3006
) 
 கலிநிலைத்துறை ()
 
  சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார்
வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ
மந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம்
அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே  
  நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே  
திருச்சிற்றம்பலம்
___________________________________________________________________________

 கலிச்சந்த விருத்தம் தொ வே ,  ச மு க கலிநிலைத்துறை ஆ பா
---------------------

--------------------------------------------------------------------------------

 தலைமகளின் முன்ன முடிபு (
3007
- ) 
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
  வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்

விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய

கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி

மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று

சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே   
3008
மிகுத்துரைத்தேன் பிழைகளெலாம் சகித்தருளல் வேண்டும்

மெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய்
தொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத்

துரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே
பகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும்

பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்
வகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி

மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே   
3009
முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே

முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்
என்னவனே என்துணையே என்உறவே என்னை

ஈன்றவனே என்தாயே என்குருவே எனது
மன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்

மாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே
அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே

ஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே    
3010
சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்

தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே
புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே

பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்
இனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்

எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே
கனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே

கருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே