3206
அப்பாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அருந்தவர்கள் விரும்பிமிக வருந்திஉளம் முயன்று
இப்பாரில் இருந்திடவும் அவர்க்கருளான் மருளால்

இவ்வுலக நடைவிழைந்து வௌ;வினையே புரிந்து
எப்பாலும் இழிந்துமனத் திச்சைபுரி கின்றேன்

எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி அடைந்து
தப்பாத ஒளிவண்ணந் தந்தென்னை அளித்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே   
3207
அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி
எம்மானென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால்

இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே
மைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும்

வஞ்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ்ந் தெனக்கும்
தம்மான முறவியந்து சம்மான மளித்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே   
3208
ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி
ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை

உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று
தீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான்

சிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச்
சாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே   
3209
அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைந்து கரைந்து
கண்ணார நீர்பெருக்கி வருந்தவும்அங் கருளான்

கடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும்
எண்ணாத கொடும்பாவிப் புலைமனத்துச் சிறியேன்

எனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து
தண்ணார்வெண் மதியமுதம் உணவொன்று கொடுத்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே   
3210
ஐயாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அருமைஅறிந் தருள்விரும்பி உரிமைபல இயற்றிப்
பொய்யாத நிலைநின்ற புண்ணியர்கள் இருக்கப்

புலைமனத்துச் சிறியேன்ஓர் புல்லுநிகர் இல்லேன்
செய்யாத சிறுதொழிலே செய்துழலுங் கடையேன்

செருக்குடையேன் எனைத்தனது திருவுளத்தில் அடைத்தே
சையாதி அந்தநடுக் காட்டிஒன்று கொடுத்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே