3256
பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்எனத்
தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 ஆளுடைய அடிகள் அருண்மாலை 
தரவு கொச்சகக் கலிப்பா
3257
தேசகத்தில் இனிக்கின்ற தௌ;ளமுதே மாணிக்க
வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே   
3258
கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்ததனி
உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே   
3259
மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க
அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர்
இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே   
3260
உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற
திருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த
குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ
இருஎன்ற தனிஅகவல்  எண்ணம்எனக் கியம்புதியே