3606
வருவாய் என்கண் மணிநீஎன் 

மனத்திற் குறித்த வண்ணமெலாம் 
தருவாய் தருணம் இதுவேமெய்த் 

தலைவா ஞான சபாபதியே 
உருவாய் சிறிது தாழ்க்கில்உயிர் 

ஒருவும் உரைத்தேன் என்னுடைவாய் 
இருவாய் அலநின் திருவடிப்பாட் 

டிசைக்கும் ஒருவாய் இசைத்தேனே   
  ஒருவா - ச மு க  
3607
தேனே திருச்சிற் றம்பலத்தில் 

தௌ;ளா ரமுதே சிவஞான 
வானே ஞான சித்தசிகா 

மணியே என்கண் மணியேஎன் 
ஊனே புகுந்தென் உளங்கலந்த 

உடையாய் அடியேன் உவந்திடநீ 
தானே மகிழ்ந்து தந்தாய்இத் 

தருணம் கைம்மா றறியேனே   
3608
அறியேன் சிறியேன் செய்தபிழை 

அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக் 
குறியே குணமே பெறஎன்னைக் 

குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க 
நெறியே விளங்க எனைக்கலந்து 

நிறைந்தாய் நின்னை ஒருகணமும் 
பிறியேன் பிறியேன் இறவாமை 

பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே    
3609
சுகமே நிரம்பப் பெருங்கருணைத் 

தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி 
அகமே விளங்கத் திருஅருளார் 

அமுதம் அளித்தே அணைத்தருளி 
முகமே மலர்த்திச் சித்திநிலை 

முழுதும் கொடுத்து மூவாமல் 
சகமேல் இருக்கப் புரிந்தாயே 

தாயே என்னைத் தந்தாயே  
  சகமே - முதற்பதிப்பு, பொ சு, சமுக 
3610
தந்தாய் இன்றும் தருகின்றாய் 

தருவாய் மேலுந் தனித்தலைமை 
எந்தாய் நினது பெருங்கருணை 

என்என் றுரைப்பேன் இவ்வுலகில் 
சிந்தா குலந்தீர்த் தருள்எனநான் 

சிறிதே கூவு முன்என்பால் 
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் 

எனது பொழுது வான்பொழுதே    

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 அபயம் இடுதல் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்