2831
கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமா ரே - என்றன்
கன்னியழித் தேயொளித்தார் பாங்கிமாரே  
2832
காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே - என்றன்
காதலைக்கண் டறிவாரோ பாங்கிமாரே  
2833
காவலையெல் லாங்கடந்து பாங்கிமா ரே - என்னைக்
கைகலந்த கள்ளரவர் பாங்கிமாரே  
2834
காணவிழைந் தேனவரைப் பாங்கிமா ரே - கொண்டு
காட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமாரே  
2835
கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே - நான்
கிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமாரே