2486
) 
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்

ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
ஸோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்

தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்
பூதிமலை சுத்த அனு பூதிமலை எல்லாம்

பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்

பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே 
 சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த

சாந்தர் உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்

சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநல்

அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்

பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே 
 நேரிசை வெண்பா 
 ஆறு விளங்க அணிகிளர்தேர் ஊர்ந்தஉலாப்
பேறு விளங்கஉளம் பெற்றதுமன் - கூறுகின்ற
ஒன்றிரண்டு தாறுபுடை ஓங்கும் பழமலையார்
மின்திரண்டு நின்றசடை மேல் 
திருச்சிற்றம்பலம்

---------------------------------

--------------------------------------------------------------------------------

 பெரியநாயகியார் தோத்திரம் (
2487
- ) 
 திருவதிகை வீரட்டானம் 
 கலிவிருத்தம் 
 உரிய நாயகி யோங்கதி கைப்பதித்
துரிய நாயகி தூயவீ ரட்டற்கே
பிரிய நாயகி பேரருள் நாயகி
பெரிய நாயகி பெற்றியைப் பேசுவாம் 
 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2488
உலகந் தழைக்க உயிர்தழைக்க உணர்வு தழைக்க ஒளிதழைக்க

உருவந் தழைத்த பசுங்கொடியே உள்ளத் தினிக்கும் தௌ;ளமுதே
திலகந் தழைத்த நுதற்கரும்பே செல்வத் திருவே கலைக்குருவே

சிறக்கும் மலைப்பெண் மணியேமா தேவி இச்சை ஞானமொடு
வலகந் தழைக்குங் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரைஎன்ன

வயங்கும் ஒருபே ரருளேஎம் மதியை விளக்கும் மணிவிளக்கே
அலகந் தழைக்குந் திருவதிகை ஐயர் விரும்பும் மெய்யுறவே

அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே 
2489

 தன்னேர் அறியாப் பரவெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்

சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்குத் தனித்தாயே
மின்னே மின்னேர் இடைப்பிடியே விளங்கும் இதய மலர்அனமே

வேதம் புகலும் பசுங்கிளியே விமலக் குயிலே இளமயிலே
பொன்னே எல்லாம் வல்லதிரி புரையே பரையே பூரணமே

புனித மான புண்ணியமே பொற்பே கற்ப கப்பூவே
அன்னே முன்னே என்னேயத் தமர்ந்த அதிகை அருட்சிவையே

அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே 
திருச்சிற்றம்பலம்
---------------------------------

--------------------------------------------------------------------------------

 திருவண்ணாமலைப் பதிகம் (
2490
- ) 
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 வளங்கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால்அயன் வழுத்தும்
குளங்கிளர் நுதலும் களங்கிளர் மணியும் குலவுதிண் புயமும்அம் புயத்தின்
தளங்கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்கநீ இருத்தல்கண் டுவத்தல்
உளங்கிளர் அமுதே துளங்குநெஞ் சகனேன் உற்றரு ணையில்பெற அருளே