2561
அற்புதக் கணபதி அமல போற்றியே
தற்பர சண்முக சாமி போற்றியே
சிற்பர சிவமகா தேவ போற்றியே
பொற்பமர் கௌரிநிற் போற்றி போற்றியே  
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2562
மாதங்க முகத்தோன்நங் கணபதிதன் செங்கமல மலர்த்தாள் போற்றி
ஏதங்கள் அறுத்தருளுங் குமரகுருபரன்பாத இணைகள் போற்றி
தாதங்க மலர்க்கொன்றைச் சடையுடைய சிவபெருமான் சரணம் போற்றி
சீதங்கொள் மலர்க்குழலாள் சிவகாம சவுந்தரியின் திருத்தாள் போற்றி  
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2563
) 
 வஞ்சித்துறை
 
 ஐங்கரன் அடிமலர்
இங்குற நினைதிநின்
பொங்குறு துயரறும்
மங்கலின் மனனனே 
 
 குறள் வெண்செந்துறை
 
 திருமால் அறியாச் சேவடி யாலென்
கருமால் அறுக்குங் கணபதி சரணம் 
 
 கலிவிருத்தம்
 
 துதிபெறு கணபதி இணையடி மலரும்
பதிதரு சரவண பவன்மல ரடியுங்
கதிதரு பரசிவன்இயலணி கழலும்
மதியுற மனனிடை மருவுது மிகவே  
 அருளுறுங் கயமுகத் தண்ணல் பாதமும்
பொருளுறு சண்முகப் புனிதன் தாள்களும்
தெருளுறு சிவபிரான் செம்பொற் கஞ்சமும்
மருளற நாடொறும் வணங்கி வாழ்த்துவாம்  
 அற்புதக் கணபதி அமல போற்றியே
தற்பர சண்முக சாமி போற்றியே
சிற்பர சிவமகா தேவ போற்றியே
பொற்பமர் கௌரிநிற் போற்றி போற்றியே  
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 மாதங்க முகத்தோன்நங் கணபதிதன் செங்கமல மலர்த்தாள் போற்றி
ஏதங்கள் அறுத்தருளுங் குமரகுருபரன்பாத இணைகள் போற்றி
தாதங்க மலர்க்கொன்றைச் சடையுடைய சிவபெருமான் சரணம் போற்றி
சீதங்கொள் மலர்க்குழலாள் சிவகாம சவுந்தரியின் திருத்தாள் போற்றி  
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 கலைநிறை கணபதி சரணஞ் சரணம்

கஜமுக குணபதி சரணஞ் சரணம்
தலைவநின் இணையடி சரணஞ் சரணம்

சரவண பவகுக சரணஞ் சரணம்
சிலைமலை யுடையவ சரணஞ் சரணம்

சிவசிவ சிவசிவ சரணஞ் சரணம்
உலைவறும் ஒருபரை சரணஞ் சரணம்

உமைசிவை அம்பிகை சரணஞ் சரணம்  
திருச்சிற்றம்பலம் 
---------------

--------------------------------------------------------------------------------

மங்களம் 
 சிந்து 
2564
புங்கவர் புகழுமாதங்கமு கந்திகழ்
எங்கள் கணேசராந் துங்கற்கு-மங்களம் 
2565
போதந் திகழ்பர நாதந் தனில்நின்ற
நீதராஞ் சண்முக நாதற்கு -மங்களம்