3226
உலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும் 

உற்றிலாச் சிறியஓர் பருவத்
திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் 

ஏற்றவுந் தரமிலா மையினான்
விலகுறங் காலத் தடிக்கடி ஏற 

விடுத்துப்பின் விலகுறா தளித்தாய்
திலகநற் காழி ஞானசம் பந்தத் 

தௌ;ளமு தாஞ்சிவ குருவே
 உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும் 

உற்றிலாச் சிறியஓர் பருவத்
திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் 

ஏற்றவுந் தரமிலா மையினான்
விலகுறுங் காலத் தடிக்கடி ஏற 

விடுத்துப்பின் விலகுறா வண்ணம்
அலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன் 

அருட்கடற் பெருமைஎன் புகல்வேன்
திலகநற் காழி ஞாநசம் பந்தத் 

தௌ;ளமு தாஞ்சிவ குருவே 
3227
உயிர்அனு பவம்உற் றிடில்அத னிடத்தே 

ஓங்கருள் அனுபவம் உறும்அச்
செயிரில்நல் அனுப வத்திலே சுத்த 

சிவஅனு பவம்உறும் என்றாய்
பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப் 

பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான 

பந்தன்என் றோங்குசற் குருவே   
3228
தத்துவநிலைகள் தனித்தனி ஏறித் 

தனிப்பர நாதமாந் தலத்தே
ஒத்ததன் மயமாம் நின்னைநீ இன்றி 

உற்றிடல் உயிரனு பவம்என்
றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே 

இருந்தவா றளித்தனை அன்றோ
சித்தநற் காழி ஞானசம் பந்தச் 

செல்வமே எனதுசற் குருவே   
3229
தனிப்பர நாத வெளியின்மேல் நினது 

தன்மயந் தன்மயம் ஆக்கிப்
பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் 

பரம்பரத் துட்புற மாகி
இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் 

இருந்ததே அருளனு பவம்என்
றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் 

என்னும்என் சற்குரு மணியே   
3230
உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் 

உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய்

நள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய் 

நவிற்றருந் தானதாய் இன்ன
விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் 

வெறுவெளி சிவஅனு பவம்என்
றுள்ளுற அளித்த ஞானசம் பந்த 

உத்தம சுத்தசற் குருவே