்குவையேல் - சாலவுமுன் 

போதுசெலா முன்னமனு பூதியைநீ நாடாமல்
யாதுபயன் எண்ணி இனைகின்றாய் - தீதுசெயும் 
வீணவத்தை யெல்லாம் விளைக்கும் திறல்மூல
ஆணவத்தி னாலே அழிந்தனையே - ஆணவத்தில் 
நீயார் எனஅறியாய் நின்னெதிரில் நின்றவரை
நீயார் எனவினவி நீண்டனையே - ஓயாமல் 
ஊனின்ற ஒன்றின் உளவறியாய் அந்தோநீ
நானென்று சொல்லி நலிந்தனையே - நானென்று 
சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்றொருநீ
அல்லலுறுங் காலத் தறைகண்டாய் - அல்லவெலாம் 

நீஇங்கே நான்அங்கே நிற்கநடு வேகுதித்தால்
நீஎங்கே நான்எங்கே நின்றறிகாண் - நீஇங்கு 
ஒன்றெடுக்கச் சென்றுமற்றை ஒன்றெடுக்கக் காண்கின்றேன்
இன்றடுத்த நீஎங் கிருந்தனையே - மன்றடுத்த 
தாளா தரித்தேநின் றன்னைமறந் துய்யாது
வாளா மதத்தின் மலிகின்றாய் - கேளாயிச் 
சார்பிலொன்று விட்டொழிந்தால் சாலமகிழ் கிற்பேனான்
சோர்புகொண்டு நீதான் துயர்கின்றாய் - சார்புபெருந் 
தூவென்று நானிவணஞ் சும்மா இருந்தாலும்
வாவென் றெனையும் வலிக்கின்றாய் - ஓவுன்றன் 

சூழ்ச்சியறி யேன்நீ சுழல்கின்ற போதெல்லாம்
சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் - நீட்சியில்நீ 
காலசைத்தால் யானும் கடிதில் தலையசைப்பேன்
மாலசைத்த நின்புணர்ப்பின் வாறெதுவோ - வாலுமண்டக் 
கூவத்தில் யானோர் குடநீ கயிற்றோடும்
ஏவல்கொ ளுமேழை என்கேனோ - பாவத்தில் 
சுற்றுண்ட நீகடலில் தோன்றுசுழி யாகஅதில்
எற்றுண்ட நான்திரணம் என்கேனோ - பற்றிடுநீ 
சங்கற்ப மாஞ்சூறை தானாக நானாடும்
அங்கட் சருகென் றறைகேனோ - பொங்குற்ற 

சேலைவிரா யோர்தறியில் செல்குழைநீ பின்தொடரும்
நூலிழைநான் என்று நுவல்கேனோ - மாலிடுநீ 
துள்ளுறுப்பின் மட்பகைஞன் சுற்றாழி யாகவதின்
உள்ளுறுப்பே நானென் றுரைக்கேனோ - எள்ளுறுநீ 
பாழலைவா னேகும் பருந்தாக அப்பருந்தின்
நீழலைநான் என்று நினைகேனோ - நீழலுறா 
நின்வசம்நான் என்றுலகு நிந்தைமொழி கின்றதலால்
என்வசம்நீ என்ப திலைகண்டாய் - என்வசம்நீ 
ஆனால் எளியேனுக் காகாப் பொருளுளவோ
வானாடர் வந்து வணங்காரோ - ஆனாமல்() 

எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக்
கண்ணுதலும் அங்கைக் கனியன்றோ - எண்ணுமிடத் 
தென்செய்வே னோர்கணமும் என்சொல்வழி நில்லாமல்
கொன்செய்வேன் என்று குதிக்கின்றாய் - வன்செய்யும் 
சிந்தோடும்() ஓர்வடவைத் தீயும் கரத்தடைப்பர்
அந்தோ உனையார் அடக்குவரே - வந்தோடும் 
கச்சோதம்() என்னக் கதிரோன் தனையெடுப்பர்
அச்சோ உனையார் அடக்குவரே - வைச்சோங்கு 
மூவுலகும் சேர்த்தொருதம் முன்றானை யின்முடிவர்
ஆவுனையும் இங்கார் அடக்குவரே - மேவுபல 

தேசமென்றும் காலமென்றும் திக்கென்றும் பற்பலவாம்
வாசமென்றும் அவ்வவ் வழக்கென்றும் - மாசுடைய 
போகமென்றும் மற்றைப் புலனென்றும் பொய்அகலா
யோகமென்றும் பற்பலவாம் யூகமென்றும் - மேகமென்றும் 
வானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும்
ஊனென்றும் மற்றை உறவென்றும் - மேல்நின்ற 
சாதியென்றும் வாழ்வென்றும் தாழ்வென்றும் இவ்வுலக
நீதியென்றும் கன்ம நெறியென்றும் - ஓதரிய 
அண்டமென்றும் அண்டத் தசைவும் அசைவுமலாப்
பண்டமென்றும் சொல்பவெலாம் பன்முகங்கள் - கொண்டிருந்த 

உன்நினைவி னுள்ளே உதித்திட் டுலவிநிற்ப
எந்நினைவு கொண்டோ மற் றிவ்வுலகர் - எந்நவையும் 
தந்தோன் எவனோ சதுமுகனுண் டென்பார்கள்
அந்தோநின் செய்கை அறியாரே - அந்தோநான் 
ஆமென்றால் மற்றதனை அல்லவென்பாய் அல்லவென்றால்
ஆமென்பாய் என்னை அலைக்கின்றாய் - நாம்அன்பாய் 
என்றும் பிறந்திறவா இன்பம் அடைதுமென்றால்
நன்றென் றொருப்படுவாய் நண்ணுங்கால் - தொன்றெனவே() 
செல்கிற்பாய் செல்லாச் சிறுநடையில் தீமையெலாம்
நல்கிற்பாய் என்னேநின் நட்புடைமை - சொல்கிற்பில் 

ஆவதுவும் நின்னால் அழிவதுவும்நின் னாலெனயான்
நோவதுவும் கண்டயலில் நோக்கினையே - தாவுமெனக் 
காணவலம் பெண்ணவலம் ஆகும் பொருளவலம்
ஊணவலம் உற்றாரோ டூரவலம் - பூணவலம் 
ஊன்அவலம் அன்றியும்என் உற்றதுணை யாம்நீயும்
தான்அவலம் என்றாலென் சாற்றுவதே - நான்இவணம் 
இன்பமெது கண்டேமால் இச்சையெலாம் துன்பமதில்
துன்பம் பிறப்பென்றே சோர்கின்றேன் - வன்புடைய 
இப்பிறவித் துன்பத்தி னும்திதியில் துன்பமது
செப்பரிதாம் என்றே திகைக்கின்றேன் - செப்பிறப்பின் 

ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்
வாயாகி னும்போத மாட்டாதேல் - ஏஏநாம் 
செய்வதென்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம்நான்
நைவதெல்லாம் கண்டு நடந்தனையே - கைவருமிவ் 
இல்லிக் குடமுடைந்தால் யாதாமென் றுன்னுடன்யான்
சொல்லித் திரிந்துமெனைச் சூழ்ந்திலையே - வல்இயமன் 
நாளையோ இன்றோ நடக்கின்ற நாட்களிலெவ்
வேளையோ தூது விடில்அவர்கள் - கேளையோ 
நல்லோம் எனினும் நடவார் நடவார்நாம்
செல்லோம் எனினுமது செல்லாதே - வல்லீர்யாம் 

இன்சொலினோம் இன்றிங் கிருந்துவரு வோம்எனயாம்
என்சொலினும் அச்சொலெலாம் ஏலாதே - மன்சொலுடைத் 
தாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று
நாமறைவோம் என்றல் நடவாதே - நாமிவணம் 
அந்நாள் வருமுன்னர் ஆதி அருளடையும்
நன்னாள் அடைதற்கு நாடுதுங்காண் - என்னாநின் 
றோதுகின்றேன் கேட்டும் உறார்போன் றுலகியலில்
போதுகின்றாய் யாது புரிகிற்பேன் - தீதுநன்றோ 
டேற்றவடி நாள்உறவாம் என்னைவிட்டுத் தாமதமா
நேற்றையுற வோடுறவு நேர்ந்தனையே - சாற்றுமந்த 

தாமதமே ஓரவித்தை தாமதமே ஆவரணம்
தாமதமே மோக சமுத்திரம்காண் - தாமதமென் 
றையோ ஒருநீ அதனோடு கூடினையால்
பொய்யோநாம் என்று புகன்றதுவே - கையாமல் 
ஒன்னலர்போல் கூடுவா ரோடொருநீ கூடுங்கால்
என்னைநினை யாயென்சொ லெண்ணுதியோ - பன்னுறுநின் 
தீதெல்லாம் நானாதி சேடர்பல ராய்ப்பிரமன்
போதெல்லாம் சொல்லிடினும் போதாதே - ஆதலினால் 
வைகின்றேன் வாழ்த்தாய் மதித்தொருநீ செய்வதெல்லாம்
செய்கின்றாய் ஈதோர் திறமன்றே - உய்கிற்பான் 

வாடுகின்றேன் நின்னை மதித்தொருநான் நீமலத்தை
நாடுகின்றாய் ஈதோர் நலமன்றே - கூடுகின்ற 
ஈண்டோ ர் அணுவாய் இருந்தநீ எண்டிசைபோல்
நீண்டாய் இஃதோர் நெறியன்றே - வேண்டாநீ 
மற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை
முற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே - சுற்றிமனம் 
தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு
மானடங்கொள் பாத மலர்வாய்க்கும் - வானடங்க 
எல்லா நலமும் இதனால் எனமறைகள்
எல்லாம் நின்சீரே எடுத்தியம்பும் - எல்லார்க்கும் 

மாகமங்கொண் டுற்ற மனோலயமே வான்கதியென்
றாமகங்கள் நின்சீர் அறைந்திடுங்காண் - ஆகுமிந்த 
நன்மை பெறுமேன்மை நண்ணியநீ நின்னுடைய
தன்மைவிடல் அந்தோ சதுரலஇப் - புன்மையெலாம் 
விட்டொழித்து நான்மொழியும் மெய்ச்சுகத்தை நண்ணுதிநீ
இட்டிழைத்த அச்சுகந்தான் யாதென்னில் - கட்டழித்த 
வேடம் சுகமென்றும் மெய்யுணர்வை யின்றிநின்ற
மூடம் சுகமென்றும் முன்பலவாம் - தோடம்செய் 
போகம் சுகமென்றும் போகம் தரும்கரும
யோகம் சுகமென்றும் உண்டிலையென் - றாகஞ்செய் 

போதம் சுகமென்றும் பொன்றல்சுகம் என்றும்விந்து
நாதம் சுகமென்றும் நாம்பொருளென் - றோதலஃ 
தொன்றே சுகமென்றும் உட்கண் டிருக்குமந்த
நன்றே சுகமென்றும் நாம்புறத்தில் - சென்றேகண் 
டாற்றல் சுகமென்றும் அன்பறியாச் சூனியமே
ஏற்ற சுகமென்றும் இவ்வண்ணம் - ஏற்றபடி 
வெல்லுகின்றோர் போன்று விரிநீர் உலகிடையே
சொல்லுகின்றோர் சொல்லும் சுகமன்று - சொல்லுகின்ற 
வானாதி தத்துவங்கள் மாய்த்தாண் டுறுகின்ற
நானாதி மூன்றிலொன்று நாடாமல் - ஆனாமை 

எள்ளும் பகலும் இரவுமிலா ஓரிடத்தில்
உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் - வள்ளலென 
வாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும்
சூழும் சுகமே சுகம்கண்டாய் - சூழ்வதனுக் 
கெவ்வா றிருந்தால் இயலும் எனிலம்ம
இவ்வா றிருந்தால் இயலாதால் - செவ்வாற்றில் 
பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது
பற்றற்றால் அன்றிப் பலியாதால் - பற்றற்றல் 
வேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்க
வாதனைபோய் நீங்கிலன்றி வாராதால் - வாதனையும் 

ஈனமந்தோ இவ்வுலகம் என்றருளை நாடுகின்ற
ஞானம்வந்தால் அன்றி நலியாதால் - ஞானமது 
போகமுற்றும் பொய்யெனவே போதும் அனித்தியவி
வேகமுற்றால் அன்றி விளங்காதால் - ஆகவஃ 
துண்ணவந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடுமோர்
எண்ணம்வந்தால் அன்றி இசையாதால் - எண்ணமது 
பங்கமடைந் தார்அவையைப் பாராது சாதுக்கள்
சங்கமடைந் தாலன்றிச் சாராதால் - இங்கதனால் 
வீழ்முகத்த ராகிநிதம் வெண்ணீ றணிந்தறியாப்
பாழ்முகத்தோர் தம்பால் படர்ந்துறையேல் - பாழ்முகத்தில் 

பேயாட உள்ளறியாப் பித்தாட நின்னுடனே
வாயாடு வோர்பால் மருவிநில்லேல் - நீயாடிப் 
பேதித் திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே
வாதித் திடுவோர்பால் வாய்ந்துறையேல் - சாதித்துச் 
சைவமெங்கே வெண்ணீற்றின் சார்பெங்கே மெய்யான
தெய்வமெங்கே என்பவரைச் சேர்ந்துறையேல் - உய்வதெங்கே 
தீராச் சிவநிந்தை செய்துசிறு தேவர்களை
நேராய்ப் பிதற்றுவர்பால் நேர்ந்துறையேல் - ஓராமல் 
எள்ளென்றும் தெய்வமென்ப தில்லை இதுதெளிந்து
கொள்ளென்றும் துள்ளுகின்றோர் கூட்டமுறேல் - நள்ளொன்று 

நாமென்றும் நம்மையன்றி நண்ணும் பிரமமில்லை
ஆமென்றும் சொல்பவர்பால் ஆர்ந்துறையேல் - தாமொன்ற 
எல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும்
பொல்லா வலக்காரர் பொய்உகவேல் - புல்லாக 
அற்பமே மற்றவெலாம் ஆயிலழி() யாக்காய
கற்பமே வத்துவென்பார் கண்ணடையேல் - சிற்சிலவாம் 
சித்திகளே வத்துவென்போர்ச் சேர்ந்துறையேல் பன்மாயா
சத்திகளே வத்துவென்போர் சார்படையேல் - பொத்தியஇச் 
சன்மமே தோற்றும் தரமாம் திரமனித்த
கன்மமே வத்துவென்போர் கண்ணுறையேல் - கன்மமிகு 

மாகம் கதியென்பார் மாட்டுறையேல் பல்போக
யோகம் பொருளென்பா ரூடுறையேல் - ஏகம்கொள் 
மண்ணென்பார் வானென்பார் வாய்முச் சுடரென்பார்
பெண்ணென்பார் மற்றவர்தம் பேருரையேல் - மண்ணின்பால் 
மன்னுரையாச் சில்லோர் மரந்தெய்வம் என்பார்மற்
றென்னுரையார் ஈண்டவர்பால் எய்தியிடேல் - மன்நலங்கள் 
பூத்தால் சிறுவர்களும் பூசா பலம்என்பார்
தேற்றார் சிவபூசை செய்யாராய்ப் - பூத்தாவி 
வீறுகின்ற பூசையிலென் வீண்என்று வீண்பாழ்வாய்க்
கூறுகின்ற பேயர்கள்பால் கூடியுறேல் - மாறுகின்ற 

நீட்கோல வாழ்க்கையெலாம் நீத்திடுவோன் பொன்அறைக்குத்
தாட்கோல் இடுவாரைச் சார்ந்துறையேல் - நீட்கோல  
மெய்யொழுக்கத் தார்போல் வெளிநின் றகத்தொழியாப்
பொய்யொழுக்கத் தார்பால் பொருந்தியுறேல் - பொய்யொழுக்கில் 
பொய்ந்நூல் பதறிப் புலம்புகின்ற பித்தர்கள்பால்
அந்நூல் விரும்பி அடைந்தலையேல் - கைந்நேர்ந்து 
கோடாது கோடி கொடுத்தாலும் சைவநெறி
நாடா தவரவையை நண்ணியிடேல் - கோடாது 
கொல்லா விரதமது கொள்ளாரைக் காணிலொரு
புல்லாக எண்ணிப் புறம்பொழிக - எல்லாமும் 

ஆகநவில் கின்றதென்நம் ஐயனுக்கன் பில்லாரை
நீகனவி லேனும் நினையற்க - ஏகனடிக் 
கன்பே வடிவாய் அருளே உயிராய்ப்பே
ரின்பே உணர்வாய் இசைந்தாரும் - அன்பாகிக் 
கண்டிகையே பூணிற் கலவையே வெண்ணீறாய்க்
கொண்டிகவாச் சார்பு குறித்தாரும் - தொண்டுடனே 
வாய்மலரால் மாலை வகுத்தலொடு நம்மிறைக்குத்
தூய்மலரால் மாலை தொடுப்பாரும் - சார்மலரோன் 
ஏர்நந்த னப்பணிகண் டிச்சையுற நம்மிறைக்குச்
சீர்நந்த னப்பணிகள் செய்வோரும் - நார்நந்தாத் 

