3926
அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால் 

அரன்மயேச் சுரன்சதா சிவன்வான் 
படர்தரு விந்து பிரணவப் பிரமம் 

பரைபரம் பரன்எனும் இவர்கள் 
சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும் 

துணையடிப் பாதுகைப் புறத்தே 
இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே 

ஏத்துவன் திருவடி நிலையே    
3927
இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால் 

பிரமன்ஈ சானனே முதலாம் 
மகத்துழல் சமய வானவர் மன்றின் 

மலரடிப் பாதுகைப் புறத்தும் 
புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய 

புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல் 
செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில் 

தெரிந்தனன் திருவடி நிலையே    
3928
பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம் 

போந்தவான் முடியதாங் கதன்மேல் 
மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா 

வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல் 
என்வணச் சோதிக் கொடிபர நாதாந் 

தத்திலே இலங்கிய ததன்மேல் 
தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத் 

தழுவினன் திருவடி நிலையே    
3929
மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான் 

மற்றவற் றுட்புறங் கீழ்மேல் 
அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின் 

அமைந்தன சத்திகள் அவற்றின் 
கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும் 

கருதுரு முதலிய விளங்க 
நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று 

நவின்றனர் திருவடி நிலையே    
3930
தொகையள விவைஎன் றறிவரும் பகுதித் 

தொல்லையின் எல்லையும் அவற்றின் 
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே 

மன்னிஎங் கணும்இரு பாற்குத் 
தகையுறு முதலா வணங்கடை யாகத் 

தயங்கமற் றதுவது கருவிச் 
சிகையுற உபயம் எனமன்றில் ஆடும் 

என்பரால் திருவடி நிலையே