2556
திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
இருமா தவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
குருமா மலர்ப்பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே  
திருச்சிற்றம்பலம்

--------------------------

--------------------------------------------------------------------------------

தெய்வத் தனித் திருமாலை (
2557
- ) 
 வஞ்சித்துறை
 
  ஐங்கரன் அடிமலர்
இங்குற நினைதிநின்
பொங்குறு துயரறும்
மங்கலின் மனனனே 
 
 குறள் வெண்செந்துறை
 
2558
திருமால் அறியாச் சேவடி யாலென்
கருமால் அறுக்குங் கணபதி சரணம் 
 
 கலிவிருத்தம்
 
2559
துதிபெறு கணபதி இணையடி மலரும்
பதிதரு சரவண பவன்மல ரடியுங்
கதிதரு பரசிவன்இயலணி கழலும்
மதியுற மனனிடை மருவுது மிகவே   
2560
அருளுறுங் கயமுகத் தண்ணல் பாதமும்
பொருளுறு சண்முகப் புனிதன் தாள்களும்
தெருளுறு சிவபிரான் செம்பொற் கஞ்சமும்
மருளற நாடொறும் வணங்கி வாழ்த்துவாம்