3126
ஆறாறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்

அறிவிக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த
வீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில்

விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும்
பேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில்

பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச்
சோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில்

சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே   
3127
கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக்
காட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும்
ஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன்
றுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத்
துருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து

துணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து
வெருவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய்

வித்தகநின் திருவருளை வியக்கமுடி யாதே   
3128
ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்

கதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்
சோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று

சூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த
வீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி

விரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்
பாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்

பண்பைஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே   
3129
இருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்

எடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே
பொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப்

பொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து
மருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து

வண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன்
அருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில்

ஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே   
3130
உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி

உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்

சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து

பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்

நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே