2976
) 
 தாழிசை
 
 தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத்
தான்கொண்ட நாயக ராரே டி
அண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய்
ஐய ரமுத ரழகரடி 
 செங்கயற் கண்மட மங்கைநல் லாய் - உன்றன்
செங்கை பிடித்தவ ராரே டி
அங்கய லாரன்று பொன்னம்ப லத்தெங்கள்
ஆனந்தத் தாண்டவ ராஜனடி 
 கன்னற் சுவைமொழி மின்னிடை யாய் - உன்னைக்
கன்னி யழித்தவ ராரே டி
உன்னற் கரியபொன் னம்பலத் தாடல்செய்
உத்தம ரானந்த சித்தரடி 
 தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்
சேர்ந்து கலந்தவ ராரே டி
தாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்
தாண்டவஞ் செய்யுஞ் சதுரரடி 
 அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை
அன்பிற் புணர்ந்தவ ராரே டி
துன்ன லுடையின ரம்பலத் தேநின்ற
தூய திருநட ராயரடி 
 காரள கப்பெண் சிகாமணி யே - உன்றன் 
கற்பை யழித்தவ ராரே டி
பேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற
பித்தர் பரானந்த நித்தரடி 
திருச்சிற்றம்பலம்
----------------------------

--------------------------------------------------------------------------------

 தெண்டனிட்டேன் (
2977
- ) 
 சிந்து
 
 பல்லவி
 
 தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
தெண்டனிட்டே னென்று சொல்லடி 
 பல்லவி எடுப்பு
 
2978
தண்டலை விளங்குந் தில்லைத் தலத்திற்பொன் னம்பலத்தே
கண்டவர் மயங்கவேடங் கட்டியாடு கின்றவர்க்கு தெண்ட 
 கண்ணிகள்
 
2979
கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே
கனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட
அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
ஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட 
2980
இழிந்தாலு நம்மையிங்கே யேற்றுவா ரென்றடைந்தால்
ஏற்றுவார் போலேபின்னு மிழியவைப் பாருக்குப்
பழந்தான் நழுவிமெல்லப் பாலில் விழுந்ததென்னப்
பசப்பிப் பசப்பியன்பர் பண்டம் பறிப்பவர்க்கு தெண்ட