2926
வஞ்சனையா லஞ்சாது வன்சொல் புகன்றவெலாம்
நஞ்சனையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா  
2927
கோணநெடு நெஞ்சக் குரங்காற் குதித்தவெலாம்
நாணமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா எ  
2928
ஊனமிலா நின்னை யுரைத்தகொடுஞ் சொல்லையெலாம்
ஞானமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா  
2929
எற்றே மதியிலியே னெண்ணா துரைத்ததனைச்
சற்றே நினைத்திடினுந் தாது கலங்குதடா  
2930
இனியேது செய்வே னிகழ்ந்துரைத்த சொல்லைத்
தனியே நினைத்திடினுந் தாது கலங்குதடா