2916
தூய்மையிலா வன்மொழியாற் சொன்னவெலா மெண்ணுதொறும்
வாய்மையிலே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா  
2917
கலிக்கின்ற வஞ்சகக் கருத்தைக் கருதி
வலிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா   
2918
நீட்டுகின்ற வஞ்ச நெடுஞ்சொலெலா நெஞ்சகத்தே
மாட்டுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா  
2919
பொருந்துகின்ற வஞ்சப் புதுமையெண்ணி யையோ
வருந்துகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா  
2920
வெருவிக்கும் வஞ்ச வெறுஞ்சொலெலாம் நெஞ்சில்
வருவிக்குந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா