4066
மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே 
தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன் 
பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே  
4067
        
நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன் 
ஏரார் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை இயம்புகவே  
4068
பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து 
சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன் 
அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளுகவே  
, இவ்வொன்றரைப் பாட்டும் பெருமான் கையெழுத்தில் 
இருப்பதாகக் கூறி ஆ பா இவற்றைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்துள்ளார் 
பொருளமைதி கருதி இவை ஈண்டு இப்பதிகத்துடன் சேர்க்கப்பெற்றன  

--------------------------------------------------------------------------------

 ஆன்ம தரிசனம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4069
திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன் 

திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான் 
உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி 

உளஎலாம் ஆங்கவன் தனக்கே 
தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு 

செயலிலேன் எனநினைத் திருந்தேன் 
அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே 

அடிக்கடி உரைப்பதென் நினக்கே  
4070
நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன் 

நினைப்பற நின்றபோ தெல்லாம் 
எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன் 

என்செயல் என்னஓர் செயலும் 
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் 

சிவன்செய லாம்எனப் புரிந்தேன் 
அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே 

அடிக்கடி உரைப்பதென் நினக்கே