3026
தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே
தலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன்

இனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே

என்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை
அனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ

அவன்அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ
துனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில்

சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ 
3027
) 
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
  மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்
கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே()  

திருச்சிற்றம்பலம்
____________________________________________________________________________

 இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகமொன்றின் தொடக்கத்தில் பெருமான் இப்பாடலை எழுதியருளியுள்ளார் திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரான் அடிகள் பதிப்பு, பக்கம்  காண்க
------- 
--------------------------------------------------------------------------------

 அருள்நிலை விளக்கம் (
3028
) 
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
  மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி கின்றேன்ஓர் புதுமை அன்றே
செய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்
நெய்விளக்கே போன்றொருதண் ணீர்விளக்கும் எரிந்ததுசந் நிதியின் முன்னே()  

3029
அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே

ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே
கற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே

கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே
வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே

வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே
பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்

பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே   
3030
நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே

நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே

கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே

பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே

குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே