2146
என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற

என்தாயே என்குருவே எளியேன் இங்கே
தன்னரசே செலுத்திஎங்கும் உழலா நின்ற

சஞ்சலநெஞ் சகத்தாலே தயங்கி அந்தோ
மின்னரசே பெண்ணமுதே என்று மாதர்

வெய்யசிறு நீர்க்குழிக்கண் விழவே எண்ணி
கொன்னரைசேர் கிழக்குருடன் கோல்போல் வீணே

குப்புறுகின் றேன்மயலில் கொடிய னேனே   
2147
அல்விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத்

தமர்ந்தருளும் சிவகுருவே அடியேன் இங்கே
இல்விலங்கு மடந்தையென்றே எந்தாய் அந்த

இருப்புவிலங் கினைஒழித்தும் என்னே பின்னும்
மல்விலங்கு பரத்தையர்தம் ஆசை என்னும்

வல்விலங்கு பூண்டந்தோ மயங்கி நின்றேன்
புல்விலங்கும் இதுசெய்யா ஓகோ இந்தப்

புலைநாயேன் பிழைபொறுக்கில் புதிதே அன்றோ   
2148
வன்கொடுமை மலநீக்கி அடியார் தம்மை

வாழ்விக்குங் குருவேநின் மலர்த்தாள் எண்ண
முன்கொடுசென் றிடுமடியேன் தன்னை இந்த

மூடமனம் இவ்வுலக முயற்சி நாடிப்
பின்கொடுசென் றலைத்திழுக்கு() தந்தோ நாயேன்

பேய்பிடித்த பித்தனைப்போல் பிதற்றா நின்றேன்
என்கொடுமை என்பாவம் எந்தாய் எந்தாய்

என்னுரைப்பேன் எங்குறுவேன் என்செய் வேனே   
2149
உய்குவித்து() மெய்யடியார் தம்மை எல்லாம்

உண்மைநிலை பெறஅருளும் உடையாய் இங்கே
மைகுவித்த நெடுங்கண்ணார் மயக்கில் ஆழ்ந்து

வருந்துகின்றேன் அல்லால்உன் மலர்த்தாள் எண்ணிக்
கைகுவித்துக் கண்களில்நீர் பொழிந்து நானோர்

கணமேனும் கருதிநினைக் கலந்த துண்டோ 
செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கி லாயோ

திருவுளத்தை அறியேன்என் செய்கு வேனே   
2150
அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின்

றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த
மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ

மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே
இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல்

எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி
உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன்

உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே