3411
திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே 

திகழ்கின்ற தெய்வமே அன்பர்
பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் 

பண்பனே பரையிடப் பாகா
பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற 

பேரருட் சோதியே எனக்கே
உரியநல் தந்தை வள்ளலே அடியேன் 

உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே   
3412
தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் 

தலைவனே திருச்சிற்றம் பலத்தே
வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப 

வயங்கிய மெய்யின்ப வாழ்வே
ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் 

உவப்புற இனிக்குந்தௌ; ளமுதே
ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் 

நவில்கின்றேன் கேட்டருள் இதுவே   
3413
என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை 

எழுமையும் காத்தருள் இறைவா
என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே 

எனக்கறி வுணர்த்திய குருவே
என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே 

எனக்கருள் புரிந்தமெய் இன்பே
என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன் 

இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே   
3414
கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே 

கனிந்தசிற் றம்பலக் கனியே
வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி 

வயங்கிய வள்ளலே அன்பர்
தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் 

தெய்வமே திருவருட் சிவமே
தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே 

தரித்தருள் திருச்செவிக் கிதுவே   
3415
என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த 

இறைவனே திருச்சிற்றம் பலத்தே
என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங் 

கீகுதும் என்றஎன் குருவே
என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி 

எனக்குளே விளங்குபே ரொளியே
என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங் 

கேற்றருள் திருச்செவிக் கிதுவே