2716
- ) 
 நேரிசை வெண்பா
 
  வந்திக்கும் மெய்யடியார் மாலற்ற ஓர்மனத்தில்
சந்திக்கும் எங்கள் சயம்புவே - பந்திக்கும்
வன்மலக்கட் டெல்லாம் வலிகெட் டறநினது
நின்மலக்கண் தண்ணருள்தான் நேர்  
2717
சங்கரா முக்கட் சயம்புவே தாழ்சடைமேல்
பொங்கராத் திங்கள் பொலிந்தோனே - வெங்கரா
வாய்நின்று பிள்ளை வரப்பாடும் வன்தொண்டர்க்
காய்நின்று சந்துரைத்த தார்  
2718
நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை
கோலச் சடைக்கணிந்த கோமளமே - ஞாலத்தில்
அந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது
சந்தோட மோநின் றனக்கு  
2719
நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை
தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்
அங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை
எங்ஙனம்என் றுள்ளம் எழும்  
2720
ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்
பாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து
வாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்
தாழ்த்தேன்என் செய்தேன் தவம்