3136
இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்

எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்

உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்
திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்

தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே

குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே   
3137
தம்மடியார் வருந்திலது சகியாதக் கணத்தே

சார்ந்துவருத் தங்களெலாந் தயவினொடு தவிர்த்தே
எம்மடியார் என்றுகொளும் இணையடிகள் வருந்த

இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்இடத் தடைந்து
கம்மடியா()க் கதவுபெருங் காப்பவிழப் புரிந்து

கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
நம்மடியான் என்றெனையுந் திருவுளத்தே அடைத்தாய்

நடம்புரியும் நாயகநின் நற்கருணை வியப்பே   

 கம்மடியர் - தொவே - அடிகளார் எழுத்து 
இவ் விரு வகையாகக் கொள்ளக் கிடக்கிறது
பொருத்தமான பொருள் தருவதைக் கொள்க ஆபா 
3138
உம்பருக்குங் கிடைப்பரிதாம் மணிமன்றில் பூத

உருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே
செம்பருக்கைக் கல்லுறுத்தத் தெருவில்நடந் திரவில்

தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து
வம்பருக்குப் பெறலரிதாம் ஒருபொருள்என் கரத்தே

மகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய்
இம்பருக்கோ அம்பருக்கும் இதுவியப்பாம் எங்கள்
இறைவநின தருட்பெருமை இசைப்பதெவன் அணிந்தே   
3139
உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்

உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
துருவமுடி யாப்பரம துரியநடு விருந்த

சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்

சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை

மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே   
3140
பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்

பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே
பொக்கமில்அப் பழந்தனிலே தௌ;ளமுதங் கலந்தாற்

போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த
மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்

வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து
ஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்

றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே