2086
வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த

வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித்
தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச்

சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப்

பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி
நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி

நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே   
2087
சகமாகிச் சீவனாய் ஈச னாகிச்

சதுமுகனாய்த் திருமாலாய் அரன்றா னாகி
மகமாயை முதலாய்க்கூ டத்த னாகி

வான்பிரம மாகிஅல்லா வழக்கு மாகி
இகமாகிப் பதமாகிச் சமய கோடி

எத்தனையு மாகிஅவை எட்டா வான்கற்
பகமாகிப் பரமாகிப் பரம மாகிப்

பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே   
2088
விதியாகி அரியாகிக் கிரீச னாகி

விளங்குமகேச் சுரனாகி விமல மான
நிதியாகுஞ் சதாசிவனாய் விந்து வாகி

நிகழ்நாத மாய்ப்பரையாய் நிமலா னந்தப்
பதியாகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப்

பக்கமிரண் டாயிரண்டும் பகரா தாகிக்
கதியாகி அளவிறந்த கதிக ளெல்லாம்

கடந்துநின்று நிறைந்தபெருங் கருணைத் தேவே   
2089
மானாகி மோகினியாய் விந்து மாகி

மற்றவையால் காணாத வான மாகி
நானாகி நானல்ல னாகி நானே

நானாகும் பதமாகி நான்றான் கண்ட
தானாகித் தானல்ல னாகித் தானே

தானாகும் பதமாகிச் சகச ஞான
வானாகி வான்நடுவில் வயங்கு கின்ற

மவுனநிலை யாகியெங்கும் வளருந் தேவே    
2090
மந்திரமாய்ப் பதமாகி வன்ன மாகி

வளர்கலையாய்த் தத்துவமாய்ப் புவன மாகிச்
சந்திரனாய் இந்திரனாய் இரவி யாகித்

தானவராய் வானவராய்த் தயங்கா நின்ற
தந்திரமாய் இவையொன்றும் அல்ல வாகித்

தானாகித் தனதாகித் தானான் காட்டா
அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய்

அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே