3451
இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ 

டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே
வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம் 

மனம்மிக நடுங்கினேன் அறிவாய்
சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத் 

தமியனேன் மீளவுங் கண்டே
நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம் 

நொந்ததும் ஐயநீ அறிவாய்   
3452
முனித்தவௌ; வினையோ நின்னருட் செயலோ 

தெரிந்திலேன் மோகமே லின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் 

ஒருத்தியைக் கைதொடச் சார்ந்தேன்
குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் 

கலப்பிலேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் 

பகர்வதென் எந்தைநீ அறிவாய்   
3453
பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய் 

பண்பனே நண்பனே உலகில்
ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால் 

ஒருசில வாதங்கள் புரிந்தே
மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின் 

வள்ளல்உன் அருளினால் அறிந்தே
விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம் 

மெய்யனே நீஅறிந் ததுவே  
3454
அருளினை அளிக்கும் அப்பனே உலகில் 

அன்புளார் வலிந்தெனக் கீந்த
பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம் 

புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்
மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து 

மனமிக இளைத்ததும் பொருளால்
இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும் 

எந்தைநின் திருவுளம் அறியும்   
3455
பொருளிலே உலகம் இருப்பதா தலினால் 

புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
மருவினால் பொருளின் இச்சையால் பலகால் 

மருவுகின் றான்எனக் கருதி
வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் 

மேவிலேன் எந்தைநீ அறிவாய்
ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம்

உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்