3561
ஆயகால் இருந்தும் நடந்திட வலியில்

லாமையால் அழுங்குவார் எனஉண்
மேயகால் இருந்தும் திருவருள் உறஓர்

விருப்பிலா மையின்மிக மெலிந்தேன்
தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய்

சித்தனே சத்திய சபைக்கு
நாயகா உயிர்க்கு நயகா உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே  
3562
அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி

ஆடிய சிறுபரு வத்தே
குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட

குணப்பெருங் குன்றமே குருவே
செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம்

சிந்தையில் இனிக்கின்ற தேனே
நற்றக வுடைய நாதனே உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே   
3563
படம்புரி பாம்பிற் கொடியனேன் கொடிய

பாவியிற் பாவியேன் தீமைக்
கிடம்புரி மனத்தேன் இரக்கம்ஒன் றில்லேன்

என்னினும் துணைஎந்த விதத்தும்
திடம்புரி நின்பொன் அடித்துணை எனவே

சிந்தனை செய்திருக் கின்றேன்
நடம்புரி கருணை நாயகா உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே   
3564
படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல்

படித்தவர் தங்களைப் பார்த்து
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம

நோக்கினேன் பொய்யர்தம் உறவு
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப்

பெரியரில் பெரியர்போல் பேசி
நடித்தனன் எனினும் நின்னடித் துணையே

நம்பினேன் கைவிடேல் எனையே   
3565
பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த

பாவியேன் சாவியே போன
புஞ்செயே அனையேன் புழுத்தலைப் புலையேன்

பொய்யெலாம் பூரித்த வஞ்ச
நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில்

நெடியனேன் கொடியனேன் காம
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே