3831
களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த 

கற்பகத் தீஞ்சுவைக் கனியே 
வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே 

விளங்கும்ஓர் விளக்கமே எனக்கே 
ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில் 

ஒருவனே இனிப்பிரி வாற்றேன் 
புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம் 

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே    

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 சிவயோக நிலை 
நேரிசை வெண்பா
3832
மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே 
பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய 
நவநேய மாக்கும் நடராச னேயெஞ் 
சிவனே கதவைத் திற    
3833
இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே 
நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே 
கோவே எனது குருவே எனையாண்ட 
தேவே கதவைத் திற    
3834
சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க 
நாகா திபர்சூழ் நடராசா - ஏகா 
பவனே பரனே பராபரனே எங்கள் 
சிவனே கதவைத் திற    
3835
அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி 
மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந் 
தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள் 
சிவனே கதவைத் திற