2756
ஒழியாக் கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ
அழியாக் கருணைக் கடலேஎன் அரசே முறையோ முறையேயோ
பொழியாப் புயலே அனையார்பால் புகுவித் தனையே முறையேயோ
இழியாத் திரிதந் துழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ  
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2757
மதிஒளிர் கங்கைச் சடைப்பெருங் கருணை வள்ளலே தௌ;ளிய அமுதே
நிதிஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர்நிலைத்தவான் செல்வமும் மண்ணில்
பதிஒளிர் வாழ்க்கை மணிமுடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்
கதிஒளிர் நினது திருவருட் செல்வக் களிப்பையே கருதுகின் றனனே  
 கட்டளைக் கலித்துறை 
2758
வெள்ளங்கொண் டோ ங்கும் விரிசடை யாய்மிகு மேட்டினின்றும்
பள்ளங்கொண் டோ ங்கும் புனல்போல்நின் தண்ணருட் பண்புநல்லோர்
உள்ளங்கொண் டோ ங்கும் அவமே பருத்த ஒதிஅனையேன்
கள்ளங்கொண் டோ ங்கும் மனத்துறு மோஉறிற் காண்குவனே  
2759
ஐயாமுக் கண்கொண்ட ஆரமு தேஅரு ளார்பவள
மெய்யாமெய்ஞ் ஞான விளக்கே கருணை விளங்கவைத்த
மையார் மிடற்று மணியேஅன் றென்னை மகிழ்ந்ததந்தோ
பொய்யாஎன் செய்வல் அருளா யெனில்எங்குப் போதுவனே  
2760
நாரா யணன்திசை நான்முகன் ஆதியர் நண்ணிநின்று
பாரா யணஞ்செயப் பட்டநின் சேவடிப் பங்கயமேல்
சீரா யணம்பெறப் பாடுந் திறம்ஓர் சிறிதும்இலேன்
ஆரா யணங்குற நின்றேன்பொன் மன்றத் தமர்ந்தவனே