2986
- ) 
 சிந்து
 
 பல்லவி
 
  இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்
என்ன வர்மஞ் சொலையா 
 
 கண்ணிகள்
 
2987
அன்னம் பாலிக்குந்தில்லைப் பொன்னம் பலத்திலாடும்
அரசே - அரசே - அரசேயென் றலறவும் இன்னந்  
2988
சின்னஞ் சிறுவயதி லென்னை யடிமைகொண்ட
சிவமே - சிவமே - சிவமேயென் றலறவும் இன்னந்  
2989
முன்னம் பிழைபொறுத்தா யின்னம் பொறாதுவிட்டால்
முறையோ - முறையோ - முறையோவென் றலறவும் இன்னந்  
2990
தன்னை யறியாவென்னை யின்ன லுறச்செய்தாயே
தகுமோ - தகுமோ - தகுமோவென் றலறவும் இன்னந்