2101
யோகமே யோகத்தின் பயனே யோகத்

தொருமுதலே யோகத்தின் ஓங்குந் தூய
போகமே போகத்தின் பொலிவே போகம்

புரிந்தருளும் புண்ணியமே புனித ஞான
யாகமே யாகத்தின் விளைவே யாகத்

திறையேஅவ் விறைபுரியும் இன்பே அன்பர்
மோகமே மோகமெலாம் அழித்து வீறு

மோனமே மோனத்தின் முளைத்த தேவே   
2102
காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்

கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன

வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த

அறிவேமெய் அன்பேதௌ; ளமுதே நல்ல
சூட்சியே() சூட்சியெலாம் கடந்து நின்ற

துரியமே துரியமுடிச் சோதித் தேவே   
2103
மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான

வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற
குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக்

கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப்
பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப்

பெம்மானே செங்கமலப் பிரானே இந்த
இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற

இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே   
2104
கோதகன்ற யோகர்மனக் குகையில் வாழும்

குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச
வாதகன்ற ஞானியர்தம் மதியில் ஊறும்

வானமுதே ஆனந்த மழையே மாயை
வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான

வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில்
தீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த

செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே   
2105
அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்

ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்

பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த

ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு

தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே