3116
பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்

பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க

வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்

செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்

திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே   
3117
என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி

என்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித்
தன்அறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள் வருந்தத்

தனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி
முன்னறிவில் எனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்த

முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன்
மன்அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப

வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே   
3118
பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத

பரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த
வரயோகர் வியப்பஅடி யேன்இருக்கும் இடத்தே

வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
திரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது

செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன்
உரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில்

உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே   
3119
சொன்னிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித்

துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து
கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம்

கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து
என்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி

என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய்
தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன்

தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே   
3120
முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின்

முடிகள்முடித் துரைக்கின்ற அடிகள்மிக வருந்தப்
பத்திஒன்றும் இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப்

படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து
சித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம்

திறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து
சத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன்

தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே