2826
கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமா ரே - என்றன்
கற்பனைக்குட் படுவாரோ பாங்கிமாரே
2827
கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமா ரே - மூன்று
கண்ணுடையா ரென்பாரையோ பாங்கிமாரே 
2828
கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே - மனங்
கரையாரென் னளவிலே பாங்கிமாரே  
2829
கள்ளமொன்று மறியேனான் பாங்கிமா ரே - என்னைக்
கைவிடவுந் துணிவாரோ பாங்கிமாரே  
2830
கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமா ரே - இன்று
கைநழுவ விடுவாரோ பாங்கிமாரே