3216
செய்வகைநன் கறியாதே திருவருளோ டூடிச்

சிலபுகன்றேன் அறிவறியாச் சிறியரினுஞ் சிறியேன்
பொய்வகையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்

புண்ணியனே மதியணிந்த புரிசடையாய் விடையாய்
மெய்வகையோர் விழித்திருப்ப விரும்பிஎனை அன்றே

மிகவலிந்தாட் கொண்டருளி வினைதவிர்த்த விமலா
ஐவகைய கடவுளரும் அந்தணரும் பரவ

ஆனந்தத் திருநடஞ்செய் அம்பலத்தெம் அரசே   
3217
நிலைநாடி அறியாதே நின்னருளோ டூடி

நீர்மையல புகன்றேன்நன் னெறிஒழுகாக் கடையேன்
புலைநாயேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்

பூதகணஞ் சூழநடம் புரிகின்ற புனிதா
கலைநாடு மதியணிந்த கனபவளச் சடையாய்

கருத்தறியாக் காலையிலே கருணைஅளித் தவனே
தலைஞான முனிவர்கள்தந் தலைமீது விளங்கும்

தாளுடையாய் ஆளுடைய சற்குருஎன் அரசே   
3218
கலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்

கரிசுபுகன் றேன்கவலைக் கடற்புணைஎன் றுணரேன்
புலைக்கடையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்

போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி
தலைக்கடைவாய் அன்றிரவில் தாள்மலரொன் றமர்த்தித்

தனிப்பொருள்என் கையிலளித்த தயவுடைய பெருமான்
கொலைக்கடையார்க் கெய்தரிய குணமலையே பொதுவில்

கூத்தாடிக் கொண்டுலகைக் காத்தாளுங் குருவே   
3219
நின்புகழ்நன் கறியாதே நின்னருளோ டூடி

நெறியலவே புகன்றேன்நன் னிலைவிரும்பி நில்லேன்
புன்புலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்

பூரணசிற் சிவனேமெய்ப் பொருள்அருளும் புனிதா
என்புடைஅந் நாளிரவில் எழுந்தருளி அளித்த

என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே
அன்புடையார் இன்படையும் அழகியஅம் பலத்தே

ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே   
3220
துலைக்கொடிநன் கறியோதே துணைஅருளோ டூடித்

துரிசுபுகன் றேன்கருணைப் பரிசுபுகன் றறியேன்
புலைக்கொடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்

பொங்குதிரைக் கங்கைமதி தங்கியசெஞ் சடையாய்
மலைக்கொடிஎன் அம்மைஅருள் மாதுசிவ காம

வல்லிமறை வல்லிதுதி சொல்லிநின்று காணக்
கலைக்கொடிநன் குணர்முனிவர் கண்டுபுகழ்ந் தேத்தக்

கனகசபை தனில்நடிக்குங் காரணசற் குருவே