3841
சோதிமலை மேல்வீட்டில் தூய திருஅமுதம் 
மேதினிமேல் நான்உண்ண வேண்டினேன் - ஓதரிய 
ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான 
தேகா கதவைத் திற    

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 பெற்ற பேற்றினை வியத்தல் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3842
சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே 

திகழ்தனித் தந்தையே நின்பால் 
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணை 

செய்தருள் செய்திடத் தாழ்க்கில் 
யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன் 

யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன் 
போரிட முடியா தினித்துய ரொடுநான் 

பொறுக்கலேன் அருள்கஇப் போதே   
  சேரிடம் அறிந்து சேர் - ஆத்திசூடி  
3843
போதுதான் விரைந்து போகின்ற தருள்நீ 

புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ 
யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன் 

யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன் 
தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத் 

திருவுளத் தடைத்திடு வாயேல் 
ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ 

என்னுயிர்த் தந்தைநீ அலையோ    
3844
தந்தைநீ அலையோ தனயன்நான் அலனோ 

தமியனேன் தளர்ந்துளங் கலங்கி 
எந்தையே குருவே இறைவனே முறையோ 

என்றுநின் றோலிடு கின்றேன் 
சிந்தையே அறியார் போன்றிருந் தனையேல் 

சிறியனேன் என்செய்கேன் ஐயோ 
சந்தையே புகுந்த நாயினில் கடையேன் 

தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே    
3845
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் 

என்பிழை பொறுப்பவர் யாரே 
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே 

பாவியேன் பிழைபொறுத் திலையேல் 
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி 

உடம்பைவைத் துலாவவும் படுமோ 
சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம் 

தெய்வத்துக் கடாதவன் என்றே