4041
பொன்னொப்ப தாம்ஒருநீ போற்றியசொன் மாலைஎன்றே 
என்னப்பன் என்சொல் இசைந்தணிந்தான் - தன்ஒப்பில் 
வல்லான் இசைந்ததுவே மாமாலை அற்புதம்ஈ 
தெல்லாம் திருவருட்சீ ரே    
4042
பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம் 
தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன் 
இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான 
மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து    
4043
நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றம்ஒன்றும் 
ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய் 
புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால் 
எண்ணியஎல் லாம்புரிகின் றேன்    
4044
எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க 
நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற 
உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த 
தௌ;ளமுதோ அம்பலவன் சீர்   
4045
ஆக்கி அளித்தல்முதல் ஆந்தொழில்ஓர் ஐந்தினையும் 
தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி 
எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம் 
கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ    

--------------------------------------------------------------------------------

 உத்தரஞானசிதம்பர மாலை 
கட்டளைக் கலித்துறை