2836
கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமா ரே - நான்
கேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமாரே  
2837
கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது
கேட்டுவரக் காணேனையோ பாங்கிமாரே  
2838
கீதவகை பாடிநின்றார் பாங்கிமா ரே - அது
கேட்டுமதி மயங்கினேன் பாங்கிமாரே  
2839
கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமா ரே - மனக்
கேண்மைகுறித் தாரேயன்று பாங்கிமாரே  
2840
கீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக்
கேயடிமை கொண்டாரன்று பாங்கிமாரே