3096
மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்

முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி
யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே

எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே
தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே

சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன்
பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம்

புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே   
3097
கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்

கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து

மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து
நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே

நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்

அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே   
3098
கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த

கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து

மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே

பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா

னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே   
3099
அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்

அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்

சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே

மகிழ்ந்துதிரு அருள்வழியே வாழ்கஎன உரைத்தாய்
இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்

எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே   
3100
முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி

முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்

கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே

பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்

தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே