2076
பரமாகிச் சூக்குமமாய்த் துலெ மாகிப்

பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம்
சிரமாகித் திருவருளாம் வெளியாய் ஆன்ம

சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித்
திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச்

சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி
அரமாகி ஆனந்த போத மாகி

ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே   
2077
இந்தியமாய்க் கரணாதி அனைத்து மாகி

இயல்புருட னாய்க்கால பரமு மாகிப்
பந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால்

பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி
வந்தஉப சாந்தமதாய் மவுன மாகி

மகாமவுன நிலையாகி வயங்கா நின்ற
அந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும்

அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே   
2078
நின்மயமாய் என்மயமாய் ஒன்றுங் காட்டா

நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம்
தன்மயமாய்த் தற்பரமாய் விமல மாகித்

தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகச மாகிச்
சின்மயமாய்ச் சிற்பரமாய் அசல மாகிச்

சிற்சொலித மாய்அகண்ட சிவமாய் எங்கும்
மன்மயமாய் வாசகா தீத மாகி

மனாதீத மாய்அமர்ந்த மவுனத் தேவே   
2079
அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்

அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்

கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே

ஊறுகின்ற தௌ;ளமுத ஊற லாகிப்
பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்

பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே   
2080
வாயாகி வாயிறந்த மவுன மாகி

மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக்
காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக்

கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித்

தானாகி நானாகிச் சகல மாகி
ஓயாத சத்தியெலாம் உடைய தாகி

ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே