2601
- ) 

 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
  பரசிவா னந்தபரி பூரண சதானந்த பாவனா தீதமுக்த

பரமகை வல்யசை தன்யநர் களபூத பௌதிகா தாரயுக்த
சர்வமங் களசச்சி தானந்த சௌபாக்ய சாம்பவ விநாசரகித

சாஸ்வத புராதர நிராதர அபேதவா சாமகோ சரநிரூபா
துருவகரு ணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வநிமல

சுத்தநித் தியபரோ க்hநுபவ அபரோக் சோமசே கரசொரூபா
அரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட் டணுவளவும் அறிகிலாத

அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே  
2602
ஸோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய சுத்தமணியே அரியநல்

துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால் துலங்குமணி யேஉயர்ந்த
ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி தானந்த மானமணியே

சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர் சமரச சுபாவமணியே
நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர் நினைவிலமர் கடவுண்மணியே

நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத நித்யஆ னந்தமணியே
ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக் கன்புதவும் இன்பமணியே

அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே  
2603
தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின் செய்யுமதி வேணியாட

செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி சிறந்தாட வேகரத்தில்
மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக வானாதி தேவராட

மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட மால்பிரம னாடஉண்மை
ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம் நங்கைசிவ காமியாட

நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட நந்திமறை யோர்களாட
ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர் ஆறுமுக னாடமகிழ்வாய்

அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே  
2604
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண் போக்கிநன் னாளைமடவார்

போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின் பொன்னடிக் கானபணியைச்
செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில் செய்வதறி யேன்ஏழையேன்

சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல சிந்தைதனில் எண்ணிடாயோ
மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள வேண்டுமறை யாகமத்தின்

மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த மேதையர்கள் பரவிவாழ்த்தும்
ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர வம்புலியு மாடமுடிமேல்

அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே  
2605
(போதாரு நான்முகப்) புத்தேளி னாற்பெரிய பூமியிடை வந்துநமனாற்

போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர் போதிக்கும் உண்மைமொழியைக்
காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற் கற்றும்அறி வற்றிரண்டு

கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும் கடையனேன் உய்வதெந்நாள்
மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும் வள்ளலே உள்ளமுதலே

மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி யாண்டருள வேண்டும்அணிசீர்

அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே