2581
- ) 
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
  அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே

அடியனேன் மனத்தகத் தெழுந்த
இருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே

ஏழையேன் நின்றனைப் பாடும்
தெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே

சிந்தைநைந் துலகிடை மயங்கும்
மருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே

மதிநதி வளர்சடை மணியே   
2582
மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை

வாழ்விக்க வேண்டுவல் போற்றி
அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்

கருளமு தருளுக போற்றி
பணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே

பாடுதல் வேண்டும்நான் போற்றி
தணிவில்பே ரொளியே போற்றிஎன் தன்னைத்

தாங்குக போற்றிநின் பதமே  
2583
நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி

நீறுபூத் தொளிர்குளிர் நெருப்பே
நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி

நெற்றியங் கண்கொளும் நிறைவே
நின்வச மாதல் வேண்டும்நான் போற்றி

நெடியமால் புகழ்தனி நிலையே
நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி

நெடுஞ்சடை முடித்தயா நிதியே  
2584
நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்

நெறிதரு நிமலமே போற்றி
மதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை

வாழ்வித்த வள்ளலே போற்றி
விதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான

வியன்நெறி விளக்கமே போற்றி
பதிபசு பதியே போற்றி நின்பாதம்

பாடஎற் கருளுக போற்றி  
2585
போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்

புரிதவக் காட்சியே போற்றி
போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்

புகல்சிவ போகமே போற்றி
போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்

பூரண வெள்ளமே போற்றி
போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே

போற்றிநின் சேவடிப் போதே