2841
குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமா ரே - கொள்ளுங்
கொற்றவரென் கொழுநர்காண் பாங்கிமாரே  
2842
குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக்
கொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமாரே  
2843
குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே - உள்ள
குறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமாரே   
2844
கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமா ரே - நங்கள்
குடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமாரே  
2845
கூறரிய பதங்கண்டு பாங்கிமா ரே - களி
கொண்டுநிற்க விழைந்தேனான் பாங்கிமாரே