3171
சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்

தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள்
செண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள்

சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
பண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய்

பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து
எண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும்

எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே   
3172
அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்

அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி
தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்

சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்

மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை
இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்

எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே   
3173
மாசுடையேன் பிழைஅனைத்தும் பொறுத்துவர மளித்தாள்

மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
தேசுடையாள் ஆனந்தத் தௌ;ளமுத வடிவாள்

சிவகாம வல்லிபெருந் தேவே஢உளங் களிப்பக்
காசுடைய பவக்கோடைக் கொருநிழலாம் பொதுவில்

கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்

அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே   
3174
பொய்யாத வரம்எனக்குப் புரிந்தபரம் பரைவான்

பூதமுதற் கருவியெலாம் பூட்டுவிக்குந் திறத்தாள்
செய்யாளுங் கலையவளும் உருத்திரையும் வணங்கும்

சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
கையாத இன்பநடங் கனகமணிப் பொதுவில்

களித்தியற்றுந் துரையேநின் கருணையைநான் கருதி
நையாத வண்ணமெலாம் பாடுகின்றேன் பருவம்

நண்ணியபுண் ணியரெல்லாம் நயந்துமகிழ்ந் திடவே   
3175
அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்

அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்
திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்

சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்

மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்
புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்

புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே