2931
நாயனையே னெண்ணாம னலங்கியவன் சொல்லையெலாம்
தாயனையா யெண்ணுதொறுந் தாது கலங்குதடா  
2932
நிற்குருகா வஞ்ச நினைவால் நினைத்தவெலாஞ்
சற்குருவே யெண்ணுதொறுந் தாது கலங்குதடா  
2933
வெந்நரகில் வீழும் விளைவால் விளம்பியதை
என்னரசே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா  
2934
நன்கறியேன் வாளா நவின்ற நவையனைத்தும்
என்குருவே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா எ  
2935
ஆவ தறியா தடியே னிகழ்ந்தகொடும்
பாவ நினைக்கிற் பகீரென் றலைக்குதடா