3591
பாழுது விடிந்த தினிச்சிறிதும் 

பொறுத்து முடியேன் எனநின்றே 
அழுது விழிகள் நீர்துளும்பக் 

கூவிக் கூவி அயர்கின்றேன் 
பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள் 

பட்ட திலையோ பலகாலும் 
உழுது களைத்த மாடனையேன் 

துணைவே றறியேன் உடையானே  
 பலநாளும் - ச மு க பதிப்பு 
3592
உடையாய் திருஅம் பலத்தாடல் 

ஒருவா ஒருவா உலவாத 
கொடையாய் எனநான் நின்றனையே 

கூவிக் கூவி அயர்கின்றேன் 
தடையா யினதீர்த் தருளாதே 

தாழ்க்கில் அழகோ புலைநாயிற் 
கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம் 

மதமோ கருணைக் கருத்தினுக்கே  
3593
கருணைக் கருத்து மலர்ந்தெனது 

கலக்க மனைத்துந் தவிர்த்தேஇத் 
தருணத் தருளா விடில்அடியேன் 

தரியேன் தளர்வேன் தளர்வதுதான் 
அருணச் சுடரே நின்னருளுக் 

கழகோ அழகென் றிருப்பாயேல் 
தெருணற் பதஞ்சார் அன்பரெலாம் 

சிரிப்பார் நானும் திகைப்பேனே  
 அடியரெலாம் - முதற்பதிப்பு, பொ சு, ச மு க, பி இரா 
3594
திகைப்பார் திகைக்க நான்சிறிதும் 

திகையேன் எனநின் திருவடிக்கே 
வகைப்பா மாலை சூட்டுகின்றேன் 

மற்றொன் றறியேன் சிறியேற்குத் 
தகைப்பா ரிடைஇத் தருணத்தே 

தாராய் எனிலோ பிறரெல்லாம் 
நகைப்பார் நகைக்க உடம்பினைவைத் 

திருத்தல் அழகோ நாயகனே  
3595
நாயிற் கடையேன் கலக்கமெலாம் 

தவிர்த்து நினது நல்லருளை 
ஈயிற் கருணைப் பெருங்கடலே 

என்னே கெடுவ தியற்கையிலே 
தாயிற் பெரிதும் தயவுடையான் 

குற்றம் புரிந்தோன் தன்னையும்ஓர் 
சேயிற் கருதி அணைத்தான்என் 

றுரைப்பா ருனைத்தான் தெரிந்தோரே  
 தாயிற் பெரிய - முதற்பதிப்பு, பொ சு, பி இரா