3166
முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த

முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ

என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
சித்தேஎன் பவரும்ஒரு சத்தேஎன் பவரும்

தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்

ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே   
3167
தௌ;ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்

சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்
உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்

உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே
கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க்

கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்

கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே   
3168
கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக்

கருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து
மண்விருப்பங் கொளுமணப்பூ மகிழ்ந்தெனக்குக் கொடுத்து

வாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன்
பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்

பெண்விருப்பம் பெறஇருவர் பெரியர்()உளங் களிப்பப்
பண்விருப்பந் தருமறைகள் பலபலநின் றேத்தப்

பரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே   

 இருவர் பெரியர் - பதஞ்சலி, வியாக்கிரபாதர் சமுக 
3169
உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம்

ஒன்றெடுத்து மெய்யன்பர் உவக்கஎழுந் தருளி
முன்னுதற்கோர் அணுத்துணையுந் தரமில்லாச் சிறியேன்

முகநோக்கிச் செழுமணப்பூ முகமலர்ந்து கொடுத்தாய்
துன்னுதற்கிங் கரிதாம்நின் திருஉள்ளக் குறிப்பைத்

துணிந்தறியேன் என்னினும்ஓர் துணிவின்உவக் கின்றேன்
பொன்னுதற்குத் திலகமெனுஞ் சிவகாம வல்லிப்

பூவைஒரு புறங்களிப்பப் பொதுநடஞ்செய் பொருளே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 ஆனந்த மாலை 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
3170
திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென்

சிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள்
தெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை

சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
பொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து

போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே
பருவரல்அற் றடிச்சிறியேன் பெருவரம்பெற் றுனையே

பாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே