3341
எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள்
எல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்
வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே
நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே  
3342
கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 ஆன்ம விசாரத் தழுங்கல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3343
போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் 

பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் 

இச்சையால் எருதுநோ வறியாக்
காகமே எனப்போய்ப் பிறர்தமை வருத்திக்

களித்த பாதகத்தொழிற் கடையேன்
மோகமே உடையேன் என்னினும் எந்தாய் 

முனிந்திடேல் காத்தருள் எனையே   
3344
பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்

புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த 

பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்

அன்பினால் அடுத்தவர் கரங்கள்
கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன் எனினும் 

கோபியேல் காத்தருள் எனையே   
3345
விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் 

மிகஇனிக் கின்றநின் புகழ்கள்
வழுத்தலை அறியேன் மக்களே மனையே 

வாழ்க்கையே துணைஎன மதித்துக்
கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன் 

கொக்கனேன் செக்கினைப் பலகால்
இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன் 

என்னினும் காத்தருள் எனையே