தீயின்மெழு காச்சிந்தை சேர்ந்துருகி நம்மிறைவாழ்
கோயில்மெழு காநின்ற கொள்கையரும் - மேயினரைத் 
தாயில் வளர்க்கும் தயவுடைய நம்பெருமான்
கோயில் விளக்கும் குணத்தோரும் - தூயஅருள் 
இன்புடனே தீபமுதல் எல்லாச் சரியைகளும்
அன்புடனே செய்தங் கமர்வாரும் - அன்புடனே 
அண்ணியமேல் அன்பர்க் கமுதீத லாதிசிவ
புண்ணியமே நாளும் புரிவோரும் - புண்ணியமாம் 
தேனே அமுதே சிவமே சிவமேஎம்
மானேஎன் றேத்தி மகிழ்வாரும் - வானான  

மன்னே அருட்கடலே மாணிக்க மேஎங்கள்
அன்னேஎன் றுன்னி அமர்வோரும் - நன்னேயப் 
பண்ணீர் மொழியால் பரிந்தேத்தி ஆனந்தக்
கண்ணீர்கொண் டுள்ளம் களிப்போரும் - உண்ணீரில் 
பண்டுகண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்மேனி
கண்டுகண்டு நாளும் களிப்போரும் - தொண்டடையும் 
பொற்பதிகம் என்றெண்ணிப் போற்றிஒரு மூவர்களின்
சொற்பதிகம் கொண்டு துதிப்போரும் - சொற்பனத்தும் 
மாசகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்றதிரு
வாசகத்தை வாயால் மலர்வோரும் - வாசகத்தின் 

மன்னிசைப்பால் மேலோர் வகுத்தேத்தி நின்றதிரு
இன்னிசைப்பா ஆதி இசைப்போரும் - மன்னிசைப்பின் 
நல்வாழ் வருளுகின்ற நம்பெருமான் மான்மியங்கள்
சொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் - சொல்வாய்ந்த 
தாதாவென் றன்புடனே சாமகீ தங்கள்முதல்
வேதாக மங்கள் விரிப்போரும் - வேதாந்தம் 
சேர்ந்தோர்க் கருளும் சிவமே பொருளென்று
தேர்ந்தே சிவபூசை செய்வோரும் - ஆர்ந்தேத்தி 
நன்னெஞ்சே கோயிலென நம்பெருமான் தன்னைவைத்து
மன்னும் சிவநேயம் வாய்ந்தோரும் - முன்அயன்றன் 

அஞ்செழுத்தெல் லாம்கேட்கில் அஞ்செழுத்தாம் எம்பெருமான்
அஞ்செழுத்தால் அர்ச்சித் தமர்வோரும் - அஞ்செனவே 
விஞ்சும் பொறியின் விடயமெலாம் நம்பெருமான்
செஞ்சுந் தரப்பதத்தில் சேர்த்தோரும் - வஞ்சம்செய் 
பொய்வே தனைநீக்கும் புண்ணியன்பால் தம்முயிரை
நைவே தனமாக்கும் நல்லோரும் - செய்வேலை 
நீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான்
ஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் - வாடலறத்  
தூய நனவிற் சுழுத்தியொடு நம்பெருமான்
நேயம் நிகழ்த்தும் நெறியோரும் - மாயமுறு 

மானதுவாய் நின்ற வயம்நீக்கித் தானற்றுத்
தானதுவாய் நிற்கும் தகையோரும் - வானமதில் 
வானங்கண் டாடும் மயில்போன்று நம்பெருமான்
தானங்கண் டாடும் தவத்தோரும் - மோனமொடு 
தாழ்சடையும் நீறும் சரிகோவ ணக்கீளும்
வாழ்சிவமும் கொண்டு வதிவோரும் - ஆழ்நிலைய 
வாரியலை போன்றசுத்த மாயையினால் ஆம்பூத
காரியங்க ளாதியெலாம் கண்டொழித்து - ஊர்இயங்கத் 
தஞ்சம் தருமலரோன் தத்துவமாம் பூதங்கள்
ஐஞ்சும் பொறியஞ்சும் அஞ்சறிவும் - அஞ்செனுமோர் 

வாக்குமுதல் ஐஞ்சுமற்று மாலோன்தன் தத்துவமாம்
ஊக்கும் கலைமுதலாம் ஓரேழும் - நீக்கிஅப்பால் 
மேவி விளங்குசுத்த வித்தைமுதல் நாதமட்டும்
தாவி வயங்குசுத்த தத்துவத்தில் - மேவிஅகன் 
றப்பால் அருள்கண் டருளால் தமைத்தாம்கண்
டப்பால் பரவெளிகண் டப்பாலுக் - கப்பாலும் 
தீராச் சுயமாய்ச் சிதானந்த மாம்ஒளியைப்
பாரா இருந்த படியிருந்து - பேராது 
கண்டதுவென் றொன்றும் கலவாது தாம்கலந்து
கொண்டசிவ யோகியராம் கொற்றவரும் - அண்டரிய 

சத்துவத்தில் சத்துவமே தம்முருவாய்க் கொண்டுபர
தத்துவத்தின் நிற்கும் தகவோரும் - அத்துவத்தில் 
தீதும் சுகமும் சிவன்செயலென் றெண்ணிவந்த
யாதும் சமமா இருப்போரும் - கோதுபடக் 
கூறும் குறியும் குணமும் குலமுமடி
ஈறும் கடையும் இகந்தோரும் - வீறுகின்ற 
சேந்தி னடைந்தவெலாஞ் சீரணிக்கச் சேர்சித்த
சாந்தி யுடனே சரிப்போரும் - சாந்திபெறத் 
தம்மையுறும் சித்தெவையும் தாமுவத்தல் செய்யாமல்
செம்மையுடன் வாழும் திறலோரும் - எம்மையினும் 

ஆராமை ஓங்கும் அவாக்கடல்நீர் மான்குளம்பின்
நீராக நீந்தி நிலைத்தோரும் - சேராது 
தம்பொருளைக் கண்டே சதானந்த வீட்டினிடைச்
செம்பொருளைச் சார்ந்த திறத்தோரும் - மண்பொருள்போய்த் 
தாயர் எனமாதர் தம்மையெண்ணிப் பாலர்பித்தர்
பேயரென நண்ணும் பெரியோரு - மீயதனின் 
எய்ப்பரிசாம் ஓர்திரணம் எவ்வுலகும் செய்தளிக்க
மெய்ப்பரிசஞ் செய்யவல்ல வித்தகரும் - மெய்ப்படவே 
யாவும் அறிந்தும் அறியார்போன் றெப்பொழுதும்
சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் - ஓவலின்றி 

வைதிடினும் வாழ்கஎன வாழ்த்தி உபசாரம்
செய்திடினும் தன்மை திறம்பாரும் - மெய்வகையில் 
தேறா வுலகம் சிவமயமாய்க் கண்டெங்கும்
ஏறா திழியா திருப்போரும் - மாறாது 
மோனந்தான் கொண்டு முடிந்தவிடத் தோங்குபர
மானந்தா தீதத் தமர்ந்தோரும் - தாம்நந்தாச் 
சாதுக்கள் ஆமவர்தம் சங்க மகத்துவத்தைச்
சாதுக்க ளன்றியெவர் தாமறிவார் - நீதுக்கம் 
நீங்கிஅன்னோர் சங்கத்தில் நின்றுமகிழ்ந் தேத்திநிதம்
ஆங்கவர்தாட் குற்றேவல் ஆய்ந்தியற்றி - ஓங்குசிவ 

பஞ்சாட் சரத்தைப் பகரருளே நாவாக
எஞ்சாப் பரிவுடனே எண்ணியருள் - செஞ்சோதித் 
தாதொன்று தும்பைமுடித் தாணுஅடி யொன்றிமற்றை
யாதொன்றும் நோக்கா தமைந்திடுக - தீதென்ற 
பாழ்வாழ்வு நீங்கப் பதிவாழ்வில் எஞ்ஞான்றும்
வாழ்வாய்என் னோடும் மகிழ்ந்து